நமது வாசகர்கள் அங்குமிங்கும் (ஹி ..ஹி ஒட்டு ) கேட்ட சுவாரஸ்யமான உரையாடல்கள்...
மயிலை கபாலி கோயிலில் ஒரு தம்பதி...
“ஏங்க சனீஸ்வரன் சன்னதியை சுத்தாம எங்க அப்படி அவசரமா போறீங்க? உங்களுக்கு வேற ஏழரை சனி நடக்குது..”
“அது எனக்கு தெரியும், அங்க பாரு ப்ரசாதமா பொங்கல், சுட சுட ஆவி பறக்க கொடுக்கறாங்க. கூட்டம் இப்போதான் சேர ஆரம்பிக்குது, அண்டாவோ சின்னதா இருக்கு, முந்திக்கலாமேன்னு தான்..”
“ஏன் தான் உங்க புத்தி இப்டி போகுதோ?” (தலையிலடித்துக் கொள்கிறார்).
“ஆமா இப்போ தலையில அடிச்சுக்க வேண்டியது.. பொங்கல் வந்த உடனே, ஏன் கையிலேர்ந்து புடிங்கி சாப்பிடவேண்டியது... பிச்சையெடுத்தாராம் பெருமாளு... மேலே சொல்லாமல் நிறுத்திக்கொண்டு பிரசாத கியூவிற்கு ஓடுகிறார். மனைவியும் பின்னாலேயே ஓடுகிறார்.....
ராம்குமார், மந்தவெளி.
சிவகாசி ராஜா ஸ்டோர்ஸில் ஒருவர்...
“என்ன அண்ணாச்சி, இந்த பேரீச்சம்பழ கவர்ல ஒன்னு வாங்குனா ஒன்னு பிரீன்னு எழுதி இருக்கே, அந்த பாக்கெட் ஏங்க?”
“இன்னொரு பாக்கெட் வேணுமா, இல்ல இதுல விலை கம்மி பண்ணி தரட்டுமா?”
“இது என்ன புதுசா இருக்கே, எவ்வளவு கம்மி பண்ணுவீங்க..”
“பாதி விலை தான்...”
“இது பரவாயில்லையே, எப்படி கட்டுப்படியாகும் உங்களுக்கு..?”
“அதெல்லாம் சரியாகும்.”
(குழப்பமாகவே வெளியே நடந்தவர், கடைப்பையனை வெளியே பார்த்து நிறுத்தி கேட்கிறார்.. அது எல்லாமே எங்களுக்கு பிரியா வந்தது தான், மார்கெடிங்க்காக கம்பெனியில கொடுத்திருக்காங்கனு சொல்கிறான்)
அதிர்ச்சியில் அப்படியே உறைந்து நின்று விடுகிறார்...
ரவி, சிவகாசி.
கோவை மோடி மீட்டிங்கில் இருவர்...
“என்னய்யா இது வாங்க மோடி வணக்கங்க மோடின்னு அப்படியே அம்மாவுக்கு குடுக்கற வரவேற்பு மாதிரி இருக்கு..”
“ஆமாம். இப்போ இவரு தானே அம்மா..”
“அம்மாவா?”
“அம்மா செத்தப்ப வந்தபோது சின்னம்மா தலையில கைய வச்சு ஆறுதல் சொன்னாரு பார்த்தீயில்ல..”
“ஓஹோ, நீ அப்படி வரியா..”
“அதான் அம்மான்னு சொன்னேன்...”
ராமகிருஷ்ணன், பேரூர்.
பனகல் பார்க் அருகில் இரு பெண்கள்...
“திருஷ்யம் 2 கமல் நடிப்பாரா?”
“பின்ன நடிக்காம...”
“சோடி யாரு?”
“கௌதமி தான்.”
“அதான் பிரிஞ்சிட்டாங்கல்ல..”
“காந்தி சேத்து வெச்சுருவாரு நீ ஒன்னும் கவலைப்படவேண்டாம்...”
“காந்தியா?”
“ஆமாம்... காந்தி படம் போட்ட நோட்டு.”
“நீ சொல்றதும் சரிதான்..”
“நாம நம்ம பொழப்பை பாப்போம்.”
சங்கர், கோடம்பாக்கம்.
டீக்கடையில் நண்பர்களிருவர்...
“ஏன் பையன படி படிங்கறேன், அவன் சிரிச்சிட்டு போயிட்டே இருக்காண்டா..”
“உன் பையனாவது பரவாயில்ல, ஏன் மவன் நான் இருக்கற பக்கமே வறதில்ல...”
“கேட்டா எங்க தலைவர் பாத்துப்பாருப்பான்னு சொன்னான், அதே மாதிரி ஆயிடிச்சு.”
“என்ன பாத்துப்பாரு, யாரு தலைவர்..”
“எடப்பாடி பாஸ் போற்றுவாராம்..”
“அவன் சொன்னா மாதிரியே இன்னிக்கி போட்டுட்டாருல்ல..”
“இதுங்க இனிமே நம்மள மதிக்குமா?”
“பொண்டாட்டிகிட்ட ஏற்கனவே மதிப்பில்ல, இப்போ புள்ளைங்க கிட்டயும்...”
“என்ன வாழ்க்கை போடா...”
சோகமாக டீயை சாப்பிட துவங்குகின்றனர்.
சீனுவாசன், கள்ளக்குறிச்சி
மஞ்சக்குப்பம் ரேஷன் கடை வரிசையில் இருவர்...
“ஏம்ப்பா மரம் வெச்சா மழை வரும்னு சொல்றாங்கள்ல...”
“ஆமா சொல்றாங்க..”
“போன புயல்ல நம்ம ஊருல இருந்த மரமெல்லாம் விழுந்துடிச்சி, வேரோட சாஞ்சிடிச்சி, உண்மை தானே?”
“ஆமாம், உண்மை தான், போன மாசம் தான கவர்மெண்டுல இருந்து நஷ்ட ஈடு குடுத்தாங்க..”
“அப்புறம் எப்படிப்பா, இப்படி வெள்ளம் வர்ற அளவுக்கு மழை அதுவும் காலம் இல்லாத காலத்துல மாசி மாசத்துல, கடலூரே மூழ்கி போச்சே..”
“நீ நிஜமாவே வில்லேஜ் விஞ்ஞானி தான் பா, உனக்கு அவார்ட் குடுக்கச்சொல்லி எடப்படியாருக்கு தந்தி அடிக்கறேன்..”
“சரி.. சரி முன்னாடி ஆளே இல்ல பார், கடைய கிடைய மூடிட போறான், பொருள் இல்லாம போன எம்பொண்டாட்டி இன்னிக்கி சோறு போட மாட்டா..”
“டெல்லிக்கே ராஜாவானாலும் வீட்டுக்கு துடைப்பக்கட்டை தான்.”
இருவரும் முன்னால் ஓடுகின்றனர்....
பார்த்தசாரதி, கடலூர்.
டாஸ்மாக் பாரில் இரண்டு குடிமகன்கள்..
“இன்னிக்கு பஸ் ஸ்ட்ரைக்காமுல்ல, ரொம்ப கஷ்டப்பட்டுட்டேன்..”
“இப்போ நீ உன்னோட ஸ்கூட்டியை எடுக்காம இருந்தா உனக்கு எவ்வளவு ரூபா சேவ் பண்ற?”
“நூறு ரூபா..”
“அதே தான், பெட்ரோல் விக்கிற விலையில அவங்க லட்சம் ரூபா சேவ் பண்றங்க, அத போய் ஸ்ட்ரைக் பண்றங்கன்னு தப்பா சொல்றியே..”
“டேய் யப்பா, எப்படிடா, கலைஞரைவிட ஒரு படி மேல யோசிக்கற., சரக்கு ஜாஸ்தின்னு நினைக்கிறேன்.”
“இன்னும் ஆரம்பிக்கவே இல்லடா...”
“அப்போ வேணாம், இந்த பூமி தாங்காது, தண்ணி அடிக்காத..”
காலில் விழாத குறையாக... கெஞ்சுகிறார்....
வரதராஜன், காஞ்சிபுரம்.
Leave a comment
Upload