தொடர்கள்
Daily Articles
இது ஒரு கொலு காலம் !   போட்டிக்கு நீங்க ரெடியா ???

2020915134347846.jpg

ஒவ்வொரு வருடமும் வருகிறது தமிழர்களின் அந்த அழகிய பாரம்பரிய பண்டிகையான நவராத்திரி...!

ஒரு படி முதல் ஒன்பது படி வரை, பல விதமான கொலுக்கள், பல விதமான அளவுகளில் சுற்றிலும் பார்க் வைத்து, இரயில் வைத்து விதவிதமாக அவரவர் அழகியல் ரசனைக்கும் சூழலுக்குமேற்ப கொலு வைக்கும் நேரம் இது!.

பொம்மைகளின் அளவை விட, படிகளின் எண்ணிக்கையை விட, ஒவ்வொரு நண்பர்களின் இல்லங்களுக்கும் சென்று வெற்றிலை பாக்கு பரிமாறிக்கொள்வது தானே ஹைலைட் !

ஆனால் இந்த வருடம் கரோனாவினால் அதுவும் சுலபமில்லாமல் போய் விட்டது வருத்தம் தான்.

அதனால் என்ன? விகடகவி மின்னிதழில் உங்கள் கொலு பற்றிய புகைப்படம், வீடியோ போட்டு அசத்தலாமே…

என்ன டிஜிட்டலாக சுண்டல் மட்டும் பரிமாறிக்கொள்ள முடியாது !!

உலகின் எந்த பாகத்திலிருந்தாலும் உங்கள் வீட்டு கொலுவை உங்கள் பெயர், ஊர் குறிப்பிட்டு புகைப்படம் அல்லது வீடியோ எடுத்து info@vikatakavi.in என்ற மின்னஞ்சலுகு அனுப்பலாம். அல்லது எங்கள் www.vikatakavi.in என்ற வலைப்பக்கத்திற்கு சென்று ‘நீங்களும் நிருபராகலாம்' என்ற பகுதியில் நீங்களே வலையேற்றலாம்.

இல்லை எனக்கு இதெல்லாம் ஆவாது... வாட்சப் மட்டும் தான் என்றாலும் +918248047526 என்ற எண்ணுக்கு உங்களது கொலுவின் படம் அல்லது வீடியோவினை வாட்சப் செய்யலாம்.

வரும் சனிக்கிழமை முதல் அடுத்த சனிக்கிழமை வரை ( 17-10-2020 முதல் 22-10-2020) வரை கொலு கொண்டாட்டம் உங்கள் விகடகவியில்..!!

டிஜிட்டல் வெற்றிலை பாக்கு மாற்றிக் கொள்ளலாம் வாருங்கள் !!! சிறந்த கொலுவாக தேர்ந்தெடுக்கப்படும் படம் அல்லது வீடியோவிற்கு பரிசுகள் காத்திருக்கின்றன.

- விகடகவி ஆசியர் குழு !!