தொடர்கள்
உணவு ஸ்பெஷல்
தங்க ஜரிகையுடன் பிரியாணி... - அலமேலு கிருஷ்ணா

20210124145157198.jpg

நாம் அனைவரும் ருசியான பிரியாணி பற்றி மட்டுமே பேசியிருப்போம். ஆனால் உலகிலேயே மிகவும் விலை உயர்ந்த பிரியாணி பற்றி தெரியுமா?

ஐக்கிய அமீரகத்தில் உள்ள ‘பாம்பே ஃபாரோ’ (Bombay Borough) உணவகத்தில், ‘தி ராயல் கோல்ட் பிரியாணி’ (The Royal Gold Briyani) என்ற பெயரில் வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த பிரியாணியில் மனிதர்கள் உட்கொள்ளும் வகையில், ஜரிகை வடிவில் 22 கேரட் தங்கம் வைக்கப்பட்டிருப்பதுதான் விசேஷமே!

அப்போ… விலை என்னவாக இருக்கும் என மண்டையை உடைத்துக் கொள்கிறீர்களா? அதிகமில்லை ஜென்டில்மேன்… ஜஸ்ட், 1000 திராம்கள்தான் (இந்திய மதிப்பில் தொகையை கணக்கிட்டு கொள்ளுங்கள்]!

இந்த ராயல் கோல்டு பிரியாணியில் தங்கம் மட்டும்தான் கலந்திருக்கிறதா என்றால், அதுதான் இல்லை... இதில் தங்க இலை கஃபாப்கள், குங்குமப்பூ போட்டு சமைக்கப்பட்ட சாதம், காஷ்மீரின் செம்மறி ஆட்டுக்கறி கபாப், டெல்லியின் புகழ்பெற்ற செம்மறி ஆட்டு சாப்ஸ், ராஜ்புத்தின் சிக்கன் கபாப், முகலாயர்கள் ஸ்டைல் கோஃப்தா மற்றும் மலாய் சிக்கன் ரோஸ்ட் போன்றவையும் இடம்பெற்றிருக்கிறது!

நாவில் உமிழ்நீர் சுரக்க செய்யும் இதுபோன்ற ராயல் உணவு வகைகளை, வாழ்க்கையில் ஒருமுறையாவது ருசி பார்க்க நம் மனம் ஏங்குவது நிஜம்.