தொடர்கள்
கவர் ஸ்டோரி
நீதி தேவதையை பதற வைத்த பத்ர கீர்த்தி. - கேராளாவை உலுக்கிய சம்பவம் - ஜாசன்

2026931192332390.jpg

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் கொச்சி நகரிலு ள்ள மாஞ்சாலி பகுதியை சேர்ந்தவர் ஜெயபாலகிருஷ்ணன்.இவர் நகரின்மற்றொரு பகுதியான தெற்கு சித்தூர் கோயில் அருகே தள்ளுவண்டியில் உணவகம் நடத்தி வந்தார். அக்டோபர் 25 அன்று ஸ்கூட்டரில்அவர் சென்று கொண்டிருந்தபோது பின்னால் வந்த கார்அவர் மீது வேகமாக மோதியதில்ஜெயபாலகிருஷ்ணன் சம்பவம் இடத்திலேயே உயிரிழந்தார்.விபத்துக்கு காரணமான காரை ஓட்டியவர் 17 வயது சிறுவன். சிறுவனின் தந்தை மோட்டார் வாகன இழப்பிட்டுத் தீர்ப்பாயத்தில்நீதிபதி என்பதால் முதல் தகவல் அறிக்கையில் விபத்து ஏற்படுத்திய சிறுவன் பெயர் இடம் பெறவில்லை. அவருக்கு காவல் நிலைய பிணை வழங்கப்பட்டு அவர் வீட்டுக்கு அனுப்பப்பட்டார். விபத்து நடந்த காரில் நீதிபதியும் இருந்திருக்கிறார். காவல் நிலையத்திற்கு நீதிபதி வந்ததால் முதல் தகவல் அறிக்கையில் சிறுவன் பெயர் இடம்பெறவில்லை. இது போதாது என்று நீதிபதி பயணம் செய்த காரில் அவர் வகிக்கும் அதிகாரப்பூர்வ பதவியை குறிப்பிடும் பெயர்பலகையும் அவரைக் காப்பாற்றுவதற்காக காவல்துறையினர் வேகமாக அகற்றி இருக்கிறார்கள்.

ஆனால் ஜெயபாலகிருஷ்ணன் குடும்பத்தினர் சிறுவருக்கு காவல் நிலையப் பிணை வழங்கியது எதிர்த்தும்,காரின் உரிமையாளரான நீதிபதி மீது வழக்கு பதிய வேண்டும் என்றும் போராட்டம் நடத்தினார்கள். இவர்களுக்கு ஆதரவாக ஜனநாயகர்கள் வாலிபர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகளும் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராடினார். எதிர்க்கட்சியினரும் ஜெய பாலகிருஷ்ணனுக்கு ஆதரவாக குரல் கொடுக்க ஆரம்பித்தார்கள். தொடர் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

எதிர்ப்பு அதிகமாகவே கூடுதல் பிரிவில் வழக்கு பதிவு செய்து மீண்டும் கைது செய்து இளம் சிறார் நீதி வாரியம் முன்பாக அவரை ஆஜர் படுத்தி அங்கு அவர் மீண்டும் ஜாமீன் தரப்பட்டது. ஒரே வழக்கில் இரண்டு முதல் தகவல் அறிக்கை இரண்டு முறை ஜாமீன் என்று கேரள போலீஸ் நீதிபதியை காப்பாற்றுவதாக நினைத்து காவல்துறைக்கு களங்கத்தை ஏற்படுத்தி விட்டது .திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டத்தின் 199ஏ(2)பிரிவின் படி, சிறுவர் காரை இயக்கி விபத்தை ஏற்படுத்தி உயிரிழப்பை ஏற்படுத்தினால்பெற்றோர்அல்லது பாதுகாவலர்அல்லது காரின் உரிமையாளரேகுற்றவாளி.அதனால்தான் போலீஸ் இந்த கார் நீதிபதியின் பெயரில் இருந்ததால் அவர் மீது எந்த வழக்கும் பதியாமல் அவரை காப்பாற்ற முயற்சி செய்து அசிங்கப்பட்டு விட்டது.

2026931192405201.jpg

கேரளா அரசின் உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னித்தால " இந்த சம்பவம் மிகவும் துரதிஷ்டவசமானது. ஆரம்ப கட்ட காவல்துறை நடவடிக்கை போதுமானதாக இல்லை. அவர்கள் தொடக்கத்திலேயே, 'கொலைக்கு நிகராக மரணத்தை விளைவித்தல் ' போன்ற சட்டப்பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்திருக்க வேண்டும். இந்த பிரச்சனை எனது கவனத்திற்கு வந்த பிறகு நான் மாநகர காவல் ஆணையர் மற்றும் ஆகிய இருவரிடமும் பேசினேன்அதற்குப் பின்பே கடுமையான பிரிவுகள் சேர்க்கப்பட்டன"என்று ஒப்புக் கொண்டிருக்கிறார் .சிறுவனுக்கு அளிக்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யவும் மேல்முறையீடு செய்ய தான் அறிவுறுத்தி இருப்பதாகவும் சொல்லி சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள் இடைநீக்கம் செய்யவும் பரிந்துரை செய்திருப்பதாக சொல்லி இருக்கிறார். தற்சமயம் அந்த காவல் நிலையத்தில் நான்கு பேர் .நீதிபதி மீது வழக்கு பதிவு செய்ய மற்றும் கைது செய்ய கேரள உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து அனுமதி பெற்ற கேரள காவல்துறை, மோட்டார் வாகன சட்டப்படி சிறுவனின் தந்தையான நீதிபதி மீது வழக்கு பதிவு செய்திருக்கிறது .இந்த வழக்கில் நீதிபதியை கைது செய்ய கேரள உயர் நீதிமன்றம் தடை விதித்திருக்கிறது.