தொடர்கள்
பேசிக்கறாங்க
பேசிக்கறாங்க..

20210226141658139.jpg

வாசகர்கள் அங்குமிங்கும் (ஹி.. ஹி.. ஒட்டு) கேட்ட உரையாடல்கள்....

திருவண்ணாமலை தேரடி தெருவில் இருவர்...

“ஏன்யா எடப்படிக்குதானே ஒட்டு போடப்போற?”

“என்னப்பா எண்ணப்பத்தி நல்ல தெரிஞ்ச நீயே இப்படி கேட்டா எப்படி?”

“ஏன் அப்படி சொல்ற?”

“எடப்பாடிக்கு போட்டு அவர் ஜெயிச்சு வந்துட்டார்னா, ஆறு சிலிண்டர் கொடுப்பாரு...”

“ஆமாம்.. நல்ல விஷயம் தானே...”

“அட போய்யா, பெரிய வீட்டுக்கு ஆறு வந்திடும்... அந்த வீட்டுக்கு அதுக்கு போட்டியா நான் இல்ல வாங்கித் தரணும்...”

“ஓஹோ.. ரேஷன் கார்டுல பேர் இல்லாத குடும்பத்தை பத்தி சொல்றியா, அது கொஞ்சம் கஷ்டம் தான்...”

“அதான் நான் ஸ்டாலின் வரட்டும்ன்னு வேண்டிக்கறேன்...”

“ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு பிரச்சனை.... ஹும்..”

இருவரும் தோளில் கைபோட்டபடி நடக்கின்றனர்.

ராஜி, திருவண்ணாமலை.


வடபழனி - கமலா திரையரங்க வாசலில் ஒரு குடும்பம்...

“இன்னிக்கு தான் ரிலீஸ் ஆகியிருக்கு, இன்னிக்கே பாக்கணுமா?”

“மாமா வீடு பூட்டியிருக்கு, வர்றதுக்கு மத்தியானம் ஆவும்னு சொல்றாரு, நாம திரும்பி போக இப்ப வண்டியில்ல. நிம்மதியா ஏசி-ல உக்கார்ந்துட்டு போலாம், யாரு நடிச்சா என்ன..?”

“சரி... கூட்டம் இல்லாத படத்துக்கு டிக்கட் எடுக்கறேன்...”

“எல்லா படத்துக்கும்தான் கூட்டமே இல்லை...”

“அதுக்காக வாரா வாரம் விஜய் படமா ரிலீஸ் பண்ணுவாங்க...”

“தளபதியாவது ஒரு படம் ரிலீஸ் பண்ணிட்டாரு, தல எப்போ வரப்போறாருண்ணே தெரியல...”

“அடேய் ஒரு படம் பாக்குறதுக்கு டிக்கெட் வாங்கறத ஒரு பெரிய ரசிகர் மன்ற சண்டையாவே மாத்திடுவா போலயே...”

“நான் வரலே இந்த விளையாட்டுக்கு.... வா போலாம்..”

படம் பார்க்க உள்ளே போகிறார்கள்.

ராம்குமார், மாம்பலம்.


மதுரை - விளக்குத்தூண் அருகே இருவர்...

“மாப்ள ஒரு ஜிகர் தண்டா சொல்லு...”

“ஒரு ஜிகர் தண்டா..! எப்பிடி சரியா சொல்லிட்டனா?”

“கடுப்பேத்தறியே...”

“என்ன தேர்தல் வாக்குறுதியா...”

“ஓஹோ.. சொல்லுவாங்க.. ஆனா, செய்யமாட்டாங்க அப்படிங்கிற...”

“பின்ன.. நம்ம ஊர்லயே ஒருத்தர், ஒரு கோடி அகௌண்ட்டுல போடுவேன், நிலவுக்கு டூர் கூட்டிட்டு போவேன் அப்படின்னு...”

“ஆனா நான் அப்படியில்லப்பா.. உனக்கு வாங்கி தரேன் வா...”

சிரித்துக்கொண்டே கடைக்குள்ள நுழைகின்றனர்...

கார்த்திக், மதுரை.


சிதம்பரம் - நடராஜர் கோயில் வாசலில்...

“வேல் னாலே ப்ராப்பளம் தான் போல..”

“முருகனோட வேல சொல்றியா...”

“அதை தான் அவரைத்தவிர எல்லாரும் கையில எடுத்துக்கிட்டு சுத்தறாங்களே..”

“ம்.. ஏ.வ வேலு வீட்டுல, ஆபிஸ்ல ரெய்டு... அதை சொல்றேன்..”

அது பிரச்சனை தான்...

“இன்னும் ஒரு வாரம்தான் இருக்கு.. என்னென்ன நடக்குமோ....”

நரேஷ்குமார், திருவண்ணாமலை.