இந்தியா தனது எதிரி நாட்டிடம் இருந்து எல்லைகளை பாதுகாக்க இராணுவ வீரர்களையும் எல்லை பாதுகாப்பு படை வீரர்களையும் நிறுத்தி பாதுகாத்து வருகிறது. நவீன ரக ஆயுதங்களை நமது பாதுகாப்பு படை வீரர்கள் பயன்படுத்தினாலும் கூட குண்டு துளைக்காத உடைகள் (புல்லட் ப்ரூப் ஜாக்கெட்) அணிவதுதான் முக்கியமானது என கருதப்படுகிறது.
அமெரிக்காவில் இருந்து நாம் வாங்கி பயன்படுத்தும் புல்லட் ப்ரூஃப் ஆடை, கிட்டதட்ட 15 கிலோ முதல் 18 கிலோ எடை கொண்டது. விலை கிட்டத்தட்ட ஒன்றரை லட்சம் ரூபாய்.
இந்திய ராணுவ வீரர்கள் அணியும் புல்லட் புரூஃப் ஆடைகள் மிகவும் அதிக எடை கொண்டதாக இருப்பதால் எடை குறைந்த புல்லட் புரூஃப் ஆடைகள் வேண்டும் என்பது நம் இராணுவத்தின் பல நாட்கள் கோரிக்கையாக இருந்தது. அது தற்போது தீர்ந்துள்ளது.
இந்திய பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்புடன் கூட்டாக கோயம்புத்தூர் அமிர்தா பல்கலைகழகத்தில் பணியாற்றும் மேற்கு வங்கத்தினை சேர்ந்த சாந்தனு பவும்மிக், ஏரோ பேஸ் பொறியியல் துறை பேராசிரியர். இவர் எடை குறைந்த புல்லட் புருஃப் ஆடையை வடிவமைத்து சோதனை செய்து வெற்றிக்கண்டுள்ளார். மேக் இன் இந்தியா திட்டத்தின் உதவியுடன் முதல் முறையாக புல்லட் புருஃப் ஆடை இந்தியாவில் தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் தற்போது தயாரிக்கப்பட்டுள்ள புல்லட் ப்ருப் ஆடையின் எடை வெறும் 1.5 கிலோ கிராம் மட்டுமே. இதில் 20 அடுக்குகளைக் கொண்ட கார்பன் பைபர் அடுக்குகள் உள்ளதால், 57 டிகிரி செல்சியஸ் வெப்பத்தினை தாங்கும் திறனுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவிலிருந்து ஏற்கனவே நமது வீரர்கள், அதிக எடையுடன் அணிந்து வந்த புல்லட் ப்ரூப் ஆடையுடன் ஒப்பிடும் போது 8 மடங்கு எடை குறைவு ஆகும். விலையை ஒப்பிடும் போது, ஒரு புல்லட் ப்ருப் ஆடையின் விலை வெறும் ரூபாய் 50000 மட்டுமே.
அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யும் புல்லட் ப்ருஃப் ஆடையுடன் ஒப்பிடும் போது இது மூன்றில் ஒரு மடங்கு விலை தான் வருகிறது. இதனால் இந்தியாவிற்கு ஆண்டு ஒன்றிற்கு புல்லட் புருஃப் ஆடை இறக்குமதி செய்ய செலவாகும் ரூ. 20000 கோடி மிச்சம் ஆகி உள்ளது.
தன்னுடைய எடைகுறைந்த புல்லட் ப்ருஃப் ஆடை கண்டுபிடிப்பை, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸுக்கு சமர்பிப்பதாக பெருமையுடன் சொல்கிறார் பேராசிரியர் சாந்தனு பவும்மிக்.
Leave a comment
Upload