தொடர்கள்
உணவு ஸ்பெஷல்
மடப்பள்ளி மகிமைகள்.. - 1 - ஆர்.ராஜேஷ் கன்னா

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் சர்க்கரைபொங்கல்...

20210126170451899.jpg

படம்: மேப்ஸ்

மகாபாரத போரின் போது அர்ஜுனனின் தேரோட்டியாக கிருஷ்ண பகவான் இருந்தார். போரில் பீஷ்மரின் அம்புகளால் கிருஷ்ண பகவானின் முகம் முழுவதும் காயம் ஏற்பட்டு, தழம்புகளுடன் காட்சி தந்தார் என்பது ஐதீகம்.

திருவல்லிக்கேணியில் கோயில் கொண்டிருக்கும் கிருஷ்ணபகவான் மீசையுடன், தன் பிரதான ஆயுதமான சுதர்சன சக்கரம் இல்லாமல் பக்தர்களுக்கு ஸ்ரீ பார்த்தசாரத்தியாக அருள் பாலித்து வருகிறார்.

20210126170554872.jpg

மகாபாரத போரின் தொடக்கம் முதல் முடிவு வரை பார்த்தசாரதியாக அருள் பாலிக்கும் கிருஷ்ண பகவான், சங்கத்தை மட்டும் ஏந்தி இருப்பார். மகாபாரத போரில் கிருஷ்ண பகவான் தான் எந்த ஆயுதத்தையும் பயன்படுத்த மாட்டேன் என்று வாக்குறுதி அளித்து இருந்தார். திருவல்லிகேணியில் பார்த்தசாரதி உற்சவ மூர்த்தியாக தன் கதாயுதம் இல்லாமல் செங்கோலுடன் காட்சி தருகிறார்.

திருவல்லிகேணி பார்த்தசாரதி கோயிலுக்கு செல்பவர்கள், மடப்பள்ளியில் இருந்து ஸ்ரீபார்த்தசாரதிக்கு நைவேத்தியம் முடித்து வரும் சர்க்கரை பொங்கல் பிரசாதம் இன்று நமக்கு கிடைக்க வேண்டும் என்றும் வேண்டிக் கொள்வார்கள். அவ்வளவு ருசியாகவும், மணமாகவும் இருக்கும் சர்க்கரை பொங்கல் ஸ்ரீ பார்த்தசாரதி கோயில் மடப்பள்ளியில் தயாரிக்கும் முறை அவ்வளவு சிறப்பு வாய்ந்தது.

ஒரு கைப்பிடி பச்சரிக்கு ஒரு கைப்பிடியில் நான்கில் ஒரு பாகம் முந்திரி, ஒரு கைப்பிடியில் நான்கில் ஒரு பாகம் திராட்சை, ஏலக்காய் பொடி ஜாதிக்காய்பொடி, பச்சை கற்பூரம் சிறிதளவு முதலில் தனியாக எடுத்து வைத்துகொள்கிறார்கள். பச்சரியை போதிய அளவு தண்ணீர் விட்டு முதலில் வேக வைக்கிறார்கள். நன்றாக பச்சரிசி வெந்து சாதமாக மாறியதும் அதில் இருந்து நீரை வடிப்பதில்லை. சிறிதளவு பயித்தம்பருப்பை எடுத்து வேகவைத்து, அதனையும் தனியாக வைத்து கொள்கிறார்கள். பாகுவெல்லத்தினை அடுப்பில் மிதமான தீயில் தயாரிக்கிறார்கள்…. வாணலியில் இருக்கும் வெல்லம் நூல் நூலாக வரும் வரை பதமாக உடையாமல் வெல்லப்பாகு தயாரிக்கிறார்கள். ஏற்கனவே தயாராக இருக்கும் நன்றாக வெந்த பச்சரிசி சாதம், பயித்தம் பருப்பு மற்றும் வெல்லப்பாகுடன் நன்றாக சிக்க (மிக்சிங்) வைக்கிறார்கள். அப்போது அடுப்பு மீதமான தீயில் மூட்டப்பட்டு, வாணலியில் இந்த மூன்று பொருட்களுடன் நன்றாக கலக்க பெரிய மத்துக்களை பயன்படுத்தி சிக்க (மிக்சிங்) வைக்கிறார்கள். அடுப்பில் உள்ள வாணலியில் பசு நெய் ஊற்றப்பட்டு, முந்திரி, திராட்சை பதமாக பொறித்து எடுத்து, அதனுடன் ஏலக்காய் பொடி, ஜாதிக்காய் பொடி, சிறிதளவு பச்சை கற்பூர பொடிகளை தயாராக இருக்கும் பச்சரிசி சாதம், நன்றாக வெந்த பயித்தம் பருப்பு, பாகு வெல்லத்தில் சிக்க வைக்க (மிக்சிங்) கலவையையுடன் கலக்கப்படுகிறது. இப்போது வாணலியில் சர்க்கரை பொங்கல் ரெடி… மிதமான சூட்டில் அடுப்பெறிக்கப்பட்டு மீண்டும் கொஞ்சம் பசு நெய் தேவைக்கேற்ப சேர்க்கபட்டு, மடப்பள்ளியில் இருக்கும் பாறைமீது வாணலியில் தயாரான சர்க்கரை பொங்கல் கொட்டப்பட்டு மடப்பள்ளியில் பணிபுரிபவர்கள், கையில் மத்துடன் அறுவடை செய்த நெற்பயிறை எப்படி களத்தில் அடித்து நெல்மணியை பிரிக்கிறார்களோ அது போல் பாறை மேல் இருக்கும் சர்க்கரை பொங்கலை மத்தின் மூலம் அடிக்கிறார்கள். இதனால் உதிர் உதிராக அல்லது உருண்டையாக இருக்கும் சர்க்கரை பொங்கல் நன்றாக மசிந்து அல்வா மாதிரி ஆகிவிடுகிறது.

2021012617062882.jpg

மடப்பள்ளி பாத்திரத்தில் நன்றாக மசிந்த மணமான சர்க்கரை பொங்கலை பாத்திரத்தில் நிரப்புகிறார்கள். சர்க்கரை பொங்கலுக்கு இன்னும் கொஞ்சம் பசுநெய்யை உருக்கி ஊற்றி எடுத்து கொண்டு நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு சேவை சாதிக்கும் ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாளுக்கு நைவேத்தியம் பட்டாச்சாரியர்கள் படைக்கிறார்கள். திருவல்லிகேணி ஸ்ரீ பார்த்தசாரதி கோயில் சர்க்கரை பொங்கலில் ஒவ்வொரு அரிசிக்கும் ஒவ்வொரு முந்திரி சேர்க்கப்படும் என்பது சிறப்பான செய்தியாக உள்ளது.

பழநி பஞ்சாமிர்தம்

20210126170714505.jpg

முருக பக்தர்கள், பழநி தண்டாயுதபாணி திருக்கோயில் சாமி தரிசனம் முடித்ததும், பஞ்சாமிர்தம் பிரசாதத்தை வாங்கி சுவைப்பதில் அதிக அக்கறை காட்டுவார்கள். பழநி பஞ்சாமிர்தம்... வாழைப்பழம், வெல்லம், பசுநெய், தேன், ஏலக்காய் இதனுடன் கூடுதல் சுவைக்காக பேரிச்சம்பழம் கற்கண்டு பொருட்கள் சேர்க்கப்பட்டு ஒரு சொட்டு நீர் கூட கலக்காமல் தயாரிக்கப்படுகிறது.

20210126170750376.jpg

பழநி பஞ்சாமிர்தத்தை, உலக நாடுகளில் உள்ள முருக பக்தர்கள் பயபக்தியுடன் வாங்கி செல்வது இன்றளவும் தொடர்கிறது. தமிழக கோவில்களில் வழங்கப்படும் பிரசாதங்களில், பழநி பஞ்சாமிர்தம் ஒன்றுக்கு மட்டுமே புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது என்ற பெருமையும் உடையது.

20210126171611399.jpg

பழநி முருகன் கோயில் ஆறுகால பூஜையிலும் பஞ்சாமிர்தம் அபிஷேகமாக நடக்கிறது. முருகன் பழத்திற்காக கோவித்து கொண்டு பழநி மலை வந்ததால், அறுபடை வீடுகளில் பழநியில் மட்டும் பஞ்சாமிர்தம் பிரசாதமாக வழங்கப்படுகிறது.