
ஆந்திராவில் அரசின் திட்டங்களை புறக்கணித்து 48 எம் எல் ஏக்கள் சந்திரபாபு நாயுடு அதிருப்தி !!
திட்டங்கள் எல்லாம் ஓகே ஆனா கமிஷன் வராதாம் !!
கூடுதலாக வாக்காளர்களை சேர்த்தால் திமுக வெற்றி பெறும் அமைச்சர் ஏ..வ..வேலு.
ரொம்ப பணம் செலவாகும் பரவாயில்லையா அமைச்சரே ?
பீகாரில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஒற்றுமையாக உள்ளது. மத்திய அமைச்சர் சிராக் பாஸ்வான். .
இதை தேர்தல் முடிவு வந்த பிறகு சொன்னா நல்லா இருக்கும் !!
கர்நாடகாவில் சொத்து விவரங்கள் அளிக்காத ஐந்து அமைச்சர்கள் 67 சட்டமன்ற உறுப்பினர்கள்..
சொத்து விவரம் தெரிந்ததும் கட்சி நிதி கூடுதலாக கேட்பார்கள் என்ற பயம் தான் !!
செங்கோட்டையன் விவகாரத்தில் திமுக பின்னணி இருக்குமோ என்ற சந்தேகம் இருக்கிறது நயினார் நாகேந்திரன். .
அப்படியா, அமித்ஷாவை செங்கோட்டையன் டெல்லியில் பார்த்தது அதற்கு தானோ ?
பெண்கள் பாதுகாப்பு குறித்து விஷமப் பிரச்சாரம் செய்வதற்கு எடப்பாடி வெட்கி தலை குனிய வேண்டும். திமுக கண்டனம்.
ஆமா உண்மை எல்லாம் சொல்லிடுறாரு !!
எந்த கொம்பனாலும் திமுகவை தொட முடியாது முதல்வர் மு.க .ஸ்டாலின்
அமலாக்கத்துறை !!
எஸ் ஐ ஆர் தொடர்பாக மக்களின் கேள்வி குழப்பம் சந்தேகம் தீர்க்க நடவடிக்கை.
பணம் எப்ப தருவீங்க அப்படின்னு கேட்டு இருப்பாங்க ?
வந்தே மாதரம் பாடலால் மோடி கார்கே மோதல்.
என்ன பிரச்சனை , காங்கிரஸ்காரர்கள் ஒரு காலத்தில் வந்தே மாதரம் சொல்லிட்டு தானே இருந்தாங்க !!
ஜெயலலிதா மூலம் மூன்று முறை முதலமைச்சரானவர் ஓபிஎஸ். கொல்லைப்புறம் மூலம் முதல்வர் ஆனவர் எடப்பாடி. .
அண்ணே நீங்க கொல்லைப்புறமுனு சொல்றது சசிகலா அம்மாவை தானே
திரைப்படப் புகழை வைத்து அரசியல் கட்டமைப்பை உருவாக்கி விட்டதாக மாய பிம்பத்தை உருவாக்குகிறார்கள். விஜய் மீது அதிமுக கடும் தாக்கு.
அதான் கூட்டணி தான் இல்லைன்னு சொல்லிட்டாரு இல்ல ?
அறிக்கை வெளியிட்டு விட்டு அறிவாலயத்தில் ஒளிந்து கொள்வார் ஸ்டாலின் விஜய் தாக்கு.
அண்ணா இத நீங்க பனையூரில் இருந்து தான் சொல்றீங்க !!
எல்லா இயக்கத்திற்கும் சாதனை பட்டியல் உண்டு கமலஹாசன்.
உங்க இயக்கத்துக்கு ரெட் ஜெயிண்டோட கூட்டணி, ராஜ்யசபா இப்படி சொல்லிக் கொண்டே போகலாம் !!

Leave a comment
Upload