தொடர்கள்
சினிமா
“சினிமாவுக்குள்  அரசியல் வேண்டாம்...” - ஸ்வேதா அப்புதாஸ்.

20210225074003467.jpeg

ரமேஷ் கன்னா ஆதங்கம்....

அண்மையில் ஒரு திருமண விழாவில் இயக்குனர், நகைசுவை நடிகர் ரமேஷ் கண்ணாவை சந்தித்து பேசினோம்...

“நாடக இயக்குனர், நடிகர் என்று ஆயிரம் நாடகங்களில் நடித்துள்ளேன். எழுபதுகளில்.. ட்ராமா இயக்கம், நடிப்பு என்று படு பிசி தான். பின்னர் 80-களில் தான் சினிமா என்ட்ரி, அதுவும் டைரக்‌ஷனில். பாண்டியராஜனுடன் இணைந்து, படங்களை இயக்க ஆரம்பித்த அருமையான காலம் அது... பாண்டியராஜனுடன் ஒர்க் பண்ணியது சூப்பர்... ‘ஆண்பாவம்’ வசனம் என் கைவண்ணம்தான்...

எஸ்.ஏ. ராஜ்குமாருடன் இயக்கம் பிளஸ் வசனம்..

ரவிகுமாருடன்... ‘ஆதவன்’ படத்தில்... கோ-டைரக்டராக வேலை பார்த்ததை மறக்க முடியவில்லை.. என்கிறார்.

விக்ரம் இயக்கத்தில் ‘உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்’,
‘பேய் மாமா’ என்று நிறைய படங்களில் காமெடி ரோலை பண்ணியுள்ளேன்.. ஃபிரென்ட்ஸ் படம் சூப்பர் ஹிட்... அது ஒரு அருமையான டீம் ஒர்க்... விஜய், சூர்யா, வடிவேலுடன் நடித்து அசத்திவிட்டோம்.

20210225133353428.jpeg

திரைப்படங்கள் கொடிகட்டி பறந்த காலங்கள்... காமெடிக்கு என்றே பாக்யராஜ் படங்கள்... பாரதிராஜா, மணிரத்தினம் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்தார்கள். தற்போது அட்லீ அதே பாணியை பின்பற்றுவது தான் அவரின் வெற்றி...” என்று கூறினார் உற்சாகத்துடன்.

அப்படியே பேச்சு தற்போது உள்ள இண்டஸ்ட்ரியை பற்றி திரும்பியது...

“98 ஆம் வருடத்திற்கு பின் ஏகப்பட்ட மாற்றங்கள். பெரிய படங்களுக்கு தான் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது என்று நினைக்கிறேன்... பெரிய படங்கள் என்றால் அதிக பட்ஜெட்... பெரிய நடிகர்களின் படம்.. இது ஒரு பக்கம் இருக்க... வீடியோ, கேபிள் மற்றும் தற்போது அமேசான்... மூலம் பெரிய படங்கள் வெளிவர.... சிறிய பட்ஜெட் படங்கள் பாதிக்கப்பட்டுள்ளதை பற்றி யாருக்கும் கவலை இல்லை...

சினிமா தியேட்டர்களை மூடுவது சரியில்லை... அதே சமயம் கிராமங்களில் டென்ட் கொட்டகைகள் வேண்டும்.... சிறிய பட்ஜெட் படங்கள் இங்கு தான் சக்சஸ்.... ஏற்கனவே டிவி பார்ப்பதால், சினிமா பாதித்துள்ளது. இதில் அமேசான் ரீலிஸ்..... அதை விட பாதிப்பு...

இதை விட கொரோனா பாதிப்பு, எங்க தொழிலை மிகவும் பாதித்து விட்டது... அதல பாதாளத்திற்கு எங்க தொழிலாளிகள் சென்று விட்டனர். மீண்டு வர ஒரு வருடமாகும்... அதற்குள்.. அடுத்த அலை என்று பயமுறுத்துகிறார்கள்... சமூக இடைவெளி, மாஸ்க் அணிவது மிக முக்கியம்..... அரசு சொல்லும் பாதுகாப்பு யுக்திகளை கடைபிடிப்பது கட்டாயம் நல்லது. யாருக்கு புரிகிறது.... அடுத்த லாக் டவ்னை தாங்க முடியாது... என்ன சரியா? மாஸ்க்கை நல்லா போடுங்க சார்” என்று நமக்கு ஆர்டர் போட்டார் ரமேஷ் கன்னா.

தேர்தல் பக்கம் பேச்சு திரும்ப.. “அரசியலை விட்டு நம்ம நடிகர்கள் தள்ளி நின்றால் நல்லது.. எம். ஜி.ஆர்., ஜெயலலிதா... அரசியலில் இறங்கியது ஒரு வரலாறு.... அவர்களின் அணுகுமுறை வேறு.... வெற்றியும் அடைந்தனர்... கலைஞர் - சினிமா வசனகர்த்தா... இவர்களின் முயற்ச்சி, சாதனை அவ்வளவு ஈசி கிடையாது. பல போராட்டங்களுக்கு பின் வெற்றி பெற்று... அரசியலுக்காகவே தங்களின் உயிரையும் தியாகம் செய்தனர்.

அவர்களை போல் மற்ற நடிகர்களும் அரசியலில் நுழைந்தால் நல்லதா என்றால்..? இல்லை என்று தான் நான் சொல்வேன். ரஜினி அரசியலுக்கு குட் பை சொன்னது நல்ல முடிவு.

சினிமாவை தனியாக விட்டு விடுங்கள், அரசியலுடன் இணைக்க வேண்டாம். கேரளாவில் எந்த நடிகரும் அரசியலில் இல்லை... சினிமா உண்டு, அவர்கள் உண்டு என்று இருக்கிறார்கள். நம்ம ஊரில் தான்... சினிமா துறையை அரசியலுடன் சேர்த்துக் கொள்வது நடக்கிறது.. தயவு செய்து எங்களை விட்டு விடுங்கள்” என்கிறார்.