
அக்டோபர் 12 - 2020
சார்வரி வருஷம்
தக்ஷிணாயணம்
வர்ஷருது
புரட்டாசி 26 - திங்கட்கிழமை
தசமி பகல் மணி 11.50 வரை பின்னர் ஏகாதசி
ஆயில்யம் இரவு மணி 8.54 வரை பின்னர் மகம்
ஸாத்யம் நாமயோகம்
பத்ரம் கரணம்
சித்த யோகம்
ராகு காலம்: காலை 7.30 - 9.00
எமகண்டம்: காலை 10.30 - 12.00
குளிகை: மதியம் 1.30 - 3.00
சூலம்: கிழக்கு
பரிகாரம்: தயிர்
இன்று கீழ் நோக்கு நாள்.
ஸ்ரீபெரும்புதூர் ஸ்ரீமணவாள மாமுனிகள் உற்சவாரம்பம்.
திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி பெருமாளுக்கு திருமஞ்சனம்.
திருக்குற்றாலம் பாபாநாசம், ஸ்ரீசிவபெருமான் பவனி.
சங்கரன் கோவில் ஸ்ரீகோமதியம்மன் புஷ்பப்பாவாடை தரிசனம்.
திதி: ஏகாதசி.
சந்திராஷ்டமம்: உத்திராடம், திருவோணம்.
அக்டோபர் 13 - 2020
சார்வரி வருஷம்
தக்ஷிணாயணம்
வர்ஷருது
புரட்டாசி 27 - செவ்வாய்கிழமை
ஏகாதசி காலை மணி 10.25 வரை பின்னர் துவாதசி
மகம் இரவு மணி 8.03 வரை பின்னர் பூரம்
சுபம் நாமயோகம்
பாலவம் கரணம்
சித்த யோகம்
ராகு காலம்: மதியம் 3.00 - 4.30
எமகண்டம்: காலை 9.00 - 10.30
குளிகை: மதியம் 12.00 - 1.30
சூலம்: வடக்கு
பரிகாரம்: பால்
இன்று கீழ் நோக்கு நாள்.
ஸர்வ ஏகாதசி.
ஸ்ரீபெரும்புதூர் ஸ்ரீமணவாள மாமுனிகள் புறப்பாடு.
ஸ்ரீரங்கம் ஸ்ரீநம்பெருமாள் சந்தன மண்டபம் எழுந்தருளி அலங்கார திருமஞ்சனம்.
ஸ்ரீவில்லிப்புத்தூர் ஸ்ரீஆண்டாள் ரெங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல்.
திதி: துவாதசி.
சந்திராஷ்டமம்: திருவோணம், அவிட்டம்.
அக்டோபர் 14 - 2020
சார்வரி வருஷம்
தக்ஷிணாயணம்
வர்ஷருது
புரட்டாசி 28 - புதன்கிழமை
துவாதசி காலை மணி 8.41 வரை பின்னர் திரயோதசி
பூரம் மாலை மணி 6.53 வரை பின்னர் உத்தரம்
சுப்ரம் நாமயோகம்
தைதுலம் கரணம்
அமிர்த யோகம்
ராகு காலம்: மதியம் 12.00 - 1.30
எமகண்டம்: காலை 7.30 - 9.00
குளிகை: காலை 10.30 - 12.00
சூலம்: வடக்கு
பரிகாரம்: பால்
இன்று கீழ் நோக்கு நாள்.
திருவம்பல், பாபநாசம் ஸ்ரீசிவபெருமான் திருவீதிவுலா.
திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள் திருக்கோவிலில் ஸ்ரீநரசிம்ம மூலவருக்கு திருமஞ்சனம்.
ஸ்ரீபெரும்புதூர் ஸ்ரீமணவாள மாமுனிகள் பவனி.
திருமெய்யம் ஸ்ரீஆண்டாள் புறப்பாடு கண்டருளல்.
திதி: திரயோதசி.
சந்திராஷ்டமம்: அவிட்டம், சதயம்.
அக்டோபர் 15 - 2020
சார்வரி வருஷம்
தக்ஷிணாயணம்
வர்ஷருது
புரட்டாசி 29 - வியாழக்கிழமை
திரயோதசி காலை மணி 6.40 வரை பின்னர் சதுர்த்தசி. சதுர்த்தசி மறு நாள் காலை 4.27 வரை பின்னர் அமாவாஸ்யை
உத்தரம் மாலை மணி 5.30 வரை பின்னர் ஹஸ்தம்
ப்ராம்மம் நாமயோகம்
வணிஜை கரணம்
மரண யோகம்
ராகு காலம்: மதியம் 1.30 - 3.00
எமகண்டம்: காலை 6.00 - 7.30
குளிகை: காலை 9.00 - 10.30
சூலம்: தெற்கு
பரிகாரம்: நல்லெண்ணெய்
இன்று மேல் நோக்கு நாள்.
மாதசிவராத்திரி.
அவமாகம்.
கரிநாள்.
திருவனந்தபுரம்,திருவாட்டாறு ஸ்ரீசிவபெருமான் உற்சவாரம்பம்.
ஸ்ரீபெரும்புதூர் பிள்ளை லோகாச்சாரியார் உற்சவாரம்பம்.
திதி: சதுர்த்தசி.
சந்திராஷ்டமம்: சதயம், பூரட்டாதி.
அக்டோபர் 16 - 2020
சார்வரி வருஷம்
தக்ஷிணாயணம்
வர்ஷருது
புரட்டாசி 30 - வெள்ளிக்கிழமை
அமாவாஸ்யை இரவு மணி 2.06 வரை பின்னர் ப்ரதமை
ஹஸ்தம் மாலை மணி 3.56 வரை பின்னர் சித்திரை
மாஹேந்த்ரம் நாமயோகம்
சதுஷ்பாதம் கரணம்
அமிர்த யோகம்
ராகு காலம்: காலை 10.30 - 12.00
எமகண்டம்: மதியம் 3.00 - 4.30
குளிகை: காலை 7.30 - 9.00
சூலம்: மேற்கு
பரிகாரம்: வெல்லம்
இன்று சம நோக்கு நாள்.
ஸ்ர்வ அமாவாஸ்யை.
ஸ்ரீபெரும்புதூர் ஸ்ரீமணவாள மாமுனிகள் புறப்பாடு.
திருவனந்தபுரம்,திருவட்டாறு ஸ்ரீசிவபெருமான் பவனி.
திருவிடை மருதூர் ஸ்ரீபிரகத்குசாம்பிகை புறப்பாடு.
திருகண்ணபுரம் ஸ்ரீசெளரிராஜ பெருமாள் விபீஷணாழ்வாருக்கு நடையழகு சேவை.
திதி: அமாவாஸ்யை.
சந்திராஷ்டமம்: பூரட்டாதி, உத்திரட்டாதி.
அக்டோபர் 17 - 2020
சார்வரி வருஷம்
தக்ஷிணாயணம்
சரத்ருது
ஐப்பசி 01 - சனிக்கிழமை
ப்ரதமை இரவு மணி 11.43 வரை பின்னர் த்விதீயை
சித்திரை பகல் மணி 2.18 வரை பின்னர் சுவாதி
விஷ்கம்பம் நாமயோகம்
கிம்ஸ்துக்னம் கரணம்
மரண யோகம்
ராகு காலம்: காலை 9.00 - 10.30
எமகண்டம்: மதியம் 1.30 - 3.00
குளிகை: காலை 6.00 - 7.30
சூலம்: கிழக்கு
பரிகாரம்: தயிர்
இன்று சம நோக்கு நாள்.
விஷீபுண்ய காலம்.
நவராத்திரி ஆரம்பம்.
மதுரை ஸ்ரீமீனாக்ஷியம்மன் கொலு மண்டபத்தில் ஸ்ரீராஜராஜேஸ்வரி அலங்காரம்.
குலசேகரப்பட்டிணம் ஸ்ரீமுத்தாரம்மன் சிறப்பு அலங்காரத்துடன் கொலு தர்பார்.
திதி: சூன்ய.
சந்திராஷ்டமம்: உத்திரட்டாதி, ரேவதி.
அக்டோபர் 18 - 2020
சார்வரி வருஷம்
தக்ஷிணாயணம்
சரத்ருது
ஐப்பசி 02 - ஞாயிற்றுக்கிழமை
த்விதீயை இரவு மணி 9.22 வரை பின்னர் திருதியை
சுவாதி பகல் மணி 12.40 வரை பின்னர் விசாகம்
ப்ரீதி நாமயோகம்
பாலவம் கரணம்
சித்த யோகம்
ராகு காலம்: மாலை 4.30 - 6.00
எமகண்டம்: மதியம் 12.00 - 1.30
குளிகை: மதியம் 3.00 - 4.30
சூலம்: மேற்கு
பரிகாரம்: வெல்லம்
இன்று சம நோக்கு நாள்.
சந்திர தரிசனம்.
தனவிருத்தி கெளரி விரதம்.
ஸ்ரீவில்லிப்புத்தூர் ஸ்ரீபெரியாழ்வார் புறப்பாடு.
ஸ்ரீபெரும்புதூர் ஸ்ரீமணவாள மாமுனிகள் புறப்பாடு.
உத்தரமாயூரம் ஸ்ரீவள்ளலார் சன்னதியில் சுவாமி சந்திரசேகரர் பவனி.
இராமநாதபுரம் ஸ்ரீராஜராஜேஸ்வரி சிறப்பு அலங்காரம்.
திதி: துவிதியை.
சந்திராஷ்டமம்: ரேவதி, அசுபதி.
மேஷம்: (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்)
எதையும் திட்டமிட்டு செய்து முடிக்க கூடிய திறமை உடைய மேஷ ராசி அன்பர்களே இந்த வாரம் எதிலும் முன்னேற்றம் காணப்படும். விரும்பிய பொருள்களை வாங்கி மகிழ்வீர். முக்கிய நபரின் அறிமுகமும், உதவியும் கிடைக்கும். நண்பர்கள் மூலம் உதவி கிடைக்கும். மரியாதை கூடும். திட்டமிட்ட காரியங்கள் நன்றாக நடந்து முடியும்.
குடும்பத்தில் வீண் வாக்குவாதங்கள் ஏற்படலாம். கவனமாக பேசுவது நல்லது. உறவினர்கள், குடும்ப நண்பர்களிடம் முக்கிய விஷயங்களை ஆலோசனை செய்வதையும், அடுத்தவர் பற்றி பேசுவதையும் தவிர்ப்பது நல்லது.
தொழில் வியாபாரத்தில் இருந்த தொய்வு நீங்கி வேகம் பிடிக்கும். எதிர்பார்த்த ஆர்டர்கள் கிடைக்கும். லாபம் கூடும்.
உத்தியோகத்தில் இருப்பவர்களின் செயல்திறன் அதிகரிக்கும். மேல் அதிகாரிகளின் பாராட்டும், பதவி உயர்வும் கிடைக்கும். புதிய வேலை தேடுபவர்களுக்கு சாதகமான பலன் கிடைக்கும்.
பெண்களுக்கு மற்றவர்களின் வேலைகளுக்காக அலைய நேரிடும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை
மாணவர்களுக்கு கல்வியில் இருந்த பிரச்சனைகள் தீரும். முடிவு எடுக்க முடியாமல் இழுபறியாக இருந்த விஷயங்களில் நல்ல முடிவு கிடைக்கும்.
பரிகாரம்: சிவனை வில்வ அர்ச்சனை செய்து வணங்க எதிர்ப்புகள் விலகும். காரிய அனுகூலம் உண்டாகும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், செவ்வாய்
ரிஷபம்: (கார்த்திகை 2, 3, 4 பாதம், ரோகிணி, மிருக சிரீஷம் 1, 2, பாதம்)
அனுபவத்தையும், திறமையையும் கொண்டு காரியங்களை திறம்பட செய்யும் ரிஷப ராசி அன்பர்களே இந்த வாரம் சின்ன விஷயத்துக்குக் கூட கோபம் வரலாம். நிதானமாக இருப்பது நன்மை தரும். பணவரத்து இருக்கும். வேற்று மொழி பேசும் நபரால் நன்மை உண்டாகும். புத்தி சாதுரியத்தால் எதையும் சமாளிப்பீர்கள். வீண் அலைச்சல் ஏற்படும். நீங்கள் நினைப்பது படி மற்றவர்கள் நடந்து கொள்ளாததால் டென்ஷன் ஏற்படலாம்.
குடும்பத்தில் இருந்த இறுக்கமான சூழ்நிலை நீங்கும். குடும்ப உறுப்பினர்கள் மூலம் வருமானம் வரும். சொன்ன சொல்லை எப்பாடு பட்டாவது காப்பாற்றுவீர்கள். ஒரு சில பணி காரணமாக வீட்டை விட்டு வெளியில் தங்க நேரிடலாம். கணவன், மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவது மூலமும் விருந்தினர் வருகையாலும் செலவு உண்டாகும்.
தொழில் வியாபாரத்தில் இருந்த மந்தமான போக்கு மாறும். வேகம் பிறக்கும். கடன் பிரச்சனை தீரும். போட்டிகள் மறையும்.
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைபளு, கூடுதல் பொறுப்புகள் உண்டாகலாம். அதிக உழைப்பின் பேரில் வேலைகளை செய்து முடிப்பீர்கள்.
பெண்களுக்கு அதிகம் பேசுவதை தவிர்த்து செயலில் வேகம் காட்டுவது நல்லது. அடுத்தவர் கூறுவதை செய்யும் முன்பு அது பற்றி ஆலோசனை செய்வது நல்லது.
மாணவர்களுக்கு கல்வியில் சீரான போக்கு காணப்படும். கூடுதல் மதிப்பெண் பெற மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றிபெறும்.
பரிகாரம்: பெருமாளையும் தாயாரையும் வணங்கி வர எந்த ரூபத்தில் பிரச்சனை வந்தாலும் எப்படிப்பட்ட கஷ்டம் வந்தாலும் அது நீங்கும். சுகம், சௌக்கியம் உண்டாகும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், வெள்ளி
மிதுனம்: (மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள் திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதம்)
எதையும் ஆழமாக யோசித்து திறமையுடன் செய்து முடிக்கும் மிதுன ராசி அன்பர்களே இந்த வாரம் நீண்ட நாட்களாக முயற்சி செய்த காரியங்கள் வெற்றியை தரும். வாகனங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். திடீர் செலவு ஏற்படும். சிலருக்கு மருத்துவ செலவு ஏற்படும். வீட்டை விட்டு வெளியில் தங்க நேரிடும்.
குடும்பத்தில் இருந்த மறைமுக எதிர்ப்புகள் மறையும். திருமணம் தொடர்பான காரியங்கள் சாதகமாக பலன் தரும். உங்களது வார்த்தைக்கு மதிப்பு கூடும். கணவன், மனைவிக்கிடையே இருந்த மன கசப்பு நீங்கும். பிள்ளைகள் உங்களது பேச்சுக்கு செவி சாய்ப்பார்கள். வாய்க்கு ருசியான உணவும் கிடைக்கும்
தொழில் வியாபாரத்தில் இருப்பவர்கள் அவசரமான முடிவுகள் எடுப்பதை தவிர்ப்பது நல்லது. பேச்சாற்றல் மூலம் தொழில் லாபம் கூடும். போட்டிகளை தவிர்க்க துணிச்சலான முடிவுகளை எடுக்க நினைப்பீர்கள்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்த்த நன்மைகள் கிடைக்க பெறுவார்கள். இடமாற்றத்துடன் பதவி உயர்வு சிலருக்கு கிடைக்கலாம்.
பெண்களுக்கு எடுத்த காரியத்தை திறமையாக செய்து முடிப்பீர்கள். பண புழக்கம் திருப்தி தரும். மதிப்பு மரியாதை அதிகரிக்கும்.
மாணவர்களுக்கு கல்வி பற்றிய கவலை நீங்கும். பாடங்கள் படிப்பதில் வேகம் காட்டுவீர்கள். பாராட்டு கிடைக்கலாம்.
பரிகாரம்: மாரியம்மனுக்கு தீபம் ஏற்றி அர்ச்சனை செய்து வணங்க குழப்பங்கள் தீரும். காரிய வெற்றி உண்டாகும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், சனி
கடகம்: (புனர் பூசம் 4ம் பாதம்,பூசம், ஆயில்யம்)
மிடுக்கான நடையும் நேர் கொண்ட பார்வையும் எடுத்த கொள்கையில் மாறாதவர்களுமான கடக ராசி அன்பர்களே நீங்கள் பிறரின் நட்பை பயன்படுத்தி எதையும் செய்து முடிக்கும் ஆற்றல் உடையவர்கள். உங்களிடம் ஆளக்கூடிய திறமை இருக்கும். இந்த வாரம் தெளிவான சிந்தனை தோன்றும். எந்த காரியத்தையும் செய்யும் முன் ஆலோசனை செய்து அதில் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். சாமர்த்தியமான உங்களது செயல் கண்டு மற்றவர்கள் ஆச்சரியப்படுவார்கள். முக்கிய நபர்கள், அந்தஸ்தில் உயர்ந்தவர்கள் நட்பு கிடைக்கும். அதனால் கவுரவம் அதிகரிக்கும். புதிய தொடர்புகள் மகிழ்ச்சி தரும். சமூகத்தில் அந்தஸ்து உண்டாகும்.
குடும்பத்தில் இருந்த வீண் பிரச்சனைகள் நீங்கி அமைதி ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே இருந்த மன கசப்பு மாறும். விருந்தினர்கள் வருகை இருக்கும். குடும்ப செலவுகள் குறையும். பிள்ளைகள் உங்களது ஆலோசனைகளை கேட்பார்கள். அவர்களுக்கு தேவையானவற்றை செய்து கொடுப்பீர்கள்.
தொழில் வியாபாரத்தில் இருப்பவர்கள் சாதுரியமாக செயல்பட்டு முன்னேற்றம் காண்பார்கள். ஆனால் வேலை செய்பவர்களிடம் கோபப்படாமல் தட்டி கொடுத்து வேலை வாங்குவது நன்மையை தரும்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் ஓய்வு இல்லாமல் பணியாற்ற வேண்டி இருக்கும். இயந்திரம், நெருப்பு, ஆயுதத்தை பயன்படுத்துவோர் மிகவும் கவனமாக இருப்பது அவசியம்.
பெண்களுக்கு எடுத்த காரியம் தடைபட்டு பின்னர் நல்லபடியாக நடந்து முடியும். மனதில் எதைபற்றியாவது சிந்தித்த வண்ணம் இருப்பீர்கள்.
மாணவர்களுக்கு கல்விநிலை உயரும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.
பரிகாரம்: அம்மனை வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும். பிரச்சனைகள் தீரும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், சனி
சிம்மம்: (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்)
வாழ்க்கையில் சந்திக்கும் கஷ்ட நஷ்டங்களை அனுபவமாக எடுத்துக் கொள்ளும் திறமை உடைய சிம்ம ராசி அன்பர்களே இந்த வாரம் எடுத்த முயற்சிகள் கை கூடும். வரவுக்கேற்ற செலவு ஏற்படும். எதையும் சாதிக்கும் திறமையும், சாமர்த்தியமும் உண்டாகும். மனோ தைரியம் கூடும். மற்றவர்களால் குற்றம் சாட்டப்படலாம். எனவே கவனம் தேவை. கண்நோய், பித்தம், வாதம் சம்பந்தப்பட்ட நோய் ஏற்பட்டு நீங்கும். வார்த்தைக்கு மதிப்பு இருக்கும். திடீர் கோபம் உண்டாகும்.
குடும்பத்தில் இருப்பவர்களுடன் மனநிறைவு ஏற்படும் வகையில் எல்லாம் நடக்கும். வாழ்க்கைத் துணையால் நன்மை ஏற்படும். குழந்தைகளை வெளிநாடு சென்று படிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றும்.
தொழில் வியாபாரத்தில் இருப்பவர்கள் சாதுரியமான பேச்சினால் எதிலும் லாபம் காண்பார்கள். வர்த்தக திறமை அதிகரிக்கும். பணவரத்தும் திருப்திகரமாக இருக்கும்
உத்தியோகத்தில் இருப்பவர்கள் கவனமாக பணிகளை கவனிப்பது நல்லது. எதிர்பாராத இடமாற்றம் சிலருக்கு உத்தியோக மாற்றம் உண்டாகலாம்.
பெண்களுக்கு எதிர்பார்த்த உதவி கிடைப்பதில் தாமதம் ஏற்படும். பயணங்களால் அலைச்சல் உண்டாகும். மனதில் ஒருவித கவலை இருக்கும்.
மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றமடைய கூடுதல் கவனத்துடன் படிப்பீர் கள். ஆசிரியர், சக மாணவர் மத்தியில் நன்மதிப்பு உண்டாகும்.
பரிகாரம்: சஷ்டிக் கவசம், சண்முக கவசம் பாராயணம் செய்து முருகனை வழிபடுவது காரிய தடைகளை நீக்கும். எதிர்ப்புகள் நீங்கும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வியாழன்
கன்னி: (உத்திரம் 2, 3, 4 பாதம், அஸ்தம், சித்திரை 1, 2, பாதம்)
வாழ்க்கையில் முன்னேற எதிர்நீச்சல் போடவும், தயங்காத கன்னி ராசி அன்பர்களே நீங்கள் நேர்மை, நியாயமாக நடப்பவர்கள். இந்த வாரம் எதிலும் சாதகமான நிலை காணப்படும். எல்லா நன்மைகளும் உண்டாகும். பணவரத்து அதிகரிக்கும். வாக்கு வன்மை ஏற்படும். உங்கள் பேச்சுக்கு மற்றவர்கள் செவி சாய்ப்பார்கள். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். தொலைதூரத்தில் இருந்து நல்ல தகவல்கள் வந்துசேரும்.
குடும்பத்தில் எதிர்பாராமல் நடக்கும் சம்பவங்களால் இழுபறியாக இருந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் காணப்படும். பிள்ளைகளுடன் அநுசரித்து செய்வது கருத்து வேற்றுமை வராமல் இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் ஒரே குறிக்கோளுடன் இருப்பதை விட்டு வாடிக்கையாளர் தேவை அறிந்து செயல்படுவது முன்னேற்றத்திற்கு உதவும். பணவரத்து அதிகரிக்கும்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையாக செயல்பட்டு உயர் அதிகாரிகளின் பாராட்டு கிடைக்கப்பெறுவார்கள். அத்துடன் பணவரத்தும் திருப்திகரமாக இருக்கும். கடினமான பணிகளை கூட எளிதாக முடிக்கும் ஆற்றல் வரும்.
பெண்களுக்கு எதிர்ப்புகள் விலகும். காரிய தடை தாமதம் நீங்கும். ஆரோக்கியம் உண்டாகும்.
மாணவர்களுக்கு கல்வியை தவிர மற்றவைகளில் கவனத்தை சிதற விடலாம். வாகனங்களில் செல்லும் போதும் எச்சரிக்கையாக செல்வது நல்லது.
பரிகாரம்: சோம வார விரதம் அனுஷ்டிப்பது கஷ்டங்களை போக்கும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வெள்ளி
துலாம்: (சித்திரை 3, 4 பாதம், சுவாதி, விசாகம் 1, 2, 3ம் பாதம்)
விறுவிறுப்பாக எதையும் செய்யும் திறன் படைத்த துலா ராசி அன்பர்களே உங்கள் பேச்சில் வேகம் இருக்கும். இந்த வாரம் எல்லா விதத்திலும் நன்மை உண்டாகும். எதையும் துணிச்சலுடன் எதிர் கொள்வீர்கள். தடைபட்டு வந்த காரியங்களில் தடை நீங்கும். சாமர்த்தியமான பேச்சால் ஆதாயம் உண்டாகும். பணவரத்து அதிகரிக்கும். உங்கள் செயல்களுக்கு தடைகளை ஏற்படுத்தியவர்கள் தாமாகவே விலகி செல்வார்கள்.
குடும்பத்தில் கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் குதூகலம் உண்டாகும். வாகனம் வாங்கும் அல்லது புதுப்பிக்கும் பணியில் ஈடுபடுவீர்கள். பயணம் மூலம் சாதகமான பலன் கிடைக்கும். குடும்பத்தில் சுப காரியங்கள் நடைபெறும்
தொழில் வியாபாரத்தில் பணத்தேவை ஏற்படலாம். கடன் விவகாரங்களில் கவனமாக செயல்படுவது நல்லது.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையாக செயல்பட்டு பாராட்டு பெறுவார்கள். ஆனால் கடுமையான பணியின் காரணமாக சோர்வு உண்டாகலாம். கவனம் தேவை.
பெண்களுக்கு திடீர் என்று கோபம் உண்டாவதை தவிர்ப்பது நல்லது. திறமையை கண்டு மற்றவர்கள் பாராட்டுவார்கள். எதிர்பார்த்த பணவரத்து இருக்கும்.
மாணவர்களுக்கு கோபத்தை குறைத்து நிதானத்தை கடைபிடிப்பது முன்னேற்றத்திற்கு வழி வகுக்கும். பாடங்களை நன்கு படித்து பாராட்டு பெறுவீர்கள்.
பரிகாரம்: சிவன் வழிபாடு செய்வதும் செம்பருத்தி, அரளிமலர்களால் சூரியனை அர்ச்சனை செய்வதும் வெற்றிக்கு வழி வகுக்கும். எதிர்ப்புகள் நீங்கும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: வெள்ளி, சனி
விருச்சிகம்: (விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை)
திறமையையே மூலதமான வைத்து வாழ்வில் உயர்ந்த நிலைக்கு செல்லும் விருச்சிக ராசி அன்பர்களே இந்த வாரம். பேச்சை கட்டுப்படுத்திக் கொள்வது நன்மை தரும். எதைப் பேசினாலும் வார்த்தைகளில் நிதானத்தைக் கடைபிடிப்பது நன்மை தரும். ராஜாங்க ரீதியிலான காரியங்கள் கை கொடுக்கும். வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும். பொருள் சேர்க்கை உண்டாகும். சிற்றின்ப செலவுகள் அதிகரிக்கும். நண்பர்களுக்கு உதவிகள் செய்வீர்கள். பணவரத்து திருப்தி தரும். வீண்பழி ஏற்படலாம்.
குடும்பத்தில் சிறு பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். உறவினர் மூலம் நடக்க வேண்டிய காரியங்களில் தாமதம் ஏற்படலாம். கணவன், மனைவிக்கிடையே மனம் வருந்தும்படியான சூழ்நிலை ஏற்படும்.
தொழில் வியாபாரத்தில் வீண் அலைச்சல், ஆர்டர் கிடைப்பதில் தாமதம் போன்றவை ஏற்பட்டாலும், தொழில் வியாபாரம் சீராக நடக்கும்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் முக்கிய வேலையை முடித்ததற்காக பாராட்டுகளை பெறுவீர்கள். உங்களுடைய பொறுப்புகள் அதிகரிக்கும்.
பெண்களுக்கு துணிச்சலாக எதிலும் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். வாகனங்களில் செல்லும்போதும் பயணங்களின் போதும் கவனம் தேவை.
மாணவர்களுக்கு செயல்திறமை அதிகரிக்கும். உயர்கல்வி கற்பவர்கள் கூடுதல் கவனத்துடன் பாடங்களை படிப்பது நல்லது
பரிகாரம்: நவகிரகங்களை வணங்கி புதனுக்கு அர்ச்சனை செய்து வழிபடுவது மன அமைதியை தரும். பொருளாதாரம் உயரும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், புதன்
தனுசு: (மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்)
பக்குவமாக எடுத்து சொல்லி எதிரில் இருப்பவர்களை திருப்தியடையச் செய்யும் தனுசு ராசி அன்பர்களே இந்த வாரம் இந்த வாரம்: வாழ்க்கை தரம் உயர எடுக்கும் முயற்சிகள் கை கூடும். நெருக்கமானவர்களுடன் மகிழ்ச்சியாக பொழுதை கழிப்பீர்கள். முன்பின் யோசிக்காமல் எதையாவது பேசி விடுவீர்கள். இதனால் வீண் மனஸ்தாபங்கள் ஏற்படலாம் கவனம் தேவை. வழக்கத்தை விட செலவு கூடும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவதும் நல்லது. திடீர் இடமாற்றம் ஏற்பட்டாலும் அதன் மூலம் சாதகம் உண்டாகலாம். வீண் செலவுகள், கவுரவ குறைச்சல் ஏற்படலாம். மிகவும் கவனம் தேவை. தாய் தந்தையின் உடல் நிலையிலும் கவனம் செலுத்துவது நல்லது.
குடும்பத்தில் திருமணம் தொடர்பான பேச்சுவார்த்தை சாதகமாக முடியும். குடும்பத்தில் உள்ளவர்களால் வருமானம் கிடைக்கலாம். கணவன், மனைவிக்கிடையே மனம் விட்டு பேசி எடுக்கும் முடிவுகள் குடும்ப முன்னேற்றமடைய உதவும். பிள்ளைகளின் நலனின் அக்கறை காட்டுவீர்கள்.
தொழில் வியாபாரம் சீராக நடைபெறும். அரசு சம்மந்தமான தொழில் விவகாரங்களில் உள்ளவர்கள் நீண்ட போராட்டத்திற்கு பின்னர் வெற்றி அடைய முடியும்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையுடன் செயல்பட்டு நிர்வாகத்தினரால் பாராட்டு கிடைக்க பெறுவார்கள். ஆனால் அலைச்சல் உண்டாகும்.
பெண்களுக்கு நீண்ட தூரத்தில் இருந்து வரும் தகவல்கள் மனதிருப்தியை தருவதாக இருக்கும். முயற்சிகளில் சாதகமான பலன் பெறுவீர்கள். பணவரத்து கூடும்.
மாணவர்களுக்கு தடைகளை தாண்டி கல்வியை கற்க செய்யும் முயற்சி வெற்றி பெறும். சிறப்பாக படித்து முடிப்பீர்கள்.
பரிகாரம்: விஷ்ணு சகஸ்ர நாமம் பாராயணம் செய்யுங்கள். பானகம் நெய்வேத்யம் செய்யுங்கள்.
அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வியாழன்
மகரம்: (உத்திராடம் 2, 3, 4 பாதம், திருவோணம், அவிட்டம் 1,2 பாதம்)
வீரத்தை விட விவேகமே சிறந்தது என்பதை மனதில் கொண்டு எதையும் சாதிக்கும் திறன் உடைய மகர ராசி அன்பர்களே இந்த வாரம் எந்த ஒரு விஷயத்திலும் முடிவு எடுப்பது தாமதமாகும். அடுத்தவர் பிரச்சனைகளில் தலையிடுவதை தவிர்ப்பதும் நல்லது. பணவரத்து எதிர்பார்த்த நேரத்தை விட தாமதமாக வந்து சேரும். ஆனால் பூர்வீக சொத்துக்களில் இருந்து பிரச்சனைகள் தீரும்.
குடும்பத்தில் நிம்மதி ஏற்படும். சுற்றத்தினர் வருகை இருக்கும். கணவன், மனைவிக்கிடையே அன்பு கூடும். பிள்ளைகள் மூலம் மனமகிழ்ச்சி ஏற்படும். குடும்ப வருமானம் அதிகரிக்கும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உறவினர்கள் - நண்பர்கள் மூலம் ஆதாயம் பெறுவீர்கள்.
தொழில் வியாபாரம் தொடர்பான பணிகளில் நிதானமான போக்கு காணப்படும். வியாபார போட்டிகள் இருந்தாலும் அதனால் பாதிப்பு இருக்காது.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலக பணி சம்மந்தமாக யாரிடமும் கலந்து ஆலோசிக்க வேண்டாம். எச்சரிக்கையுடன் இருப்பது அவசியமாகிறது.
பெண்களுக்கு மனோதைரியம் கூடும். சாமர்த்தியமான பேச்சால் எடுத்த காரியம் வெற்றிபெறும்.
மாணவர்களுக்கு திறமையாக எதையும் செய்து பாராட்டு பெறுவீர்கள். கல்வியில் முன்னேற்றத்திற்கு எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன் தரும்.
பரிகாரம்: முல்லை மலர் சாற்றி தட்சிணாமூர்த்தியை வழிபடுவது கடன் பிரச்சனையை தீர்க்கும். செல்வம் சேரும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: வியாழன், சனி
கும்பம்: (அவிட்டம் 3, 4 பாதம், சதயம், பூரட்டாதி 1, 2, 3 பாதம்)
எதிர்ப்புகளைக் கண்டு அஞ்சாமல் சாமர்த்தியமாக செயல்பட்டு எதிலும் வெற்றி பெறும் சூரியனை அதிபதியாகக் கொண்ட கும்ப ராசி அன்பர்களே இந்த வாரம் எல்லா காரியங்களிலும் சாதகமான பலன் கிடைக்கும். எதிலும் லாபம் கிடைக்கும். கடன்கள், நோய்கள் தீரும். திருமணம் தொடர்பான காரியங்கள் நல்லபடியாக நடந்து முடியும். நன்மை, தீமை பற்றிய கவலை இல்லாமல் தலை நிமிர்ந்து நடப்பார்கள். நட்பு வகையில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. சிலநேரத்தில் விபரீதமான எண்ணம் தோன்றலாம் கவனம் தேவை பணவரத்து கூடும். மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். நீண்ட தூர தகவல்கள் நல்ல தகவல்களாக வரும். முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும்.
குடும்பத்தில் மகிழ்ச்சி காணப்படும். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும். பிள்ளைகள் நலனுக்காக பாடுபடவேண்டி இருக்கும். உறவினர்களிடமும் பழகுவதில் கவனம் தேவை.
தொழில் வியாபாரம் நல்ல நிலைக்கு உயரும். போட்டிகள் நீங்கும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். தேவையான நிதியுதவி கிடைக்கும்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். நிலுவையில் உள்ள பணம் வந்து சேரும். நிர்வாக திறமை வெளிப்படும். மேலிடத்தில் உங்களுக்கான அங்கீகாரம் கிடைக்கும்.
பெண்கள் எதிலும் சாமர்த்தியமாக செயல்பட்டு காரிய வெற்றி பெறுவீர்கள். வீண் அலைச்சல் உண்டாகும்.
மாணவர்களுக்கு திறமையால் முன்னேற்றம் உண்டாகும். கஷ்டமான பாடங்களையும் துணிச்சலாக படித்து முடிப்பீர்கள். வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை.
பரிகாரம்: லஷ்மி நரசிம்மரை வணங்க குடும்ப கஷ்டம், கடன் தொல்லை நீங்கும். வாழ்வில் முன்னேற்றம் உண்டாகும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: வெள்ளி, சனி
மீனம்: (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)
சாமர்த்தியமாக செயலாற்ற தெரிந்த மீன ராசி அன்பர்களே சில நேரத்தில் இடம், பொருள் தெரியாமலும் செயல்பட்டு விடுவீர்கள். இந்த வாரம் நீண்ட நாட்களாக இழுப்பறியாக இருந்த ஒரு காரியத்தில் சாதகமான பலன் கிடைக்கும். மற்றவர்களுக்காக வாதாடி வெற்றி பெறுவீர்கள். முன்கோபம் குறையும். பேச்சினால் ஏற்பட்ட மனஸ்தாபங்கள் நீங்கி பிரிந்தவர்கள் மீண்டும் நட்பு பாராட்டுவார்கள். பணவரத்து அதிகரிக்கும். மனதில் புதுதெம்பும் உற்சாகமும் தோன்றும். எதிர்பாரத உதவியால் நன்மை ஏற்படும்.
குடும்பத்தில் வீண் விவாதங்கள் தோன்றும். கவனம் தேவை. வாழ்க்கை துணை உங்களுக்கு ஆதரவாக இருப்பார். பிள்ளைகளின் நலனுக்காக பாடுபடுவீர்கள். விருந்தினர் வருகை இருக்கும். தடைபட்டு வந்த திருமண காரியங்கள் சாதகமாக நடக்கும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள்.
தொழில், வியாபாரம் தொடர்பாக வீண் அலைச்சல் இருக்கும். சில நேரங்களில் முக்கிய முடிவு எடுப்பதில் தயக்கம் காட்டுவீர்கள். வாடிக்கையாளர்களை அனுசரித்து செல்வதன் மூலம் கூடுதல் லாபம் கிடைக்க பெறுவீர்கள்.
உத்தியோகஸ்தர்கள் மேல் அதிகாரிகள் கூறுவதை கேட்டு தடுமாற்றம் அடையலாம். நிதானமாக யோசித்து செய்வது நல்லது. பணவரத்து திருப்தி தரும்.
பெண்கள் எந்த ஒரு காரியத்தை செய்யும் முன்பும் அதை எப்படி செய்வது என்ற மன தடுமாற்றம் ஏற்பட்டு நீங்கும். அவசர முடிவுகளை தவிர்ப்பது நன்மை தரும்.
மாணவர்கள் எதிர்கால கல்வி பற்றி முக்கிய முடிவுகளை எடுக்க நினைப்பீர்கள். அடுத்தவர் யோசனைகளை கேட்டு தடுமாற்றம் அடையாமல் இருப்பது நல்லது
பரிகாரம்: ராகு காலத்தில் துர்கை அம்மனை விளக்கேற்றி வழிபடுங்கள்.
அதிர்ஷ்ட கிழமைகள்: வியாழன், வெள்ளி.

Leave a comment
Upload