தொடர்கள்
Daily Articles
யானை மீதிருந்து விழுந்த பாபா ராம்தேவ்... - செளம்யா

202091419110888.jpg

உத்தரப் பிரதேச மாநிலம், மதுராவின் கோகுல் மந்திரில் உள்ள குரு ஷர்தானந்தா ஆசிரமத்துக்கு கடந்த 11-ம் தேதி பதஞ்சலி நிறுவனர் பாபா ராம்தேவ் (54), யோகா பயிற்சிகளை மாணவர்களுக்கு கற்றுத் தர வந்திருந்தார். பின்னர் அங்கு கூடியிருந்த மக்கள் மற்றும் மாணவர்கள் முன்னிலையில் பாபா ராம்தேவ் பல்வேறு யோகா பயிற்சிகளை செய்து காண்பித்தார். இந்நிகழ்ச்சியை ஒரு தனியார் தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.

இந்நிலையில், யானைமீது ஏறி பல்வேறு யோகா பயிற்சிகளை பாபா ராம்தேவ் மேற்கொள்ளப் போவதாக அறிவிக்கப்பட்டது. பாபா ராம்தேவ்வும் யானை மீது யோகா பயிற்சிகளை செய்யும்போது, அந்த யானையை பூச்சி ஒன்று தாக்கியதால் வேகமாக அசைந்தது. இதனால் யானை மீதிருந்த பாபா ராம்தேவ் கீழே விழுந்திருக்கிறார். இதில் அவருக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை எனக் கூறப்படுகிறது. இந்த வீடியோ காட்சிகள் தற்போது வலைதளப் பக்கங்களில் வைரலாக பரவி வருகிறது.

முன்னதாக, ‘கொரோனா வைரசை குணப்படுத்தும் முதல் ஆயுர்வேத மருந்து’ என தனது பதஞ்சலியின் புதிய மருந்துகளை பாபா ராம்தேவ் அறிமுகப்படுத்தி வைத்திருக்கிறார். இருப்பினும், சில மணி நேரங்களிலேயே பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனத்திடம் அம்மருந்துகளின் பெயர் மற்றும் கலவை குறித்த விவரங்களை தெரிவிக்கும்படி மத்திய ஆயுஷ் அமைச்சகம் கேட்டுக் கொண்டது. மேலும், கொரோனாவை குணப்படுத்தும் மருந்து என்ற பெயரில் விளம்பரப்படுத்துவதற்கும் மத்திய ஆயுஷ் அமைச்சகம் தடை விதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.