தொடர்கள்
Daily Articles
உலகை குலுக்கிய வழக்குகள்! – ஆர் .ராஜேஷ் கன்னா

2020911192949401.jpg

புகழின் உச்சியில் இருப்பவர்கள் நீண்ட நாட்கள் பூமியில் தங்குவதில்லை!

இங்கிலாந்திலுள்ள லீவர்பூலில் பிறந்தவர், தனது இளமை பிராயத்தில் ஆங்கில பாடலாசிரியர், பாடகர், எழுத்தாளர் மற்றும் இசையமைப்பாளராக தனது தனிதிறமைகளில் ஜொலித்தவர் ஜான் வின்ஸ்டன் ஓனோ லெனான்.

ஜான் வின்ஸ்டன் ஓனோ லெனான் தனது நண்பர்களுடன் இணைந்து தி பீட்டில்ஸ் என்ற இசைக்குழுவை உருவாக்கியவர்களில் முக்கியமானவர் .

ஆரம்பத்தில் ஜான் வின்ஸ்டன் ஓனோ லெனான் பாடல்கள் மெல்ல உலகம் முழவதும் பரவ ஆரம்பித்து புகழ் பெற ஆரம்பித்தார்.

இங்கிலாந்து நாட்டில் பிறந்து இருந்தாலும், தன் இசைக்கு கிடைத்த வரவேற்பால் அமெரிக்காவில் செட்டில் ஆனார்.

ஜான் வின்ஸ்டன் ஓனோ லெனானை இசை ரசிகர்கள் ஜான் லெனான் என செல்லமாக அழைக்க தொடங்கினர்.

1965-ம் ஆண்டு கலிஃபோர்னியாவில் தி பீட்டில்ஸ் இசைகுழு நடத்திய ராக் இசை கச்சேரிக்கு கிட்டதட்ட 17000 பேர் பார்வையாளராக வந்து அசத்திவிட்டனர்.

தி பீட்டில்ஸ் இசை குழு தங்கள் இசைக் கச்சேரிக்கு ஊதியமாக அப்போது நாற்பதாயிரம் அமெரிக்க டாலர்களை பெற்றனர்.

தி பீட்டில்ஸ் இசை குழுவில் இருந்த மற்றொரு உறுப்பினர் பௌல் மக்கார்ட்டினியுடன் சேர்ந்து இசையமைத்த இமேஜின் மற்றும் கிவ் பீஸ் ஏ சான்ஸ் என்ற இரு பாடல்கள் இன்று வரை உலக அமைதிக்கான போராட்டங்களில் முக்கிய இடம் பெற்ற ஆங்கில பாடலாக ஒலிக்கிறது.

1964-ம் ஆண்டுகளில் பிரிட்டனில் தொடங்கப்பட்ட தி பீட்டில்ஸ் ராக் இசை குழுவினரின் பாடல்கள் அமெரிக்காவின் தொலைக்காட்சிகளில் செம ஹிட் ஆனாது.

தி பீட்டில்ஸ் இசைகுழுவில் இருந்த ஜான் லெனான் புகழின் உச்சிக்கு சென்றார்.

ஜான் லெனான் தனது முதல் மனைவியுடன் ஏற்பட்ட மனகசப்பில் விவாகரத்து பெற்று கொண்டு, ஜப்பான் நாட்டை சேர்ந்த மல்டி மீடியா ஆர்டிஸ்ட் யோகோ ஓனோவை இரண்டாவது திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் வாழ்ந்தார்.

ஜான் லெனான் தனது இரண்டாவது மனைவி யோகா ஓனோவை உடன் தனியாக இசை ஆல்பங்களை தயாரித்து வெளியிட்டு, மில்லியன் கணக்கான ரசிகர்களை கவர்ந்திழுத்து புகழின் உச்சிக்கு சென்றார்.

ஜான் லெனான் இடது சாரி கொள்கை பற்று உடையவர் என்பதால் இவரை சிஐஏ, எஃப்பிஐ புலனாய்வு அமைப்புகள் கண்காணித்து வந்தது.

1980-ம் ஆண்டு, டிசம்பர் மாதம் 8 தேதி……

நியூயார்க்கில் இருந்து வெளியாகும் பிரபல பத்திரிக்கையான “ரோலிங் ஸ்டோன்” முகப்பு அட்டை படத்திற்கு ராக் இசையில் பிரபலமாக இருக்கும் ஜான் லெனானை பத்திரிக்கையின் புகைப்பட பெண் கலைஞர் அனி லீபோவிட்ஸ் அணுகினார்.

ஜான் லெனான் தனது வீட்டில் இருந்தவர்… தன்னை மட்டும் எடுத்து பத்திரிக்கையின் முகப்பு அட்டையில் போட வேண்டாம், தனது ஆசை மனைவியுடன் இருக்கும் புகைப்படத்தையும் சேர்த்து போட சொன்னார்.

ஜான் லெனான் தனது ஆடைகளை களைத்து விட்டு முழுநிர்வாண கோலத்தில் தனது மனைவி முன்பு வந்து நின்றார்.

ஜான் லெனான் தனது மனைவி அணிந்திருந்த மேலாடையினை விளக்கினால் செக்சியான போஸ் கிடைக்கும் என்று புகைப்பட நிபுணியிடம் சொன்னார்.

ஜான் லெனானின் மனைவி, உடை எதையும் களைய தேவையில்லை என்று புகைப்பட நிபுணி சொல்லிவிட்டார்.

ஜான் லெனான் தனது மனைவியுடன் தனது நிர்வாண கோலத்தில் கீழே உள்ள அட்டை படத்தில் இருப்பது போன்று சுருண்டு புகைப்படங்கள் எடுக்கப்பட்டது.

2020911193226988.jpg

தனது மனைவி மீது, தான் வைத்திருக்கும் அன்பே புகைப்படமாகியது என்று ஜான் லெனான் புகைப்பட நிபுணியிடம் பெருமைபட்டுகொண்டார்.

“ரோலிங் ஸ்டோன்” பத்திரிக்கை புகைப்பட நிபுணிக்கு தான் எதிர்பார்த்ததற்கும் மேலாக, உலக புகழ்பெற்ற பாடகரிடம் இருந்து சிறந்த புகைப்படங்கள் கிடைத்தது என்று பெருமிதத்துடன் ஜான் லெனான் வீட்டிலிருந்து புறப்பட்டார்.

இதற்குள் மாலை ஆகிவிடவே, அடுத்த ரிக்கார்டிங்குக்கு நேரம் ஆகிவிட்டது என்று ஜான் லெனான் தனது மனைவியுடன் தனது வீட்டிலிருந்து கிளம்பி அவசரமாக ஸ்டியோவிற்கு சென்று பணிகளில் ஈடுபட்டார்.

டிசம்பர் 8, முன்னிரவு 10.50 மணி……

ஜான் லெனான் தனது ஸ்டியோவில் தனது ரிக்கார்டிங் பணிகளை முடித்து விட்டு தனது வீடு இருக்கும் ஆடம்பர மன்ஹாட்டன் அடுக்கு மாடி கட்டிடத்திற்குள் நுழைவதற்கு நடந்து வந்து கொண்டிருந்தார்.

ஜான் லெனானின் பின்புறத்திலிருந்து ஒரு உருவம் தனது கைதுப்பாக்கியால் அடுத்தடுத்த நான்கு ரவுண்ட் சுட்டது.

துப்பாக்கி குண்டுகள் சல்லடையாக உடலில் துளைக்க ரத்த வெள்ளத்தில் ஜான் லெனான் தரையில் சாய்ந்தார்.

தரையில் ரத்த வெள்ளத்தில் இருந்த ஜான் லெனானை அங்கிருந்தவர்கள் அருகில் இருக்கும் ஆஸ்பித்திரிக்கு கொண்டு சென்ற போது, வரும் வழியிலேயே உயிர் பிரிந்து விட்டது என்று மருத்துவர்கள் கைவிரித்தனர்.

துப்பாக்கியில் சுட்ட மர்ம நபர் தப்பி ஓடாமல் காவல்துறை வரும் வரை சம்பவ இடத்திலேயே நின்றிருந்தார்.

ஜான் லெனானை சுட்ட மர்ம நபரின் பெயர் மார்க் டேவிட் சேப்மேன் என்கிற சேப்மேன், ஹாவாய் பகுதியில் இருந்து நேற்று வந்து ஜான் லெனானிடம் ஆட்டோகிராப் வாங்கினேன் என்று சுற்றியிருந்த பொதுமக்களிடம் தெரிவித்தான்.

வழக்கம் போல் சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் விரைந்து வந்து பார்வையிட்டு, அருகிலிருந்த மருத்துவமனையில் இறந்த ஜான் லெனானின் உடலை போஸ்ட்மார்டம் செய்ய அனுப்பி வைத்தனர்.

2020911193304202.jpg

ஜான் லெனானை சுட்டு கொலை செய்த குற்றவாளி சேப்மேன் சம்பவ இடத்தில் கைது செய்து கொலை செய்ய பயன்படுத்திய துப்பாக்கியை காவல்துறையினர் பறிமுதல் செய்து விசாரணைக்கு அழைத்து சென்றனர்.

ஜான் லெனான் நடத்தி வந்த பீட்டில்ஸ் இசைக்குழு உலகெங்கும் புகழ் பெற ஆரம்பித்து விட்டது. ஜான் லெனான் வெளியிடும் கருத்துக்கள் அவர் புகழ் உலகளவில் கடவுள் ஏசுபிரானை விட அதிக புகழ் பெற ஆரம்பித்துவிட்டதால், அவரை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்தேன் என கொலையாளி குற்றவாளி சேப்மேன் கொலைக்கான காரணத்தினை காவல்துறை விசாரணையில் தெரிவித்தான்.

குற்றவாளி சேப்மேனை கைது செய்து, அவனிடமிருந்து கொலைக்கு பயன்படுத்திய துப்பாக்கியை காவல்துறையினர் கைப்பற்றி நீதிமன்றத்தில் ஓப்படைத்தனர்.

ஜான் லெனான் கொலை வழக்கு நீதிமன்ற விசாரணைக்கு வந்தது.

நீதிமன்றத்தில் கொலை குற்றம் சாட்டப்பட்ட சேப்மேன் நீதிபதி முன் நிறுத்தப்பட்டார். சேப்மேன் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்று அவரது வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தன் தரப்பு வாதமாக வாதாடினார்.

ஹாவாய் பகுதியில் இருந்து நியூயார்க் நகருக்கு குறுகிய நேரத்தில் வந்து தனது கொலை திட்டத்தினை நிறைவேற்றி இருப்பதால், கொலையாளி சேப்மேன் மனநிலை சரியில்லாதவர் என்று எடுத்து கொள்ள முடியாது என்று சிஐஏ புலனாய்வு அமைப்பினர் நீதிமன்றத்திற்கு தெரிவித்தனர்.

அமெரிக்க நாட்டில் கொலை செய்பவருக்கு வழங்கப்படும் அதிகபட்ச ஆயுள் தண்டனையை நீதிமன்றம் வழங்கி, கொலையாளி சேப்மேனை சிறையில் ஆயுள் கைதியாக அடைத்தது.

ஜான் லெனானை கொலை செய்யும் போது 25 வயதாக இருந்த சேப்மேன், தற்போது 65 ஆகியும் சிறை தண்டனை அனுபவித்து வருகிறார்.

தான் நீண்ட நாட்களாக சிறையில் வாடி வருவதாகவும், தான் ஒரு ஆழ்ந்த கிறித்துவ மதப்பற்றுள்ளவர் என்ற காரணத்தினை எழுதி, தனக்கு பரோல் வழங்கும் படி 25 தடவைகள் ப்ரோல் வாரியத்தில் மனுக்கள் அளித்தும், மனுவினை நிராகரித்துவிட்டனர் என்று கைதி சேப்மேன் கவலை தெரிவிக்கிறார்.

இனி சிறையில் இருந்து பரோலில் வெளிவர அடுத்த இரண்டு வருடம் கழித்து தான் கைதி சேப்மேன் பரோல் மனுவை தாக்கல் செய்யமுடியும்.

எட்டு வருடங்களுக்கு முன்பு… சிறையில் இருக்கும் கைதி சேப்மேன், ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு, சிறைக்கு அருகில் வீடு எடுத்து தங்க வைத்துள்ளார். கிட்டதட்ட உதய கீதம் படத்தில் வரும் மோகன் ரேவதி காதல் காட்சி போல் அமெரிக்கா சிறையிலும் நிஜத்தில் நடந்துள்ளது.

2020911193658151.jpg

பல கோடி ரசிகர்களை தனது பாடல்களாலும், இசையாலும் மயக்கிய ஜான் லெனானின் கடைசி புகைப்படமாக எடுக்கப்பட்ட ரோலிங் ஸ்டோன் அட்டை படம்தான், கடந்த 40 வருடங்களில் வந்த மிக சிறந்த பத்திரிக்கை கவர் புகைபடம் என அமெரிக்க சொசைட்டி மேகசின் எடிட்டர்ஸ் விருது வழங்கி கவுரவித்துள்ளது.

தற்போது, தனது இழிவான செயலுக்கு மன்னிப்பு கோருவதாக ஜான் லெனானை கொலை செய்த சேப்மேன் மன்னிப்பு கோரியுள்ளான்.

பாடகர் ஜான் லெனானின் அழுகிய சொத்தை பல்லில் இருந்து அவரது டிஎன்ஏ-வை எடுத்து, அவரது பிரதியாக மற்றொரு நபரை குளோனிங் மூலம் மீண்டும் உருவாக்கினால், பாடகர் லெனான் இசையை உயிர்பித்து கேட்க முடியும் என்று 2011 ஆண்டு பாடகர் ஜான் லெனானின் அழுகிய பல்லை ஏலத்தில் எடுத்த கனடா நாட்டு பல் மருத்துவர் மைக்கேல் ஜுக் முயற்சியை தொடங்கி இருக்கிறார்.

ஜான் லெனான் படுகொலை உலகை குலுக்கிய வழக்குகளில் முக்கிய இடம் பிடித்துள்ளது.

அமெரிக்க இசை வரலாற்றில் புதிய தலைமுறை இசை ரசிகர்களிடையே மறைந்த ஜான் லெனானுக்கு இன்றும் தனி இடம் உண்டு!