தொடர்கள்
Daily Articles
குட்டீஸின் சமையல் ஸ்பெஷல் (குட்டி ரெசிபி) - அமுதா தினகரன்

20210201123117325.jpeg

“வெல்கம் டு SMK குட்டீஸ் கிச்சன்” என்றபடி தனது யூடியூப் சேனலை அறிமுகப்படுத்தும் குட்டி செஃப் சாய் மனோஜ் கிருஷ்ணா எல்.கே.ஜி. படிக்கும் நாலு வயசுப் பையன் என்றால் நம்புவது சற்று கடினம்தான். அத்தனை அழகாக துளி கூட பிசிறின்றி தெளிவாக விளக்கியபடியே சமைத்துக் காட்டுகிறான். தன் வயதுக்கேற்றபடியான ரெசிபிகளை மட்டுமே இவன் முயல்வதுதான் சிறப்பு. இந்த குட்டிப் பையன் சொல்லும் குவிக் காலை உணவும், மாலைக்கான உணவாக சாக்லேட் சாண்ட்விட்ச்சும் விகடகவி வாசகர்கள் ரசித்துப் பார்க்கவும், செய்து ருசிக்கவும் இங்கே!

சாய் மனோஜ் கிருஷ்ணாவுக்கு இந்த ஆர்வம் வரக் காரணமே அவனது அம்மாதானாம்! சமையல் கில்லாடியான அவர் தன் ரெசிபிக்களை யூடியூபில் போடத் தொடங்கியதும், தனக்கும் ஒரு சேனலை தனியாக தொடங்கச் செய்து அதற்கென அக்கறையோடு சமைக்கத் தொடங்கி விட்டானாம்! குழந்தையின் ஆர்வத்துக்கு உற்சாகமாக கை கொடுக்கின்றனர் பெற்றோர். லக்கி பாய்!

தொடர்ந்து கலக்குங்க SMK!