
[சென்னை பெசண்ட் நகர் ரத்தினகிரீஸ்வரருக்கு ஐப்பசி அன்னாபிஷேகம்]

[அம்பாள் அரளகேசி சன்னிதி காய்கறி பழங்களால் அலங்கரிப்பு]
தொன்று தொட்டே நமது தமிழகத்தில் சிவபெருமானுக்கு ஐப்பசி பௌர்ணமி தின அன்னாபிஷேகம் ஒரு பெருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறதை நமது தமிழ் இலக்கியம் சான்று கூறும்.
இன்றும் தொடரும் இந்த பாரம்பரியம் மிக்க கலாச்சார நிகழ்வு ஆயிரமாயிரம் சிவன் கோயில்களில் ஆராவாரத்துடன் அழகுடன் கொண்டாடுவதைக் கேட்டும் கண்டும் வருகிறோம்.
அந்த வகையில், நமக்கு பரிச்சயமான கோலம் மூலம் இரட்டயர் சகோதரிகள், மைதிலி, ராஜி (அ) ராஜேஸ்வரி, குழு இந்த வருடம் சென்னை பெசன்ட் நகரில் உள்ள ஸ்ரீ ரத்னகிரீஸ்வரர் கோவிலில் பருப்பு வகைகள், காய்கறிகள் மற்றும் பழங்களுடன் சிறப்பு அன்னாபிஷேக ரங்கோலியை நமக்கு வழங்கியிருக்கிறார்கள்.


“தொடர்ந்து நான்காவது ஆண்டாக இந்த சிறப்பு ரங்கோலியை நிகழ்த்தும் அதிர்ஷ்டம் பெற்றோம்” என்று நெகிழ்கிறார் இரட்டையரில் ஒருவரான மைதிலி.
இந்த ஆண்டு கருப்பொருளாக புனித நந்தனார் நாயன்மாரின் கதையினை எடுத்துக்கொண்டுள்ளனர்.
நந்தனார் சிவலோகநாதரை காண ஏக்கம்

சிவலோகனாதர் நந்தியை நகர உத்தரவு

நந்தனாருக்கு சிதம்பரத்தில் அக்னி பரிக்ஷை

நந்தனார் மோக்ஷம் அடைந்து சிவனுடன் ஐக்கியம்

இந்த ரங்கோலி உருவான விதத்தை விளக்கும் வீடியோ இதோ:
பெரும்பாலான பிரசாதங்கள் பக்தர்கள், பல்பொருள் அங்காடிகள் மற்றும் கோயம்பேட்டில் உள்ள கடைகளால் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளன. இவை அலங்காரத்திற்காகப் பயன்படுத்தப்படும், மேலும் மறுநாள் அதிகாலையில் தேர்ந்தெடுக்கப்பட்ட பத்து தொண்டு நிறுவனங்களுக்கு பயபக்தியுடன் விநியோகிக்கப்பட்டுவிட்டன என்று முடிக்கிறார் மைதிலி.

Leave a comment
Upload