தொடர்கள்
Daily Articles
பழைய சாதம் குணமாக்கும் குடல் அழற்சி நோய்! – ஆர்.ராஜேஷ் கன்னா.

20210127182626191.png

நாம் நமது பராம்பரிய உணவு வகைகளை மறந்து பாஸ்ட் புட் உலகில் பயணித்து கொண்டிருக்கிறோம். பணி காரணமாக வேளா வேளைக்கு சாப்பிடுவதையே பல நேரங்களில் தவிர்த்துவிட்டு, அடுத்த வேளை உணவை உண்பதால் கூட குடல் அழற்சி நோய் உருவாக வாய்ப்பு அதிகம்.

நமது சிறுகுடல் மற்றும் பெருங்குடலில் வரும் வீக்கமே குடல் அழற்சி நோய் என அலோபதி மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள். குடல் அழற்சி நோயால் வயிற்றுவலி, வயிற்று போக்கு, உடல் சோர்வு, உடல் எடை குறைதல் மற்றும் உடல் பலவீனம் முதலானவை ஆரம்ப அறிகுறிகள்.

குடல் பகுதி அழற்சி நோய், செரிமான பகுதியில் வீக்கம் அல்லது புண்ணை ஏற்படுத்திவிடும். குடல் சுவர் தடிமனாகி, குடல் பாதை சுருங்கி நாம் உட்கொள்ளும் உணவு வயிற்றிற்கு செல்வதை தடுக்கிறது. நாள் பட்ட குடல் அழற்சி நோயால், செரிமான பாதையில் புண் ஏற்பட்டு ஆசனவாய் பகுதியில் பவுத்திரம் ஏற்படுத்திவிடுகிறது.

மனிதனின் குடலில் அல்சர் ஏற்படும் போது, கோலிடிஸ் மற்றும் க்ரோன்ஸ் என்ற இரண்டும் நீண்ட கால நோய்களாக வெளிபடலாம். ஆரோக்கியமற்ற உணவு மற்றும் கடைகளில் விற்கும் நொறுக்குதீனிகளை சாப்பிடுவதால் கூட குடல் அழற்சி நோய் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏற்படலாம்

குடல் அழற்சி நோயை ரத்த பரிசோதனை, சிடி ஸ்கேன், எண்டோஸ்கோபி, டபுள் பலூன் எண்டோஸ்கோபி, எக்ஸ்-ரே, எம்.ஆர்.ஐ ஸ்கேன் ஆகியவற்றின் மூலம் கண்டறியலாம். நாள்பட்ட குடல் புண்ணுக்கு சிகிச்சை எடுக்காமல் விட்டுவிட்டால், குடல் புற்றுநோய் ஏற்பட அதிக வாய்ப்பு இருப்பதாக அலோபதி மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.

குடல் அழற்சி நோய் முற்றினால் ஆங்கில மருத்துவத்தில் அறுவை சிகிச்சையை மருத்துவர்கள் கையாளுகிறார்கள். குடல் அழற்சி நோய் தற்போது 100 பேரில் 30 பேருக்கு சர்வ சாதாரணமாக காணப்படுகிறது. நமது குடலில் உள்ள நல்லது செய்யும் பாக்டீரியா நமது ஆரோக்கியத்திற்கு முக்கிய பங்காற்றுகிறது. விட்டமின் கே, விட்டமின் பி12 ஆகியவைகளை நமது குடல் தாயரிப்பதோடு இரைப்பை செல்லும் இன்சுலின் சுரப்பையும் சரி செய்யும் தன்மை கொண்டவை, இந்த குடலில் இருக்கும் பாக்டீரியாக்கள்.

20210127182658599.jpg

நாம் அதிகம் உண்ணும் கோதுமை, ஓட்ஸ், ஆண்டிபயாடிக் மருந்து ஆகியவை, நமது குடலில் இருக்கும் நல்ல பாக்டீரியாக்கள் அழிந்து போக ஏதுவாகிறது. இதனால் வயிற்றில் தீராத வலி, மன அழுத்தம் ஆகியவை ஏற்பட்டு, குடல் அழற்சி நோய் வருகிறது. குடல் சம்பந்தமான இந்த கோளாறை சரிசெய்ய, நாம் வீட்டில் அன்றாடம் பயன்படுத்தும் பழைய சோற்றை குடல் அழற்சி நோயாளிகளுக்கு ஆங்கில மருந்துகளுடன் சேர்த்து கொடுப்பதால், நோயாளிகளின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் அடைகின்றனர். இந்தப் பழைய சோறு சிகிச்சையினால், நிறைய பேருக்கு குடல் அழற்சி நோய் சரியாகி அறுவை சிகிச்சையின்றி வீடு திரும்புகிறார்கள் என்று தெரிவதாக சென்னை, ஸ்டான்லி மருத்துவமனை இரைப்பை குடல் அறுவை சிகிச்சை மருத்துவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

20210127182746907.jpg

மண்பானையில் பழைய சோறு செய்தால், சுற்று சூழலில் இருக்கும் பாக்டீரியாவை அவை ஈர்த்துகொள்ளும். இந்த பாக்டீரியாக்கள்தான் நமது உடலுக்கு தேவை. கடந்த நான்கு வருடங்களாக அல்சர் என்று வரும் நோயாளிகளுக்கு இங்கு அறுவை சிகிச்சை செய்வதில்லை. அவர்களுக்கு, பழைய சோறும், குடல் புண்ணை ஆற்றும் மருந்துகளை கொடுத்து, குடல் அழற்சி நோயை குணப்படுத்தி அனுப்பி வைக்கிறோம் என்கின்றனர் ஸ்டான்லி மருத்துவமனையில். பழைய சோற்றினை, நோயாளிகள் மட்டுமில்லாமல்.. இரைப்பை துறையில் உள்ள மருத்துவர்கள் ம்ய்ற்கொண்டு அனைவரும் உண்டு வருகிறோம். பழைய சாதத்தில் இருக்கும் நன்மை செய்யும் பாக்டீரியாக்களின் அளவை கண்டுபிடிக்கவும், ஆய்வு செய்யவும் மூன்று ஆண்டு காலத்திற்கு ரு.2.7 கோடியை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது. இந்த நற்செய்தியை, சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையின் இரைப்பை குடல் அறுவை சிகிச்சை துறைத்தலைவர் ஜெஸ்வந்த் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

20210127182727774.jpg

தமிழர்களின் பராம்பரியமான நீர் ஆகாரம், பழைய சோறு, ஆங்கில மருத்துவத்தில் குடல் அழற்சி நோயை குணமாக்குவதை, ஆதாரபூர்வமாக சென்னை, ஸ்டான்லி மருத்துவமனை நிருபித்துள்ளது.

பழைய சோற்றில் விட்டமின்கள், செரிமானத்தை தூண்டும் நல்ல பாக்டீரியாக்கள், நோயெதிர்ப்பு சக்தி, உடல் சூடு தணிதல், மலச்சிக்கல் இல்லாமல் ஆரோக்கியாக இருப்பது, எலும்புகள் பலமாக இருக்க பேருதவி புரிவதாக அமெரிக்காவின் ஊட்ட சத்து விஞ்ஞானிகள் ஆய்வில் நம்மூர் பழைய சாதத்திற்கு புகழ் மகுடம் சூட்டி, ஆய்வு அறிக்கை ஒன்றை தாக்கல் செய்துள்ளனர்.

இனி வீட்டில் மிச்சமாகும் சாதத்தினை டஸ்ட் பின்னுக்கு அனுப்பாமல், நீர் ஊற்றி, அதை பழைய சாதமாக மாற்றி... மறு நாள் காலையில் உண்டால், இனிவரும் கோடை காலத்திற்கும் நமது உடல் நலத்திற்கும் மிகவும் நல்லது!