தொடர்கள்
சினிமா
சினிமா சினிமா சினிமா-லைட் பாய்

ஜனநாயகன்

ஜனநாயகன் படம் பொங்கல் ரிலீஸ் என்று உறுதி செய்து விட்டார் விஜய்.. படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமை சன் டிவி வாங்கி இருக்கிறது. அரசியல் வேறு தொழில் வேறு.

ஸ்ரீ லீலா

20251014184823192.jpeg

சிவகார்த்திகேயன் ஜோடியாக பராசக்தி படத்தில் ஸ்ரீலீலா நடிக்கிறார். பாடல் காட்சிகளில் அம்மணியின் நடன அசைவுக்கு ஈடாக சிவகார்த்திகேயன் ஆட முடியாமல் திணறிப் போனாராம்.

ராஷ்மிகா மந்தனா

20251014185406988.jpeg

ஒரு நிகழ்ச்சியில் நீங்கள் யாரை டேட்டிங் & திருமணம் செய்து கொள்வீர்கள் என்ற கேள்விக்கு "ஜப்பான் அனிமோ ஹீரோ நருடோவை டேட்டிங் செய்வேன். விஜய் தேவரகொண்டாவை திருமணம் செய்து கொள்வேன்" என்று பதில் சொல்லி இருக்கிறார் ராஷ்மிகா.

கீர்த்தி சுரேஷ்

20251014185626108.jpeg

கீர்த்தி சுரேஷ் நடிக்கும் அடுத்த படத்திற்கு 'தோட்டம் 'என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.

சுந்தர் சி

20251014191012561.jpeg

கமல் தயாரிப்பில் ரஜினி நடிக்கும் படத்தை சுந்தர் சி இயக்குகிறார் என்பது பழைய செய்தி. என் படத்தில் ஒரே ரத்த வாடை என்று பிரச்சாரம் வர தொடங்கி இருக்கிறது. இந்தப் படத்தில் அதெல்லாம் கூடாது முழுக்க முழுக்க காமெடியாக இருக்க வேண்டும் என்று சொல்லி இருந்தாராம் ரஜினி.இதற்குள் படத்திற்கு டைரக்டர் சுந்தர் சி ரெகமண்ட் செய்த இசையமைப்பாளர் வேண்டாம் என்று சூப்பர் நடிகர் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்து அதிகம் சத்தம் எழுப்பும் தனது உறவினர் தான் இசையமைக்க வேண்டும் என்ற பஞ்சாயத்தில் தற்ப்போது சுந்தர் சி படத்திலிருந்து வெளியேறி விட்டார் என்று செய்தி வந்துவிட்டது. கமல் படத்தில் ரஜினி நடிக்கிறார் என்பது வதந்தி ஆகி விடுமோ என்பது தான் லேட்டஸ்ட் டாக்

அனுபமா பரமேஸ்வரன்

20251014192703637.jpeg

துருவ் விக்ரமுக்கு ஜோடியாக பைசன் படத்தில் நடித்த அனுபாமா பரமேஸ்வரன் அடுத்ததாக லாக்டவுன் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

மீனாட்சி சௌத்ரி

2025101419300550.jpeg

தி கோட் படத்தில் நடித்த மீனாட்சி சௌத்ரி அந்தப் படம் அவருக்கு பெரிய அளவு சாதகமாக இல்லை.. அதன் பிறகு விக்ரம் ஜோடியாக ஒரு படத்திற்கு ஒப்பந்தமாகி அந்தப் படமே கைவிடப்பட்டது.. உடனே விக்ரம் வேறொரு படத்தில் தனக்கு ஜோடியாக மீனாட்சி சௌத்ரியை சிபாரிசு செய்து நடிக்க வைத்திருப்பதால் மகிழ்ச்சியில் இருக்கிறார் அம்மணி.

ப்ரீத்தி அஸ்ரானி

20251014193213801.jpeg

அயோத்தி படம் மூலம் அறிமுகமான ப்ரீத்தி அஸ்ரானி தொடர்ந்து "எலக்சன் கிஸ், பல்டி " போன்ற படங்களில் நடித்தாலும் பிரபலமானார் என்று சொல்ல முடியாது. .இப்போது எஸ்.ஜே சூர்யாவுடன் ஒரு படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இது தவிர விஷ்ணு விஷால் தம்பி ருத்ரா நடிக்கும் புதிய படத்தில் இவர் தான் நாயகி.

ஜான்வி கபூர்

20251014193349303.jpeg

ராம்சரண் ஜான்வி கபூர் ஜோடியாக நடிக்கும் 'பெத்தி 'படம் 'சிக்கிரி சிக்கிரி' பாடல் காட்சி வெளியானது. வெளியான 24 மணி நேரத்தில் 46 மில்லியனுக்கு அதிகமான பார்வையாளர்களைக் கவர்ந்து சாதனை செய்திருக்கிறது. .இந்தப் பாட்டை தமிழில் எழுதியது விவேக்.