யோகம் தரும் யோக முத்திரைகள்...
இந்த புத்தகம் நான் வாங்கியது, அது வெளிவந்த 2012-ம் ஆண்டு வாங்கினேன். இது எனது தந்தையார் மூலமாய் நான் தெரிந்துகொண்ட ஒன்று. முத்திரைகள் எப்படி நமது உடல் நிலையை, மனோ நிலையை மாற்றும் என்று சொல்லித் தந்திருக்கிறார். இந்த புத்தகம் அவரை நினைத்துக்கொண்டே வாங்கிப் படித்தேன். ஐம்பது முத்திரைகளை பற்றி ஆசிரியர் ஸ்ரீகோவிந்தராஜன் சொல்லியிருக்கிறார். தெளிவான முறையில் முத்திரையைப் பற்றிய விளக்கம். எப்படி செய்வது, படவிளக்கம், அதன் பலன்கள் என்று விரிவாகவும் தெளிவாகவும் சொல்லியிருக்கிறார்.
முத்திரைகள், பிரபஞ்ச சக்தியை நம் உடலுக்குள் கொண்டுவந்து செயல்பட வைத்து, உடல் மற்றும் மனப்பிரச்னைகளைத் தீர்க்கக்கூடியவை.
நம் கைகளில் உள்ள விரல்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு பஞ்சபூதத்தோடு தொடர்புடையவை. இரண்டு கைகளிலும் உள்ள விரல்களை ஒன்றோடு ஒன்று தொடும்படி செய்வதுதான் முத்திரைகள். இதன் மூலம், பஞ்சபூதங்களின் நிறை குறைகள், சமநிலை படுத்தப்படுவதால், பிரச்சனைகள் தீருகின்றன.
முத்திரைகளை சரியாகவும், முறையாகவும், குறிப்பிட்ட காலத்துக்கு தொடர்ந்து செய்து வந்தால், அனைத்துவிதமான பிரச்சனைகளுக்கும் தீர்வுகாண முடியும்.
கடந்த சில நாட்களுக்கு முன் லிங்க முத்திரை (13 வது முத்திரை புத்தகத்தில்) செய்தால், உடலில் ப்ரணவாயுவின் அளவு அதிகரிக்கிறது. இது கோரோனோ தொற்று நோயாளிகளுக்கு ஒரு வரப்ரசாதமாய் அமையும் என்பதை ஆராய்ச்சி மூலம், சென்னை ஐ ஐ டி விஞ்ஞானிகள் கண்டுபிடித்து, அதனை சோதனைகள் மூலம் நிரூபித்திருக்கிறார்கள்.
அதே போல ஆன்மீகத்தில் மிக நாட்டமுள்ள, அவரே சாதகரான நம்ம சூப்பர் ஸ்டாரை கூர்ந்து கவனித்தால், அவர் யாருடனாவது சேர்ந்து நிற்கும் புகைப்படத்தை கவனித்தால், அவர் ஞான முத்திரையை வைத்திருப்பதை காணமுடியும்.
முத்திரைகள் இந்த லாக் டௌன் நேரத்தில் வீட்டிலிருந்தே செய்யக்கூடிய எளிமையான பயிற்சிகள். எந்த செலவும் கிடையாது.
தியானம், யோகாசனம், பிராணாயாமம் போன்றவற்றை செய்வதால் கிடைக்கும் பலனைவிட, முத்திரைகளால் அதிக பலன் கிடைக்கும். இவற்றை செய்து கொண்டே, முத்திரைகளையும் செய்தால் கிடைக்கும் பலன்கள் மிகவும் அதிகம்.
படித்து, செய்து பலன் பெறவேண்டும் என்பதே எனது விருப்பம். இந்த கடினமான நேரத்தில் “லிங்க முத்திரை”, அனைவரும் செய்யக்கூடியதே. நமது உடலின் ஆக்சிஜன் அளவை அதிகரிக்க உதவும். ஒரு முதலுதவியாகக் கூட இதனை செய்யலாம்.
வாழ்வில் முத்திரை பதிக்க வாழ்த்துக்கள்.
Leave a comment
Upload