தொடர்கள்
வாசகர் மெயில்
வாசகர் மெயில்

20210125213432826.jpeg


Heading : உலகம் சுற்றும் விகடகவி - பிரபஞ்சத்தில் உயிரினம் தேடி.... - ராம்

Comment : இனிமேல் தலைப்பை "பிரபஞ்சம் சுற்றும் விகடகவி" என்று மாற்றிவிடுங்கள் 😊 .செவ்வாய் கிரகம் பற்றிய தகவல் அருமை.

Vara, Naperville, IL


‘விஜயகாந்த்’ ஜெயித்து விடுவார்..! - மரியா சிவானந்தம்

கொரோனா காலம் தனிநபர் வருமானத்தை மிகவும் சுருக்கி மக்கள் மனதில் ஒரு பாதுகாப்பில்லா உணர்வை தேக்கிவிட்டதென்பதை எவரும் மறுக்கயியலாது. ஆனால் ஒரு மாற்று வழியை தேட மக்களுக்கு ஒரு பாடம் புகட்டிவிட்டதும் மறுக்க இயலாத ஒன்று. கட்டுரையில் வரும் விஜயகாந்த் அம்மாவின் தொழிலை மேற்கொண்டு பிழைப்பதை பாராட்டியே தீர வேண்டும். (படித்த பிள்ளைகளுக்கு அதற்கேற்ற வேலையை உறுதி செய்யாத அரசுகளை எண்ணி வேதனையாக இருக்கிறது) கூடிய விரைவில் அந்தப் பிள்ளைக்கு படிப்பிற்கேற்ற நல்ல வேலை கிடைக்க வேண்டும்)


“மூக்கணாங்கவுறு”… - வெ. சுப்பிரமணியன்

பொண்டாட்டிக்கு பயப்படமாட்டேன்னு சொல்லறவங்க வீரர்களல்ல: பயப்படுவேன்னு ஒத்துக்கிறவர்கள், கோழைகளல்ல. ஆனா ஒரு கஷ்டம், அதே மூக்கணாங்கவுறை, 60, 80 வயதானாலும், திரும்ப கட்டறதுதான் கொடுமை.

வி. விக்னேஷ், திருப்பதி


கேரெக்டர் - அறியப்படாத மனிதர்கள் - 8 - வேங்கடகிருஷ்ணன்

வாவ்... சூப்பர்! நீண்ட காலம் கழித்து ஆசிரியரை சந்திக்கும்போது ஏற்படும் கிளுகிளுப்பே தனி. அதுவும், நாம் அவருக்கு அளிக்கும் பரிசு பொருட்களை தனது குடும்பத்தினரிடம் காட்டி அவர் குழந்தை போல் குழந்தை போல் குதூகலிப்பது இன்னும் சிறப்பு!

கார்த்திகேயன், வடபழனி


பால் விற்பனைக்கு ₹30 கோடியில் ஹெலிகாப்டர்... - மாலாஸ்ரீ

அதுசரி... ஸ்டேட் டு ஸ்டேட் பால் வியாபாரத்துக்கு ₹30 கோடியில் ஹெலிகாப்டர் வாங்கினது ஓகேதான். உள்ளூர் பால் வியாபாரத்துக்கே டூ-வீலரில் கேன்களைக் கட்டிக்கொண்டு பறக்கிறாங்களே!

சக்ரபாணி, மாமல்லபுரம்


ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் அரசர் கோயில்.... - ஆரூர் சுந்தரசேகர்.

மதுராந்தகம் அருகே அரசர் கோவில் மகிமையைப் படித்து மெய்மறந்தேன். சூப்பரா இருக்கு!

லட்சுமி ராமகிருஷ்ணன், மடிப்பாக்கம்


“காதலர் தின ஜாலி மார்க்கெட்...” - ஸ்வேதா அப்புதாஸ்

ஊட்டியில் காதலர் தின ஸ்பெஷல் மார்க்கெட்டா..? அடடே... நாங்க மிஸ் பண்ணிட்டோமே?! ஆனால், கட்டுரையைப் படித்ததும் நாங்களே அதில் காதலர்களாக பங்கேற்றதை போன்ற உணர்வை ஏற்படுத்தியது.

ரேணுகா ஹரி, கோவை


டூல் கிட் என்ற கருவிப் பெட்டி! - ராம்.

டூல் கிட் என்றால் வாகனங்களை பழுதுபார்க்கும் டூல்ஸ்கள் வைத்திருக்கும் பெட்டி என நினைத்திருந்தேன். அக்கருவியின் இத்தனை இந்திய விவசாயிகளின் போராட்ட பின்னணி பூகம்ப தகவல்களா? அம்மாடியோவ்!

வளர்மதி பாலகிருஷ்ணன், சேந்தியாதோப்பு, கடலூர்


சீனாவுக்கு சாமரம் வீசும் இலங்கை! - ஏ.எஸ்.பாரதி

இந்தியாவின் தெற்கே வால்முனையாக அமைந்த இலங்கை, சீனாவுடன் சேர்ந்து என்னென்ன தகிடுதத்தங்களை செய்து வருகிறது?! சீனாவின் குள்ளநரித்தனத்தை தட்டிக் கேட்க ஆளே இல்லையா? இப்ப முன்னாள் அமெரிக்க அதிபர் டிரம்ப் பொறுப்பில் இருந்திருந்தால், இரு நாடுகளையும் ஒரு வழி பண்ணியிருப்பார்!

கற்பகம் ராஜசேகர், திருநீர்மலை


வாத நோய்களை போக்கும் வாதநாராயணன் கீரை... - மீனாசேகர்

வாதநாராயணன் கீரையின் அருமை, பெருமைகளைப் படித்து பிரமித்துவிட்டேன். நம் அருகிலேயே இத்தகைய மருத்துவ குணங்கள் நிரம்பிய கீரைகள் இருந்தும் தெரிந்து பயன்படுத்தாமல், தற்போது அலோபதி மருந்து உட்கொள்ளும் நிலைக்கு ஆளாகிவிட்டோமே என வருந்துகிறேன்.

வான்மதி செல்வராஜ், செங்கல்பட்டு


பத்மஸ்ரீ விருது வென்ற வில்லிசை கலைஞரின் நினைவலைகள்... - 04 - கலைமாமணி பாரதி திருமகன்

கவிஞர் சுப்பு ஆறுமுகத்தின் தாயாரிடம் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் பிரபலமாக இருந்தாலும் எவ்வளவு வாஞ்சையுடன் பேசுகிறார்? காசு கொடுத்து படம் பார்க்கும் பாமரனுக்கு அரிக்கேன் விளக்கு வெளிச்சத்தில் தனது முகத்தை காட்டியது மிகச் சிறப்பு!

சவுந்தரராஜன், திருநெல்வேலி


“வெற்றித்திலகம்.. - ஸ்வாதி .மோகன்” - மரியா சிவானந்தம்

செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கிய பெர்சவரன்ஸ் விண்கல செயல்பாட்டில், இந்திய வம்சாவளி குடும்பத்தை சேர்ந்த ஸ்வாதி மோகனின் பங்களிப்பு அளப்பதற்கரியது. மரியா சிவானந்தத்தின் கைவண்த்தில் நிலவை போல் கட்டுரை பிரகாசித்தது.

ரேவதி சங்கரன், சங்கரன்கோவில்


மாண்புமிகு மனிதர்கள்...! - ஜாசன்

திருமண ஏற்பாடுகள் குறித்து நீங்கள் கூறிய அத்தனை வார்த்தைகளும் நூற்றுக்கு நூறு சரியே! இதை நான் அனுபவபூர்வமாக உணர்ந்திருக்கிறேன். குழந்தைகளின் திருமணத்துக்கு மெனக்கெடுவதில் பலர் தயங்குகின்றனர். இதுதான் திருமண காண்ட்ராக்டர்களின் சக்சஸே!

பாக்யலட்சுமி தேவன், பாண்டிச்சேரி


தாவணிக் குயில்... - சி. கோவேந்த ராஜா.

In total Aval oru Kavithai kadhanayaki..! V.Dashinamurthy..Tiruvarur

வி. தக்‌ஷிணாமூர்த்தி, திருவாரூர்


பால் விற்பனைக்கு ₹30 கோடியில் ஹெலிகாப்டர்... - மாலாஸ்ரீ

சரியாக இருக்கும் பட்சத்தில் பாராட்டுக்குரியதே. அவர்களின் முயற்சி வெற்றி பெறட்டும். அவர் வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டுகள்


கேரெக்டர் - அறியப்படாத மனிதர்கள் - 8 - வேங்கடகிருஷ்ணன்

பெரும்பாலான எல்லோருக்கும் ் ஒரு விதத்தில் இந்த மாதிரி அனுபவம் இருக்கலாம்


வலையங்கம்

The right to express oneself cannot be extended to expression of falsehood,.or to play pranks That right of expression is not to cause incitement to disrupt the peaceful life in the country/community.. People who want to have the right of expression shall have the maturity to apply their mind as to what their so called freedom of expression can cause... and its consequences


ஆறாக ஒடுகிறது மதுபானம்..! -ஆர் .ராஜேஷ்கன்னா.

தமிழகத்தில் டாஸ்மாக் மது ஆறாக ஓடிக்கொண்டிருப்பது நிஜம். ஆனால், தமிழகத்தில் பூரண மதுவிலக்கு வருமா எனக் கேட்டு பேராசை படக்கூடாது. அப்புறம் அனைத்து கட்சி தேர்தல் பிரசாரத்துக்கு ஆட்களை எப்படி அழைத்து வரமுடியும்? ரேஷன் கடைகளில் மதுபான விற்பனை என தேர்தல் அறிக்கையில் வந்தாலும் ஆச்சரியமில்லை. அண்ணன் எப்ப சாவான், திண்ணை எப்ப காலியாகும் கதைதான்.

பக்கிரிசாமி, சுபாஷ், கவுந்தப்பாடி, சேலம்


வந்தார்கள்... வென்றார்கள்... - 27 - மதன்

மதனின் வந்தார்கள் வென்றார்கள் தொடரில், பைராம்கானின் பாதிப்பு பற்றி படித்ததும் 'சட்டி சுட்டதடா... கை விட்டதடா' பழமொழிதான் நினைவுக்கு வந்தது. இன்னும் விறுவிறுப்பான காட்சிகள் வரும் போலிருக்கே!

சிக்கந்தர் பாட்ஷா, வாணியம்பாடி


விகடகவியார்

புதுவை மாநிலத்தை பொறுத்தவரை கவர்னர் மாற்றம் ‘கத்தி போய் வாளு வந்த கதை’தான்! நாராயணசாமி நிலை திண்டாட்டமே... திமுகவை பொறுத்தவரை, எடப்பாடி அரசுமீது கடும் குற்றச்சாட்டு வைத்தாலும், அவர் சிம்பிளா ‘எல்லா கடனும் தள்ளுபடி... அனைத்து மாணவர்களும் ஆல்பாஸ்’னு மக்களின் மனங்களில் ‘நச்சு’னு உட்கார்ந்துட்டாரு. விகடகவியாரின் அனைத்து செய்திகளும் செம ‘கிக்’!

செந்தில் முருகன், பொள்ளாச்சி


பெட்ரோல்..! எரிகிறது வயிறு... - தில்லைக்கரசிசம்பத்

மாநில அரசுகளின் தொடர் அதிக வருவாய்க்கு டாஸ்மாக் மதுபானக் கடைகள் இருக்கின்றன. அம்மாநிலங்களை கட்டி ஆளும் மத்திய அரசுக்கு கூடுதல் வருவாய் வேண்டாமா? அதான்... பெட்ரோல், டீசல், காஸ் சிலிண்டர் மற்றும் சுங்கக் கட்டண விலை உயர்வு! எதிர்ப்பு குரல் கொடுத்தால், இருக்கவே செய்கிறது தேசத்துரோக வழக்கு?! புலம்பிட்டே இருக்கணும் போலிருக்கு! நம்மை கசக்கி பிழியும் அமைச்சர்கள், எம்.பி, எம்எல்ஏ மற்றும் அரசு உயர் அதிகாரிகளுக்கு மட்டும் எல்லா சலுகைகளுடன் சம்பளம் கூடிட்டே போகும். நாம் வாங்கி வந்த சாபம் அப்படி!

செண்பகவள்ளி சிவராமன், மேல்மலையனூர்


வலையங்கம்

மத்திய-மாநில அரசுகளின் செயல்பாடுகளை கண்டித்து தனிநபரோ, பத்திரிகையாளர்கள் கருத்து சொன்னாலே ஆளுங்கட்சி ‘தேசத்துரோகம்’ என்கிறது. அதுவே எதிர்க்கட்சியாக இருக்கும்போது சரி என்கிறது. மொத்தத்தில், அவர்களை ஓட்டு போட்டு தேர்வு செய்த மக்கள் கண், காது, வாய் மூடிய மந்தியாக இருக்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.

ராஜசேகரன், குன்றக்குடி


வாசகர் மெயில்

ஆருர். சுந்தர் சேகரின் அரசர் கோயில் ஆன்மிக‌ கட்டுரை, அவ்வாலய தரிசனம் பெற தூண்டிவிட்டது! மீதிப்பகுதியைப் படிக்க ஆவலுடன் காத்திருக்கிறோம்

லலிதா சாய்- மதுரை 17