நொறுக்ஸ்
ஒரே கல்லுல ரெண்டு மாங்கா! - மாலாஸ்ரீ

20190820125611454.jpg


பூமியை சுற்றியுள்ள பல்வேறு கடல்களில் பிளாஸ்டிக் கழிவு வெளியேற்றத்தினால், சுற்றுச்சூழல் பாதிப்பு மற்றும் கடல்வாழ் உயிரினங்கள் அழியும் பேராபத்து நிலவி வருகிறது. இத்தகைய பிளாஸ்டிக் கழிவுகளை வெளியேற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் பிலிப்பைன்ஸ் முதலிடம் பெறுகிறது என ஆய்வு தகவல்கள் கூறுகின்றன.


இத்தகைய அவலநிலையை தடுக்கும் வகையில், பிலிப்பைன்ஸ் நாட்டில் பிளாஸ்டிக்கை முறையாக சுழற்சி செய்யவும், அவற்றின் பயன்பாட்டை குறைக்கவும் அந்நாட்டு அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.


அவ்வகையில், அந்நாட்டின் தலைநகரான மணிலா அருகே பேயனான் கிராமத்தில், பிளாஸ்டிக் கழிவுகளை அழிக்கவும், அங்கு வறுமைக் கோட்டுக்கு கீழே வாழும் மக்களின் பசியை போக்கும் வகையில், சமீபகாலமாக அந்நாட்டு அரசு ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.


அதன்படி, அப்பகுதியில் வசிக்கும் ஏழை மக்கள் 2 கிலோ பிளாஸ்டிக் குப்பையை கொண்டு வந்து கொடுத்தால், அவர்களுக்கு ஒரு கிலோ அரிசி இலவசமாக வழங்கும் திட்டத்தை அரசு அறிமுகப்படுத்தியது.


இதேபோல், அந்நாட்டின் மற்ற பகுதிகளில் 2 கிலோ பிளாஸ்டிக் குப்பையை ஒப்படைப்பவர்களுக்கு, ஒருவேளை உணவு இலவசமாக வழங்கப்படுகிறது.

பிலிப்பைன்ஸ் நாட்டில் ஒரு கிலோ அரிசி (இந்திய மதிப்பில்) ₹50-க்கு விற்கப்படுகிறது. அதை வாங்க சிரமப்படும் ஏழை மக்கள், பிளாஸ்டிக் குப்பையை கொடுத்து அரிசி பெறும் அரசின் இந்த திட்டத்தை மக்கள் ஏகபோகமாக வரவேற்றுள்ளனர்.