
₹730 கோடிக்கு ஐபிஎல் சூதாட்டம்... - கல்பனா சுரேந்தர்
என்னடா... 'ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடக்குது, எங்கேயும் இதை வெச்சு யாரும் சூதாடவில்லையே?'னு பார்த்தேன். நான் நெனைச்ச மாதிரி 'ஆந்திராவில் ₹730 கோடிக்கு சூதாட்டம்'னு வருது! இன்னும் என்னென்ன, யார் யார்னு வருமோ?
நித்யானந்தம், வேலூர்
வாசி யோசி - 7 வேங்கடகிருஷ்ணன்
வாசி யோசியின் ஹு பெனோ பெனோ என படிக்க ஆரம்பித்தும் ஹவாய் தீவில் இருப்பது போல் கனவில் மிதந்தேன்... ஸாரி, பர்கிவ் மீ... புத்தக விமர்சனம் சூப்பரா இருந்தது.
குறளரசன், திருப்போரூர்
வெண்ணெய்க்கு ஆடும் பிள்ளை... 7 - டாக்டர் எம்.ஏ. வேங்கடக்ருஷ்ணன்
டாக்டர் வேங்கடகிருஷ்ணனின் வெண்ணெய்க்கு ஆடும் பிள்ளையில், அழுகையும் தொழுகையும் பகுதியை பாசுரத்துடன் படித்ததில், பாற்கடலில் பள்ளி கொண்ட பெருமானை பார்த்தது போல் மெய்மறந்தேன்.
சிவராமன், கொல்கத்தா
உலகம் சுற்றும் விகடகவி - ராம்
உலகம் சுற்றும் விகடகவியில் வந்த நாடுகளின் செய்திகளும் சூப்பர். செய்திக்கான படங்களை தேர்ந்தெடுத்து போடுவதில் ராமுக்கு நிகர் அவரே! ஐ லைக் இட்.
ரிச்சர்ட்சன், சேலம்
உலகம் சுற்றும் விகடகவி - ராம்
குறும்புக்கார ஆசாமி ஐயா நீர். கீழே செய்தியை போட்டு படத்தை நீக்க முடியாமல் செய்துவிட்டீரே.! அப்ப வாத்தியார் சுஜாதாவின் மெக்சிகோ சலவைக்காரி ஜோக் உமக்கு தெரிந்திருக்க வாய்பிருக்கிறது. அடுத்த வாரம் அதை சொன்னால் உமக்கு புண்ணியமாய்ப்போகும்.😉😀
வேங்கடகிருஷ்ணன், சென்னை
மாண்புமிகு மனிதர்கள்...!. - ஜாசன் (மூத்த பத்திரிகையாளர்)
மாண்புமிகு மனிதர்கள் தொடரில் சிகை அலங்காரம் குறித்து எழுதினீங்க. அந்த காலத்துல நுரையே வராத சோப்புல, மொட்டை சவரக்கத்தியால் முடி வெட்டினாங்க. ஆசாரம் பார்த்தாங்க. இப்போ வொய்ப்பே முடி வெட்டினானு நீங்களே பப்ளிசிட்டி பண்றீங்க. இதுதான் கால மாற்றம். அதுசரி, நீங்க கொடுத்து வெச்சிருக்கீங்க!
தனசேகரன், கோவில்பட்டி
‘குட் ஸ்மார்டியன்’ சான்று சட்டத்திருத்தம் வருகை.... - மாலாஸ்ரீ
நல்ல விஷயம்தான். விபத்தில் சிக்கியவர்களை உயிருடன் காப்பாற்ற விரும்புவர். ஆனால், அதன்பிறகு ஏற்படும் அலைக்கழிப்புகள், தன்மீதே வழக்கு என்ற அச்சுறுத்தல்களால் பலர் வீடியோ படமெடுத்து வெளியிடுவதில் மட்டுமே ஆர்வத்தை திருப்பிவிட்டனர். இது மாறவேண்டும்.
சுலோசனா ராமன், பெங்களூர்
உலகை குலுக்கிய வழக்குகள்! – ஆர் .ராஜேஷ் கன்னா
பள்ளிச் சிறுவன் கழுத்தறுக்கப்பட்டு கொலையான சம்பவத்தை சொன்ன பஸ் கண்டக்டரையே கொலையாளி ஆக்கிய லோக்கல் போலீஸ்... சிபிஐ விசாரிச்சு உண்மையை நிரூபிக்கலைன்னா, அந்த அப்பாவியின் நிலை என்னாகி இருக்கும்? நல்லாயிருக்கு!
சைதை சுரேஷ்குமார், விருகம்பாக்கம்
சகல சௌபாக்கியங்கள் அருளும் சக்தி வாய்ந்த சப்த கன்னிகள் !! - ஆரூர் சுந்தரசேகர்.
It is wonder to note that there is so much interesting facts about saptha kanniyargal. Usually in temples these idols are kept separately but not that much given significance I believe. After reading this article I have jotted down the purpose of worshipping each one of them for our materialistic life like Sri Bramhi - for education Sri Maheswari - for peace Sri Vaishnavi - for wealth Sri Koumari - for children Sri Vaarahi - for pleasure Sri Indhirani - for marriage Sri Chamundi - for foe and to get their blessings.
எஸ். சாய்லக்ஷ்மி, தாம்பரம்
நதிநீர் எழுத்துக்கள்... - ஆர்னிகா நாசர்
சூப்பர்ப்! ஒருவர் வாக்குறுதி கொடுக்கும்போது யோசிக்க வேண்டும். தனது கோரிக்கை நிறைவேறியதும், சொன்ன வாக்குறுதியை காப்பாற்ற வேண்டும் என்பது அனைவரும் பின்பற்ற வேண்டிய கோட்பாடு என்பதை ஆணித்தரமாக கூறியிருக்கிறார் ஆர்னிகா நாசர். பலே... பலே!
செபாஸ்டின் ஜெயராஜ், வேளாங்கண்ணி
ஹாங்காங்கில் முகமூடி அணிந்த காந்தி.. - நன்கொடை தினம்.. - ராம்
மிக அருமையான முயற்சி. இதெல்லாம் நம்ம தமிழ்நாட்டுக்கு சரிவராது. கடையை காலி பண்ணிட்டு, உண்டியலையும் தூக்கிட்டு போயிடுவாங்க. எனிவே, ஹாங்காங் போல் இங்கும் மக்கள் ஒருங்கிணைந்லால் மிக்க மகிழ்ச்சி.
திலோத்தமௌ ராஜசேகர், பொன்பரப்பி
கொரோனாவிற்கு மூக்கில் அடிக்கும் ஸ்ப்ரே தடுப்பு மருந்து! –ஆர் .ராஜேஷ் கன்னா
கொரோனாவுக்கு மூக்கில் அடிக்கும் ஸ்பிரே மருந்து நவம்பரில் வருதா? வருது வருது புலி கணக்கா சொல்லிட்டு இருக்காங்களே தவிர, கண்ணுல காட்ட மாட்டேங்கிறீங்களே?!
கமலா செல்வராஜ், நுங்கம்பாக்கம்
ஊட்டியில் கொரோனா கூடுகிறதா? குறைகிறதா? - நீலகிரி ஆட்சியர் பேட்டி!- ஸ்வேதா அப்புதாஸ்.
நீலகிரி மாவட்ட ஆட்சியர் கூறியதை போல், நாம் அனைவரும் சுய கட்டுப்பாட்டையும் ஒழுக்கத்தையும் முறையாக கடைப்பிடித்தாலே கொரோனா தொற்று ஓடியே போய்விடும் என்பது உறுதி.
ராதா வெங்கடேசன், மேற்கு சைதாப்பேட்டை
வேளாண் மசோதா சொல்வது என்ன..? - ராம்
வேளாண் மசோதாவினால் ஏற்படப்போகும் பலன், ரூபாய் மதிப்பிழப்பினால் ஏற்பட்ட மாற்றம் என பல்வேறு விஷயங்களை கலகலப்பாக எடுத்துரைத்தார் கும்பகோணம் சுவாமிநாத சர்மா. பாராட்டலாம்.
பத்மாவதி ராஜகோபால், மாயவரம்
அதிபருக்கு கொரோனா..! - வைதேகி சீனிவாஸ்
அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கு கொரோனாவா? பின்னே... எல்லாரையும் கட்டிப் பிடிச்சு, கைகுலுக்கிட்டு இருந்தா, ஏன் வராது? அவருக்கு வந்தா 3 நாள்... நமக்கு வந்தா, சங்கு ஊதிடுவாங்க.
பிலோமினா மேரி, நசரத்பேட்டை
ஊடகத்தை கேள்வி கேட்ட சரண்! - ஸ்ரீநிவாஸ் பார்த்தசாரதி
ஊடகத்தை கேள்வி கேட்ட எஸ்பிபி.சரண்... கரெக்ட்தான்! இல்லாததையும் பொல்லாததையும் எழுதி, கேள்விகள் கேட்டால் யாருக்குத்தான் கோபம் வராது?
செல்வேந்திரன், நாகை
கிராமசபைகளில் தடையை மீறிய கண்டன தீர்மானம்... - நமது நிருபர்
தடையை மீறி நடந்த கிராமசபை கூட்டங்களில், மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை கண்டித்து திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் தீர்மானம் நிறைவேற்றியது பாராட்ட வேண்டிய விஷயம். ஆனால், எழுதி வைத்ததை படிப்பதற்கு ஏன் இப்படி திக்கித் திணறுகிறார் என தெரியவில்லை.
செந்தில் குமார், கோவை
ஒரு நடமாடும் சுமைதாங்கியின் கதை... - கவிஞர் மு.தவசீலன்
ஒரு நடமாடும் சுமைதாங்கியின் கதை என சீதா பாட்டியின் அன்றாட அவலநிலையை கவிதையாக வடித்திருக்கிறார் தவசீலன். கண்ணீரை வரவழைத்தது.
தேவராஜ் சுப்பிரமணி, வளசரவாக்கம்
அம்புலிமாமா ஓவியர் அமரர் ஆனார்!... - வாசுகி சந்திரன்
நாங்கெல்லாம் ஸ்கூல்ல படிக்கும்போது நொறுக்குத்தீனி காசுகளை சேர்த்து அம்புலிமாமா வாங்கி படிப்போம். அதுவும் கதைகளுக்கான படங்களை சிவசங்கர் உயிரோட்டமாக வரைந்திருப்பார். இப்போது அந்த படக்கதைகளை படித்தாலும் உயிரோட்டமாக இருக்கும்.
ஹரிஹரன், சாலிகிராமம்
1008 முறை காயத்ரி மந்திரத்தை உச்சரித்தவர்.... -கண்மணி மைந்தன் ஸ்ரீகாந்த்
இந்து முன்னணி தலைவர் ராமகோபாலனை நேரில் சந்தித்தபோது, பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள், மந்திர உச்சாடனங்களை மிக அழகாக விளக்கினார். அவரது திடீர் மறைவு வேதனையை ஏற்படுத்தியது.
ரேணுகா பார்த்திபன், நெமிலிச்சேரி
பெண்களை ஆபாசமாக பேசியவரை விளாசிய பெண்கள்... - சுகந்தி பாஸ்கரன்
கேரளாவில் மட்டுமல்ல, இந்தியாவின் மற்ற மாநிலங்களில் தெருவுக்கு 4 பெண்கள் நயவஞ்சகர்களை எதிர்த்து செயல்பட்டால், பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட பல்வேறு குற்றச் சம்பவங்களை செய்ய ஆண்கள் அஞ்சுவர். தொடரட்டும் பெண்களின் எதிர்ப்பு நடவடிக்கைகள்.
யமுனா பிரபாகரன், ஊத்துக்கோட்டை
கூலிப்படை... – பா.அய்யாசாமி
நீதிபதி செல்வம் போன்றவர்கள் அந்தந்த மாவட்ட நீதிமன்றங்களில் இதுபோன்ற தன்னார்வ நடவடிக்கைகளை செயல்படுத்தினால், இனி கூலிப்படை என்ற வார்த்தையே குற்றப் பதிவேடுகளில் இருக்காது என உறுதி கூறலாம். மிக சிறப்பு.
பக்ருதீன் அலி, சேலையூர்
யாருப்பா நீ?! - கே. ராஜலட்சுமி
எஸ்பிபி குறித்து யாருப்பா நீ என்ற ராஜலட்சுமியின் கவிதை நெகிழ வைத்தது. அவரது உடல் மறைந்தாலும், அவரது பாடல்கள் நம் நினைவுகளில் என்றென்றும் நிலைத்திருக்கும்.
சியாமளா விஸ்வம், ராயப்பேட்டை
குக் வித் தேவி ... - ராம்
ஆன்லைன்ல படிக்கிற பசங்க, கணவருக்கு ஈவ்னிங் என்ன ஸ்னாக்ஸ் வாங்கலாம்னு யோசிச்சேன். என் ஃபிரண்ட் இந்த வீடியோவை காண்பிச்சா. உடனே வெஜிடபிள் மோமோஸ் ரெடி பண்ணிட்டேன். ஐ லைக் விகடகவி அண்ட் குக் வித் தேவி!
வித்யாலட்சுமி, அண்ணாநகர் மேற்கு
தெளிவு தரும் இந்து மதம்... - திருமண மந்திரங்களின் பொருள் தான் என்ன? பாகம்-2 - கிருஷ்ணாபுரம் சுந்தர்ராமன்.
திருமண மந்திரங்களின் பொருள் குறித்து கடந்த 2 வாரங்களாக சுந்தர்ராமன் மிக அழகாக விளக்கியுள்ளார். திருமணமாகி 10 ஆண்டுகள் கழித்து, அவர் மூலமாக அதன் தாத்பரியத்தை அறிந்து கொள்வதில் மகிழ்ச்சி.
லட்சுமி ராமகிருஷ்ணன், மேடவாக்கம்
சகல சௌபாக்கியங்கள் அருளும் சக்தி வாய்ந்த சப்த கன்னிகள்!! - ஆரூர் சுந்தரசேகர்.
சப்த கன்னியர்களின் வரலாறு, வீரம், ஜெபிக்க வேண்டிய மந்திரங்களை சுந்தரசேகர் மிக விரிவாக விளக்கியுள்ளார். மிக்க மகிழ்ச்சி.
ராஜேந்திரன், கொளத்தூர்
வலைக்கள்ளன்
வலைகள்ளனின் குசும்பே தனி. பணக்காரரிடம் வக்கீல் சொல்லும் நல்ல, கெட்ட செய்தி... தந்தை-மகன் கார் விவாதம், கடைசியில்... எங்களை மாதிரி ஒத்துமையா இருக்கிற பெண்களுக்கு இடையே சிண்டு முடிச்சிட்டியே தலீவா!
தீட்சிதா, அட்சயா, அனுஷ்கா, மாதவரம்
வாவ் வாட்ஸப்!
சென்ற வார வாட்ஸ் அப் படங்களின் தலைப்பு, டி.ராஜேந்தர் ஸ்டைலில் அடிச்சேன்டா கோலு, போட்டேன்டா பாலு என கலக்கலாக, காமெடியாகவும் அமைந்திருந்தன. கேட்ச்சிங் தலைப்பை செலக்ட் பண்ண குழு வெச்சிருக்கீங்களா? ஜமாய்ங்க!
கௌஷிக், சூர்யா, ரோஹித், சென்னை
மலைக்கிராமத்து தேவதை... - மகா டீச்சர்... - மரியா சிவானந்தம்
மலைகிராமத்து தேவதை மகா டீச்சரின் பணிகள் மிக மிக மெச்சத்தகுந்தது. இதுபோன்ற ஆசிரியர்களை நாம் ஊக்குவித்தால் மட்டுமே பழங்குடி, மலைகிராம மக்களின் நிலை மாறும். அப்பணியை மரியா சிவனாந்தம் சிறப்பாக முன்னெடுத்து வைத்திருக்கிறார்.
தங்கமணி பாஸ்கரன், வாணியம்பாடி
தொடரும் கொடூர நிர்பயா மரணங்கள்.. - தில்லைக்கரசி சம்பத்
தொடரும் நிர்பயா மரணங்கள் தொடர்பான கட்டுரையில் தில்லைக்கரசி எடுத்து வைத்துள்ள வாதங்கள் ஆட்சியாளர்களுக்கும் காவல் துறையினருக்கும் சுளீர் சாட்டையடியாக விளங்குகிறது. சட்டங்கள் கடுமையாகி துரிதமானால் மட்டுமே இதுபோன்ற பரிதாப அவலங்கள் மாறும்.
மாயவரம் கணேசன், நங்கநல்லூர்
மூளையை உண்ணும் அமீபா... - நிவேதிதா சுந்தர்
போச்சுடா... முதல்ல வந்த கொரோனாவே இன்னும் போகலை. அதுக்குள்ள மூளையை உண்ணும் அமீபாவா?! தலைவலி போய் திருகுவலியா மாறிடும் போலிருக்கே!
பெரியசாமி, சேலம் குகை
உலகின் மிக நீளமான லே-மணாலி 9 கிமீ சுரங்க நெடுஞ்சாலை... - லாவண்யா குமரன்
வாவ்... சூப்பர்! இனி பேரிடர் காலத்திலும் அதன் வழியே மீட்பு பணிகளை மேற்கொள்ளலாம். பனிக்காலத்தில் தாக்க வரும் எதிரி படைகளுக்கும் துரித கதியில் பதிலடி கொடுக்கலாம். மோடியின் முயற்சிக்கு பாராட்டுகள்.
சாருமதி பாலா, மும்பை
பாலிவுட்டை வளைக்கும் போதை மருந்து! .., மாஃபியா கும்பல்?! – மும்பைவாலா
மும்பை பாலிவுட் எப்பவோ மாபியா கும்பல்களின் பிடிக்கு போய்விட்டது. ஏன்னா, அவர்களிடம் பாலிவுட் குடும்ப பிரபலங்கள் கோடிகளில் கறுப்பு பணத்தை கொடுத்து, இதுபோன்ற போதை பிசினஸ்களில் பலரை வளைப்பதாக திரையுலக வட்டாரங்கள் கூறுகின்றன. இனி எங்கே மாறப் போகிறது பாலிவுட்?!
அம்ஜத்கான், செங்கல்பட்டு
மூளையை உண்ணும் அமீபா... - நிவேதிதா சுந்தர்
என்னது... மூளையை உண்ணும் அமீபாவா? போச்சுடா! தப்பித் தவறி இந்தியா பக்கம் பரப்பி விட்டுடாதீங்க அமெரிக்க சொந்தங்களே... ஏற்கெனவே கொரோனாவால மண்டை காய்ஞ்சி போயிருக்கோம். இதுல, இது வேறயா?!
வினோதினி ஜெயராஜ், நாகர்கோவில்
உலகின் மிக நீளமான லே-மணாலி 9 கிமீ சுரங்க நெடுஞ்சாலை... - லாவண்யா குமரன்
லே-மணாலி இடையே மிக நீளமான சுரங்க நெடுஞ்சாலையா? வாவ்! இதுபோன்ற பல்வேறு ஆக்கப்பூர்வ செயல்பாடுகளுக்காக பிரதமர் மோடியை உச்சி குளிர பாராட்டலாம்.
வைதேகி கண்ணன், சோழவரம்
உள்ளதைச் சொல்வேன்! - 7 - அண்ணாதுரை கண்ணதாசன்
அந்த கால தமிழ் திரையுலகில் டி.எஸ்.பாலையா போன்ற ஒருசில ஜாம்பவான்கள், தங்கள் குடும்பத்தினரிடம் கூட சொல்லாமல் சொத்து சேர்த்தும், அவரது சந்ததியில் யாருக்கும் பயனில்லாமல் போய்விட்டது என்பது வேதனையான விஷயம்.
அப்துல் ரஹ்மான், ராணிப்பேட்டை
தீவிரவாத தாக்குதல் சதி முறியடிப்பு.... - டெல்லிவாலா
இந்தியாவில் தீவிரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்ட நான்கு பேரை டெல்லி போலீசார் பிடித்திருப்பதற்கு பாராட்டு. இன்னும் தேடுதல் பணியை தீவிரப்படுத்தி, மற்ற தீவிரவாத குழுக்களையும் பிடிக்க வேண்டும்.
ரகுநாதன், மடிப்பாக்கம்
ராக தேவதைகள்... - மாயவரத்தான் சந்திரசேகரன்
சென்ற வார ராக தேவதையில், இந்தோள ராகத்தின் சிறப்பு, அதை பாடியவர்கள் மற்றும் பாடல்களை நினைவுகூர்ந்து மாயவரத்தான் மிக அருமையாக விளக்கினார். கஜல் கச்சேரி போல் கலகலப்பாக அமைந்திருந்தது.
ராதா வெங்கட், ஆலப்பாக்கம்
வந்தார்கள்... வென்றார்கள்...-7
வரவர மதனின் வந்தார்கள், வென்றார்கள் தொடர், டென்ஷனுடன் நகம் கடிக்குமளவுக்கு விறுவிறுப்பாக உள்ளது. எதிரியிடம் சிக்கிய மகனை மீட்க, வயதானாலும் பஹ்ரான் எதிர்த்து போரிட செல்ல... வயசானாலும் வீரம் குறையலை என்பதை எடுத்துக் காட்டுகிறது.
மாயா குப்புசாமி, வடபழனி
முதல்வர் வேட்பாளர்... உச்சகட்டத்தில் நீயா நானா போட்டி..!. - ஜாசன் (மூத்த பத்திரிகையாளர்)
அதிமுக வில் முதல்வர் வேட்பாளர் போட்டியில் இபிஎஸ்-ஓபிஎஸ் மட்டும் நீயா, நானா போட்டியில் இல்லை. அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏக்களுக்கும் உள்ளது. இருவருக்கும் தூபமிட்டபடி, தங்களுக்கு ஒரு சான்ஸ் என எதிர்பார்க்கின்றனர். ஊரு ரெண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்பார்களே, அதுபோல... சசிகலா வெளியே வந்ததும் காட்சிகள் மாறும். அப்போது மேற்கண்ட இருவர் மீண்டும் ஒன்றுபடுவர் என்பதையே இக்கட்டுரை எடுத்துக் காட்டுகிறது. மிக சிறப்பு!
முனிரத்தினம், செங்கல்பட்டு
வலையங்கம்
உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் குற்ற புலனாய்வு பிரிவில் உள்ள சிபிஐ உள்பட அனைத்து தரப்பினருமே மனசாட்சி அற்றவர்கள். மத்தியில் ஆளுங்கட்சி என்ன சொல்கிறதோ, அதை செய்யும் துறையாக மாறிவிட்டது என்பதை வலையங்கம் தெளிவாக உணர்த்துகிறது.
ராதாகிருஷ்ணன், படப்பை
ஊடகத்தை கேள்வி கேட்ட சரண்! - ஸ்ரீநிவாஸ் பார்த்தசாரதி
நமது சமுதாயம் எப்போது கண்ணியமான முறையில் இயங்கும்.? ஓர் இரங்கல் கூட்டத்தில் ஏன் "வருகை பதிவேடு" பதிவு செய்யவேண்டும்?
எஸ். பார்கவன், அமெரிக்கா
மலைக்கிராமத்து தேவதை... - மகா டீச்சர்... - மரியா சிவானந்தம்
இதை போல கோவையை அடுத்து நல்லாம்பாளயம் பள்ளிகூடம் பற்றியும் ஒரு வரலாறு உண்டு. ஆசிரியர்களுக்கு வாழ்த்துக்கள். வளர்க இவர்களது பணி.
எஸ். பார்கவன், அமெரிக்கா
தொடரும் கொடூர நிர்பயா மரணங்கள்.. - தில்லைக்கரசி சம்பத்
ஆதிக்க சாதி என்பது யார் யார்? அதையும் சொல்லியிருக்கிலாம். சாதி மதம் இனம் மொழி என பாராமல் கற்பழிப்பு குற்றங்களுக்கு ஊர்ஜிதப்படுத்திய உடன் 48 மணி நேரத்தில் தூக்கிலிட வேண்டும். இது தான் ஒரே தீர்வு. ஆனந்த்.
ஆனந்தன், சென்னை
வேளாண் மசோதா சொல்வது என்ன..? - ராம்
In my view consumers will be benefited. The Elimination of middleman is good provided the regulatory checks are taken care. To answer my HK friends, we used to buy airline tickets through agents few years before. I am sure most of us online either the airlines directly or specialist vendor (Cleartrip / Gobibo / make my trip). If you realise you will be paying exorbitantly more in domestic sectors especially close to travel dates. On top of it airlines have innovative ideas of charging for additional leg space (thank God using toilet is free until now). Change is welcome if it’s for good for farmers.
ரவி நரசிம்மன், ஹாங்காங்
சகல சௌபாக்கியங்கள் அருளும் சக்தி வாய்ந்த சப்த கன்னிகள் !! - ஆரூர் சுந்தரசேகர்.
Nalla pala thaghavalgal about Sapthakanniyar Aroor.Sundarasekar kartturail kottikidakkirathu!Thanks a lot!!Geethamani..pazhavathankattalai.
சுப்ரமணியன்

Leave a comment
Upload