
சமீப காலமாக டீவீ சானல்களில் சென்ஷேஷனல் என்ற பெயரில் நான் தான் முதலில் இந்த செய்தியை ப்ரேக் செய்தேன். இந்த வீடியோ எக்ஸ்க்ளூசிவ் என்று தம்பட்டம் வேறு சகிக்க முடியாத லெவலுக்கு சென்று வருகிறது.
யானைக்கும் அடி சறுக்கும்
கடந்த 11 நவம்பர் அன்று பாலிவுட்டின் மூத்த ஹீரோவும் நடிகை ஹேமமாலினியின் கணவருமான 89 வயதே ஆகும் தர்மேந்த்ரா பிரீச் கேண்டி ஆஸ்பித்திரியில் இறந்துவிட்டார் என்ற செய்தியைப் போட்டுவிட்டு அனைத்து வட இந்திய டீவீகளும்அவரது சினிமா உலக வாழ்வின் ஹிட் படங்களைப் புரட்டி புரட்டி போட்டு எடுத்துக்கொண்டிருந்தனர். இதற்கு முன் தின தில்லியில் நடந்த பாம்ப் பிளாஸ்ட் செய்தியின் விரிவாக்கம் கூட நிறுத்தப்பட்டுவிட்டது என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.
இந்த நியூஸ் வைரலாகிக்கொண்டே இருந்தது. ராணுவ அமைச்சரும் இரங்கல் செய்தியும் வெளியிட்டு விட்டார். இதனால் தர்மேந்திராவின் ரசிகர்கள் அதிர்ச்சிக்குள்ளாயினர்.
தர்மேந்திராவின் இறப்பு செய்தி ஒரு பொய் செய்தி என்று அறிந்தவுடன் ராணுவ அமைச்சர் தனது x தள இறங்கள் செய்தியை டிலீட் செய்து விட்டார்.
தர்மேந்திராவின் மகள் ஈஷா தியோலும் ஹேம மாலினியும் சேர்ந்து உடனேயே, “ இந்த மன்னிக்கமுடியாத செயலை ஏன் செய்கிறீர்கள்? அதிலும் பலர் பெரிய டீ வீ சானல்கள். என்று சாடிவிட்டு, தர்மேந்திரா உயிருடன் இருப்பதாகவும், அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை மூலம் அவர் தேறி வருவதாகவும் கூறினர்.

இதையே தர்மேந்திராவின் மகன் சன்னி தியோலும் தனது தனி அறிக்கையில் கூறியிருந்தார்.

தர்மேந்திராவின் ரசிகர்களுக்கு ஒரு நிம்மதி கிடைத்தது.
போன மாதம் மூச்சு விடுதலில் சற்று கடினமாயிருக்கக்கண்டு அவரை ஆஸ்பித்திரியில் சேர்த்திருந்தனர். தற்போது அவரது உடல்நிலை தேறி வருவதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
அவர் உடல் நலம் விரைவில் பெற்று இல்லம் திரும்ப பிரார்த்தனை செய்யுங்கள் என்று ஹேமா கேட்டுக்கொண்டுள்ளார்.
சோஷியல் மீடியா செய்தியை நம்பி பிரபல டீவீ சானல்கள் சென்சேஷனல் வலைக்குள் விழுந்துவிட்டனர்.
தற்போதைய செய்தி (12.11.2025 23.10 மணிக்கு) : தர்மேந்திரா ஆஸ்பித்திரியிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பிவிட்டார். இல்லத்திலும் அவருக்கு சிகிச்சை தொடர்கிறது.
அவரை அமிதாப் பச்சனும் சென்று குசலம் விசாரித்துவிட்டு வந்திருக்கிறார். பாலிவுட்டின் பிரபலங்களும் தர்மேந்திராவை அவரது இல்லத்தில் சென்று விசாரித்த வண்ணம் இருக்கின்றனர்.
வரும் கிருஸ்துமஸ் வாரக்கடைசியில் ரிலீசாகவிருக்கும் அமிதாப்பின் பேரன் அகஸ்தியா நந்தாவின் அறிமுகப் படமான இக்கீஸ் படத்தில் தர்மேந்திரா நடித்திருக்கிறார் என்பது உபரி செய்தி.

Leave a comment
Upload