தொடர்கள்
வாசகர் மெயில்
வாசகர் மெயில்

20210226081132496.jpeg

மாண்புமிகு மனிதர்கள்...!.- ஜாசன்

நான் சம்பாதிக்க ஆரம்பித்தபோது, என் தந்தையை எப்படியெல்லாமோ கவனித்து கொள்ள ஆசைப்பட்டேன். அதற்கு முன்பே அவர் இறந்துவிட்டார். மாண்புமிகு மனிதர்களில் நீங்கள் கூறியதைப் போல், 81 வயதான தாயாரை கண்ணும் கருத்துமாக கவனித்துக் கொள்வதில் மகிழ்ச்சி!

ரகுராமன், மேற்கு சைதாப்பேட்டை


காவு வாங்கிய லஞ்சம்..!! - நமது நிருபர்.

அடப்பாவிகளா... இந்த மாதிரி அப்பாவிகளை லஞ்ச பேய்களான அதிகாரிகள் பணத்துக்காக கொல்லப் போறாங்களோ?! இவர்களை நடுரோட்டில் நிற்கவைத்து பொதுமக்கள் கற்களால் அடித்தே கொல்ல வேண்டும், அரேபிய நாடுகளைப் போல்! ஆனால், நம் நாட்டின் சட்ட ஓட்டைகளை பயன்படுத்தி, லஞ்ச பேர்வழிகள் தப்பிவிடுகின்றனர்.

ராதா வெங்கட், ஆலப்பாக்கம்


காமெடி பீஸான தமிழக தேர்தல் களம்!! - ஆர் .ராஜேஷ் கன்னா.

தற்போது பல்வேறு அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரசாரம் மற்றும் கொண்டு வரப்படும் கூட்டத்தினால் உள்ளூர் மக்களுக்கு மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்குமோ என அச்சம் நிலவுகிறது. ஆட்களை கொண்டு வரும்போதே மாஸ்க் மற்றும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க அரசியல் கட்சி தலைவர்கள் சொல்ல மறந்ததேன்?

மாயா குப்புசாமி, ஊத்துக்கோட்டை


பத்மஸ்ரீ விருது வென்ற வில்லிசை கலைஞரின் நினைவலைகள்... - 08 - கலைமாமணி பாரதி திருமகன்

ஒரு பாட்டுக்கு உரிய வார்த்தை கிடைக்காமல் உடுமலை நாராயணகவி தவித்ததையும், அதற்கு கலைவாணர் அந்த வரிகளைக் கூறி, அதற்குரிய பண்பாட்டை விளக்கிய விதம் மிக அருமை, பாரதியின் கைவண்ணத்தில்!

கண்ணபிரான், சீர்காழி


“புனர்ஜென்மம்...” - வெ. சுப்பிரமணியன்

இந்த நாத்திக சிகாமணி கோவிலில் கால் வைத்து ஆத்திகர்களும் மாறிவிடாமல் இருக்க வேண்டுமே என்ற கவலையே அதிகமாயுள்ளது. கதைக்கான விகடகவியின் படம் சூப்பர். வரம் கொடுத்தவர் தலையிலே கைவைத்து அழிக்க நினைக்கும் பஸ்மாசூரனும், ஓட்டு போட்டவர் தலையிலேயே மிளகாய் அரைக்கும் பெரியமணிகளும் அழிக்கப்பட வேண்டியவர்களே.

ரெங்கநாதன் - புதுக்கோட்டை.


தாய்.... – பா.அய்யாசாமி

V nice ..........

விஜயலக்‌ஷ்மி, கும்பகோணம்


தி.மு.க முன்னெடுக்கும் லவ் ஜிகாத்!! - நமது நிருபர்.

திமுக தேர்தல் அறிக்கையில் கலப்பு மணம் புரிபவர்களுக்கு திருமண நிதியுதவி திட்டம் என்பது, சும்மா சங்கை ஊதி கெடுத்தது போல்தான் இருக்கும். இதனால் ஏற்படும் பின்விளைவுகளுக்கு ஸ்டாலின் பொறுப்பேற்பாரா?

வந்தியதேவன், பெருமாளகரம், திருவள்ளூர்


காதல் வந்தால் சொல்லி அனுப்பு... - மரியா சிவானந்தம்

இயக்குநர் எஸ்.பி.ஜனநாதனின் மறைவு தமிழ் திரையுலகில் காலடி எடுத்து வைக்க துடிக்கும் இளம் இயக்குநர்களுக்கு மட்டுமல்ல, அவர் வசித்த பகுதியில் என்னை போன்ற பல இளைஞர்களுக்கும் ஆதர்ச நண்பராக விளங்கினார். அவரது இழப்பு குறித்து மரியாவின் கட்டுரை அருமை.

சந்திரசேகரன், சாலிகிராமம்


ஸ்ரீரங்கத்தில் சசிகலா..! - ஆர்.ராஜேஷ் கன்னா

ஶ்ரீரங்கநாதரை சசிகலா அமைதியாக தரிசித்து வேண்டிக்கொண்டு சென்றதை ஆச்சரியமாகத்தான் பார்க்க வேண்டியிருக்கிறது. தனது கணவரின் நினைவு தினத்தில், அவர் ஊர்மக்களிடம் சகஜமாகப் பேசியதை அப்பகுதி மக்கள் ஆச்சரியத்தில் வாய்பிளந்து பேசுகின்றனர். எல்லாம் காலத்தின் கட்டாயம்!

வித்யாதரன், தஞ்சாவூர்


வந்தார்கள்... வென்றார்கள்... - 31 - மதன்

மதனின் வந்தார்கள் வென்றார்கள் தொடரில் பாபருக்கு பிறகே, அக்பரின் போர் தந்திரங்கள் மற்றும் படையெடுப்புகள்தான் விறுவிறுப்பாக படிக்க வைத்தன.

நூர்ஜஹான் பீவி, வாணியம்பாடி


பழங்களும் பலன்களும் - 03 - மீனாசேகர்.

வாழைப் பழத்தின் பயன்கள் பற்றி படித்ததும், எங்க ஊரில் 95 வயது தாத்தா நாளொன்றுக்கு மதியம், இரவு என தலா 2 வாழைப் பழங்கள் சாப்பிட்டு உயிர் வாழ்வது நினைவுக்கு வந்தது. நோய்நொடியின்றி உயிர் காக்கும் ஏழைகளின் காப்பாளன் என்றே கூறலாம்.

பர்வதவர்ஷினி ஏகாம்பரம், திருக்குறுங்குடி


பழங்களும் பலன்களும் - 03 - மீனாசேகர்.

Nice article

திவ்யா, க்ரோம்பெட்


பழங்களும் பலன்களும் - 03 - மீனாசேகர்.

pl.correct as Meenasekar instead of Aaroor.Sundarasekar. by mistake.

ஆர். வைத்தியநாதஸ்வாமி, முத்துப்பிள்ளை மண்டபம்


ஸ்ரீரங்கத்தில் சசிகலா..! - ஆர்.ராஜேஷ் கன்னா

அருமையான பதிவு எங்களின் எதிர் பாற்பு இவர்களை பற்றிய தகவல் தெரிந்து கொள்ள. நன்றி டிஜிட்டல் விகடன் மற்றும் எழுத்தாளர் அவர்களுக்கு. வாழ்த்துக்கள்.

சுலோச்சனா .எம், பொன்னேரி


விகடகவியார்

'அதிமுகவில் ஸ்லீப்பர் செல்களை அமமுக மட்டும்தான் வைக்குமா, என்ன? நாங்களும் எங்க சேஃப்டிக்கு திமுக உள்ளிட்ட கட்சிகள்ல வைப்போம்ல...' என எடப்பாடியார் கொக்கரித்தது, விகடகவியார் காதில் விழுந்துடுச்சே... இனி எல்லாமே 'V'தான்!

பானுமதி ராமச்சந்திரன், ஈரோடு


வலையங்கம்

இதெல்லாம் நடக்கற சமாசாரமா..? 'தேர்தல் பிரசாரத்தின்போது பணப் பட்டுவாடா, பரிசு பொருட்களை தடுக்க' என்ற பெயரில் வருமானவரி மற்றும் பறக்கும் படை அப்பாவி மக்கள், வியாபாரிகளின் பணத்தை பிடுங்கி வருகிறது. ஆளுங்கட்சியின் பணப் பரிமாற்றம் நடந்து கொண்டே இருக்கிறது. எல்லாம் செவிடன் காதில் ஊதிய சங்குதான்!

இசக்கிமுத்து, தென்காசி


“புனர்ஜென்மம்...” - வெ. சுப்பிரமணியன்

கலியுகத்தில் பெரியமணிகளின் அவதாரங்கள் அதிகரித்துள்ளது என்னமோ வாஸ்தவம்தான். இறைவன் காட்சி தருவதாயிருந்தால் நானும் நாத்திகனாக மாற ரெடி.

சிந்து மகேஷ், கோவை


ஶ்ரீ நித்ய கல்யாண ப்ரஸன்ன வெங்கடேசப் பெருமாள்!! - ஆரூர் சுந்தரசேகர்

Ariyadha pala sirappughalai thandulla Aaroor.R.Sundarasekar parattuthaluku Uriyavar!

எஸ். சாய்பத்ரி .எல், கிருஷ்ணாபுரம்


காதல் வந்தால் சொல்லி அனுப்பு... - மரியா சிவானந்தம்

அருமையான பதிவுகள். இயற்கையான இயக்குனர் அவர் படத்தி்ல் மறக்க முடியாத வார்த்தை.. காதலுக்கு காரணம் இருக்க முடியாது.. காரணம் இருந்தால் காதலாக இருக்க முடியாது.

தயா கரோக்