தொடர்கள்
Daily Articles
உலகம் சுற்றும் விகடகவி "அடித்து கொள்ளும் ஆப்பிளும் இண்டெலும்". - ராம்.

உலகம் சுற்றும் விகடகவி

20210301115935959.jpg

சிலிக்கன் சில்லு புரட்சி.

எண்பதுகளில் சுஜாதா சிலிக்கன் சில்லு புரட்சி பற்றி எழுதினார்.

முதல் முதல் கம்ப்யூட்டர்களில் சிப் என்பது ஒரு பெரிய அறை அளவுக்கு இருந்ததாம். ஏன் நாமே ஃபிளாப்பி டிஸ்கில் 1.4 எம்.பி அளவு தான் என்ற வரையறையில் வளைய வந்திருக்கிறோம்.

என்று இண்டல் உள்ளே புகுந்ததோ அன்றிலிருந்து இன்று வரை தொடர்ந்து சிலிக்கன் சில்லு புரட்சி அன்றாடம் நடந்து கொண்டிருக்கிறது.

இன்றைய செய்தி என்னவெனில் கரோனா காலத்தில் பாதிக்கப்பட்டது வேலைவாய்ப்பு, சுற்றுலா துறை மட்டுமல்லாது செமி கண்டக்டர் மைக்ரோ சிப் தயாரிப்பும் தான்.

இது கார் தயாரிப்பு வரை பாதித்திருக்கிறது. இன்றைய கார்களில் மைக்ரோ சிப்பின் தேவை அத்தியாவசியமாகியிருக்கிறது.

20210301120213154.jpg

கரோனா மட்டுமல்லாது டெக்ஸாஸின் மோசமான வானிலையும் இதற்கு காரணம்.

ஏசியாவில் தான் செமிகண்டகர் சிப் அதிகமாக உற்பத்தி செய்யப்படுகிறது. அதனால் இனி அமெரிக்காவில் இதை தயாரிக்க பைடன் ஏராளமான முதலீடுகளை இறக்க இருக்கிறாராம்.

எலக்ட்ரானிக் சாதனங்களின் உற்பத்தி குறைவால் இனி வரும் சாதனங்கள் விலையேறுவதற்கு வாய்ப்பிருக்கிறது.

இதன் நடுவில் இண்டலும் ஆப்பிளும் இந்த சிப் போட்டியில் அடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஆப்பிள் இதுவரை வாங்கி வந்த இண்டல் சிப்பிலிருந்து தாங்களே வடிவமைத்த எம்.1 என்ற சிப்பில் புதிய மாக் கணிணிகளை தயாரிக்கத் துவங்கியது.

இதனால் எங்களுக்கு ஒரு பிரச்சினையுமில்லை என்று மார்தட்டிய இண்டல் இன்னொரு பக்கம் ஆப்பிளின் வியாபாரம் எங்களுக்கு மிக அவசியம் என்றும் கெஞ்சிக் கொண்டிருக்கிறது.

ஒரு விளம்பர யுக்தியாக இண்டெல் எங்கள் சிப் உபயோகித்தால் தான் வேகத்தை உணர முடியும் என்று மாக் ஏர் என்று சொல்லப்படும் மடிக்கணிணியையும் மாக் புக் புரோ என்று புதிதாக வந்திருக்கும் எம்.1 கணிணியையும் ஒப்பீடு செய்து வெளியிட்டிருக்கிறது.

இந்த ஓப்பீடே உட்டாலக்கடி என்றும் எம்.1 தான் அதிவேகமான சிப் என்றும் அதற்கு எதிர் வினைகளும் வந்துள்ளன.

எப்படியோ அடித்துக் கொள்ளுங்கள்.

வடிவேலு ஸ்டைலில் “போங்கடா என் சிப்ஸு” என்று சொல்லி விட்டு நகர்ந்து விடுவோம்.

ஆஸ்திரேலியா

20210301120419525.jpg

இன்று ஏப்ரல் 1 ஹாப்பி முரசொலி தினம் என்று நக்கலாக வாழ்த்து அனுப்பியவர்களும் காலங்கார்த்தலயே என்னை ஏப்ரல் ஃபூல் பண்ணி விட்டு போன அனுவிற்கும் நன்றி.

வழக்கமாக சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு விற்பனை சரியில்லை என்று விற்பனைத் துறையில் இருப்பவர்களுக்கு தலைவலியான நாள்.

சென்ற வருட டார்கெட்டை தொட்டீர்களா, முந்தினீர்களா என்று விவாதங்கள் நடக்கும் இந்த வாரத்தில் ஒரு பெரும் ஆறுதல் ஆஸ்திரேலியாவில்.

சென்ற ஆண்டு காட்டுத் தீயின் பாதிப்பு முந்தைய ஆண்டுகளை விட மிகவும் குறைவாக இருக்கிறது என்று அறிவித்திருக்கிறார்கள்.

பத்து வருடங்களுக்குப் பின் இந்த நல்ல செய்தி.

லா நினா என்ற வானிலை அமைப்பு தான் இதற்கு காரணம் என்றும் சொல்கிறார்கள்.

சென்ற வருடதிற்கு முன் காட்டுத் தீ அழித்த நிலப்பரப்பு ஒப்பீட்டில் துருக்கியின் அளவு. 33 பேர்களை காவு வாங்கி கோடிக்கணக்கான உயிரினங்களை அழித்து சுமார் 3000 வீடுகளை காலி பண்ணியது தீயின் கோரத் தாண்டவம்.

நில அளவில், ஐந்தரை மில்லியன் ஹெக்டேர்களை விழுங்கியது காட்டுத் தீ. சென்ற வருடம் 31,000 ஹெக்டேர்கள் தான்என்பது பெரும் ஆறுதல் தான்.

அங்கு நெருப்பினால் இழப்பு என்றால், கிழக்கு ஆஸ்திரேலியாவில் வெள்ளப் பெருக்கு.

2021030112045837.jpg

ஐம்பது வருடங்களாக இல்லாத மழையும், வெள்ளமும் ஆயிரக்கணக்கானவர்களை இடம் பெயர் வைத்திருக்கிறது.

இயற்கை தான் இறைவன் என்றால், இத்தனை சீற்றம் ஏன் ??????

உலகம் சுற்றுவோம் சனிக்கிழமை இதழில் தொடரும்....

ராம்