தொடர்கள்
பொது
கொரோனாவுக்கு பின் பள்ளிக்கூட அனுபவம்.. - நமது நிருபர்

20210022192343442.jpeg

மங்கையர்க்கரசி (10-ம் வகுப்பு, அரசு பெண்கள் மேல்நிலை பள்ளி, திருவள்ளூர்):

“கொரோனா முடிஞ்சு முத நாள் ஸ்கூல் போறதுக்கு பயமா இருந்துச்சு, எங்கே ஊசி போட்டுடுவாங்களோனு… அப்புறம் டீச்சர் ‘மாஸ்க் போடணும், அடிக்கடி கை,கால்களை கழுவி சுத்தமா இருக்கணும்’னு சொன்னாங்க. ஸ்கூல் வாசல்ல என் ஃப்ரெண்ட்ஸ்கூட உடல் வெப்ப பரிசோதனை செஞ்சு கிளாஸ்ல உட்கார்ந்த பிறகுதான், பயம் தெளிஞ்சுது, சகஜமாயிட்டேன். ஆன்லைன் கிளாஸ்ல கொஞ்சம் கொஞ்சமாக புரிஞ்சுது... இப்ப கிளாஸ்ல எங்க சந்தேகங்களை கேட்டு தெரிஞ்சு பாடங்களை படிக்கறது இன்ட்ரஸ்டிங்கா போகுது!”


கார்த்திகேயன் (+2, விவேகானந்தா வித்யாலயா மெட்ரிக் பள்ளி, சிங்கபெருமாள் கோயில்):

“ஃபர்ஸ்ட் டே ஸ்கூல் போனப்ப, கொரோனா தடுப்பு குறித்து டீச்சர்ஸ் விரிவா சொன்னாங்க. அப்புறம் சானிடைசர் போட்டு கை கழுவும்படி கூறினாங்க. முத ரெண்டு நாள் அவங்க செஞ்சாங்க. அதுக்கப்புறம் நாங்களே பழகிட்டோம். இப்ப கிளாஸ்ல பாடங்களை கவனிக்கறதுக்கே நேரம் சரியாக இருக்கு… பப்ளிக் எக்ஸாம் வருதுல்ல, அதான்!”


சவுந்தர்யா, (பிளஸ் 2, அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, செங்குன்றம்):

“கொரோனா ஊரடங்குக்கு பின், கிட்டத்தட்ட ஆறேழு மாதங்களுக்குப் பிறகு கடந்த 19-ம் தேதி முதல் உற்சாகத்துடன் பள்ளிக்கு சென்று வருகிறோம். இதில் ஒரு சில மாணவிகள் மாஸ்க் அணியவில்லை. அவர்களை ஆசிரியர்கள் தடுத்து நிறுத்தினர். ‘பள்ளிக்கு வரும் உற்சாகத்தில், மாஸ்க் அணிய மறந்துட்டேன் மேடம்’னு மாணவிகள் கெஞ்சினர். ‘முதல் நாள் என்பதால் மாஸ்க் தருகிறேன். நாளையில இருந்து மாஸ்க் இல்லேன்னா வீட்டுக்கு அனுப்பிடுவேன்’னு ஆசிரியர் கூறி, மாஸ்க்குடன் உள்ளே செல்ல அனுமதித்தார்.

பின்னர் ஒருவர் உடல் வெப்ப நிலை கருவி மூலம் பரிசோதித்தார். மற்றொருவர் கைகளுக்கு சானிடைசர் தெளித்து கழுவும்படி கூறினார். வகுப்பில் ஒரு பெஞ்ச்சில் 2 பேராக அமர்ந்தோம். உணவு இடைவேளை, கழிவறைகளுக்கு சென்று வரும்போது கை, கால்களை சோப்பு போட்டு கழுவும்படி ஆசிரியர்கள் வலியுறுத்தினர். முதல் 2 நாட்கள் கொரோனா தடுப்பு தற்காப்பு நடவடிக்கை குறித்து ஆசிரியர்கள் விளக்கினர்.

பிறகு வழக்கமான வகுப்புகள் துவங்கிவிட்டன. எனினும், மாஸ்க் அணியாமல் வரும் மாணவிகள், ஆசிரியர்களுக்கு நோ என்ட்ரினு சொல்லிட்டாங்க. வகுப்பறையில் ஒருத்தருக்கு ஒருத்தர் பேசிக்கக்கூடாதுனு ஸ்ட்ரிக்ட் ஆர்டர். இதனால் அந்தந்த பாடங்களை ஒழுங்கா கவனிக்க முடியுது!”