தொடர்கள்
பொது
சோ நினைவு நாள்1

'சோ' வின் புத்தி கூர்மை!

20171106102905906.jpg

சோ மறைந்து ஒரு வருடமாகிவிட்டதே...

1993  அப்போது அவர் சன் டிவியின் துவக்கத்தில், பஞ்சாயத்து என்று ஒரு நிகழ்ச்சிக்கு என்னை அழைத்திருந்தார்!

 என்னை அறிமுகப்படுத்தும்போது ` கல்கத்தாவிலிருந்து வெளிவரும் ` தி ஸ்டேட்ஸ்மேன் ‘ பத்திரிகை ஒவ்வொரு வருடமும், இந்தியாவிலிருக்கும் அத்தனை மொழிகளிலும் கிராமப்புற ரிப்போர்ட்டிங்கில்  சிறந்தவற்றை தேர்ந்தெடுத்து மூன்று பரிசுகளை வழங்குகிறது. அந்த பரிசுத் திட்டம்  1984ம் வருடம் துவங்கியது! அதில் இந்த ஒன்பது வருடங்களில் பரிசு வாங்கிய ஒரே தென்னிந்திய – குறிப்பாக தமிழக பத்திரிகையாளர் சுதாங்கனை அறிமுகப்படுத்துவதில் பெருமைப்படுகிறேன்’ என்றார். எனக்கு பெருமையாக இருந்தது.

 இப்போது சோவின் ஆரம்பக காலத்திற்கு வருகிறேன். அப்போது அவர் நாடகத்தில் பிரபலம்! அதே சமயம்  டி.டி.கே  நிறுவனத்தில் சட்ட ஆலோசகர் சோ!

 அந்த நிறுவனத்தில் வேலை பார்த்த ஒரு மேலாளர்( மானேஜர்) வேலை நீக்கம் செய்யப்பட்டார், அவர் செய்த ஊழலுக்காக !

 அவர் தன்னை வேலை நிறுத்தம் செய்தது சட்ட விரோதம் என்று நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார் !

 நிறுவனத்திற்காக சோ வாதாடவேண்டும்!

 நிறுவனத்தில் ஊழல்வாதி எப்போது வேலைக்குச் சேர்ந்தார் என்ற எந்த ஆதாரமும் இல்லை!

 

இப்போது சோ நிர்வாகத்தில் சொல்லி கம்பெனி பெயர் இல்லாமல் அதே பதவிக்கு ஆள் தேவை என்று தபால் பெட்டி எண் கொடுத்து இந்துவில் விளம்பரம் செய்தார்!

 அதே நபர் புதிய வேலை என நினைத்து அந்த தபால் பெட்டியில் மனு செய்தார்!

 சோ இப்படி வாதாடினார்!

 "இங்கே பணி நீக்கம் செய்யப்பட்டது செல்லாது என்ற சொன்ன அதே நபர் தான் இத்தனை வருடங்கள் டி.டி.கே நிறுவனத்தில் வேலை செய்தேன் என்று விண்ணப்பத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.`என்னை நீக்கியது செல்லாது' என்று அதே நிறுவனத்தில் பணியை திரும்பக்கேட்டு போராடுகிறார் அந்த மேலாளர்! அதே சமயத்தில் இவர் ஏன் தபால் பெட்டி கொடுக்கப்பட்ட இன்னொரு நிறுவனத்தில் பணி கேட்டு மனு அனுப்புகிறார்?’

சோ வழக்கில் வெற்றி பெற்றார்!

- சுதாங்கன்

­