தொடர்கள்
Daily Articles
பாஜ தலைவர் உருவில் ₹100 நாணயம்... - நர்மதா வெங்கட்

2020914105147612.jpeg

அகில இந்திய பாரதிய ஜனதா கட்சியின் முன்னோடியான ஜனசங்கத்தை நிறுவிய தலைவர்களில் ஒருவர், ராஜஸ்தான் மாநிலத்தில் பாரம்பரிய குடும்பத்தை சேர்ந்த ராஜமாதாவான விஜயராஜே சிந்தியா. இவர், ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த 1919-ம் ஆண்டு, அக்டோபர் 12-ம் தேதி பிறந்து, கடந்த 2001-ம் ஆண்டு, ஜனவரி 25-ல் உடல்நலக் குறைவினால் காலமானார்.

இவர், மறைந்த காங்கிரஸ் தலைவர் மாதவராவ் சிந்தியா, ராஜஸ்தான் மாநில முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜேவின் தாய். அதேபோல், தற்போதைய மாநிலங்களவை பாஜ உறுப்பினர் ஜோதிராதித்ய சிந்தியா, இவரது மகன்வழி பேரனாவார்.

இந்நிலையில், அனைவராலும் ‘ராஜமாதா’ என அழைக்கப்பட்ட விஜயராஜே சிந்தியாவின் நூற்றாண்டு பிறந்த நாளை முன்னிட்டு, கடந்த 12-ம் தேதி புதுடெல்லியில் மத்திய நிதியமைச்சகத்தினால் உருவாக்கப்பட்ட ₹100 நாணயத்தை பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார்.

இவ்விழாவின்போது, ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து விஜயராஜே சிந்தியாவின் குடும்பத்தினர் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து உறவினர்கள் பிரதமர் மோடியிடம் காணொலி காட்சி மூலம் உரையாடினர்.