
திரு. கவிமாமணிமயன் என்கின்ற ஞானகாந்தன் அவர்களை சந்தித்தது நினைவில் நிலைத்து நின்றவைகளுள் ஒன்று.
01/07/1928,செம்போடை கிராமம், நாகை மாவட்டத்தில் பிறந்தவர். பள்ளி இறுதி வகுப்பு [எஸ். எஸ். எல்.சி] தொடர்ந்து தஞ்சையில் ஆசிரியர் பயிற்சி, ஒவியம் டிப்ளமா, [Free hand outline model drawing higher]. செம்போடை, வேதாரண்யம், கத்திரிப்புலம், திருத்துறைப்பூண்டி பள்ளிகளில் பணி.
ஓவிய ஆசிரியர், தமிழாசிரியர், கோபாலபுரம் ஆண்கள் பள்ளி சென்னை.
ஆர்ட் டைரக்டர், நிறைய கம்பெனிகளில் விளம்பர ஒவியர்.
ஸ்ரீஆப்செட் என்ற பெயரில் அச்சக உரிமையாளர், ஜெயா பதிப்பக உரிமையாளர்.
உப்பு சத்யாகிரகத்தில் கலந்து கொண்டவர். கலாவல்லி, அமுதசுரபி, கோபுரதரிசனம் போன்ற நிறைய பத்திரிகைகளில் கட்டுரைகள், இவரது கவிதைகள் வெளியாகியுள்ளது.
முன்னாள் மத்திய அமைச்சர் டாக்டர் வீரப்ப மொய்லி எழுதிய ஸ்ரீராமாயணப் பெருந்தேடல் கவிதைகளில் இவரின் பங்கு உண்டு.
சர்வோதயத் தலைவர் பூஜ்ய விநோபாவுடன் திருத்துறைப்பூண்டியில் இருந்து வேதாரண்யம் வரை நடைப்பயணம். பெற்றவிருதுகள்: அபிநவபாரதி, கவிமாமணி, சரஸ்வதி, குருக்ருபா கவிரத்தினம் இன்னும் இன்னும் பல
இவரை எப்போது சந்தித்தேன்.
ஊரப்பாக்கம் அருகிலுள்ள ஆதனூர் கிராமத்தில் 22/2/24 அன்று சந்தித்தேன்.
அக்டோபர் 2024ல் தனது 98 ஆவது வயதில் இறைவனடி சேர்ந்தார்.


Leave a comment
Upload