
நமது வாசகர்கள் அங்குமிங்கும் (ஹி ...ஹி ஒட்டு ) கேட்ட உரையாடல்கள்...
மகாமக குளம் அருகில் இருவர்.....
“என்னையா ஊரடங்கு போட்டாலும், நம்மள வீட்ல இருக்க விட மாட்டாங்க போல...”
“அட போய்யா... இப்படியாவது வெளிய வரமுடியுதேன்னு நான் சந்தோஷப்படுறேன்.. அதான் காலைல பால் வாங்க, அப்புறம் காப்பி சாப்டுட்டு, காய்கறி வாங்க...”
“ஒரே டைம்ல ரெண்டையும் வாங்கிட்டு போக வேண்டியது தானே..”
“அட போய்யா... ரெண்டாவது தடவ காய்கறி வாங்கிட்டு கொஞ்சம் லேட்டா தான் போவேன். போய் உக்கார்ந்து அப்பாடான்னு சொன்னவுடனே, பேரன் தண்ணி கொண்டுவந்து கொடுப்பான், மருமக சுடச் சுட ஒரு காப்பி கொடுப்பா, ஒய்ப் பேன் போடுவா... இதெல்லாம் எப்பவும் கிடைக்குமா? கிடைக்கும்போது என்ஜாய் தங்கமணி...”
“நல்ல இருக்கே இந்த ஐடியா... இனிமே நானும் பாலோ பண்றேன்..”
இருவரும் சிரித்துக்கொண்டே செல்கின்றனர்.
ராஜு, குடந்தை.
கன்னியாகுமரி - விவேகானந்தர் பாறை அருகில்...
“புயல் நமக்கு இல்லையாமே, ஒரிசா பக்கம் போயிடிச்சாம்...”
“யோவ் அதை ஏன்யா சோகமா சொல்றே, இருக்கற பிரச்சனையில அதுவும் சேந்துக்கிட்டா ரொம்ப ரோதனையா போய்டும்.”
“ஏதாவது புயல் நிவாரண நிதி குடுப்பாங்களே, அதான்பா...”
“அது சரி.. லாக் டௌன்ல பொயப்புல மண் விழுந்துடிச்சி, நீ சொல்றதும் நிஜம் தான்..”
இருவரும் பேசிக்கொண்டே செல்கின்றனர்.
கண்ணன், கன்னியாகுமரி.
துரைப்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்தில்...
“இன்னும் எவ்ளோ நேரம்மா உட்காரனும், நான் தடுப்பூசி போட வந்து ஒரு மணி நேரம் ஆச்சு...”
“இருங்க சார்... இன்னும் நாலு பேர் வந்தா தான், ஊசி மருந்தை ஓபன் பண்ண முடியும்...”
“அது சரி.. அவங்க எப்போ வர்றது, நான் எப்போ போறது?”
பக்கத்துல இருப்பவர்...
“இப்போ வீட்டுக்கு போறதுக்கு அவசரப்பட்டீன்னா, அப்புறம் ஒரேடியா போக வேண்டியது தான். இருந்து போட்டுக்கிட்டு போங்க சார். தமிழ்நாடு தான், இந்தியாவிலேயே தடுப்பூசியை வீணாக்குறதுல மூணாவதா இருக்கு...”
“ஏன்யா வீணாக்குறதுல கூடவா போட்டி.. பஸ்ட், செகண்டு எல்லாம் இருக்கா?”
நர்ஸ் வந்து அழைக்கிறார், வாங்க, வாங்க நாலு பேர் வந்தாச்சு. போய் பிபி செக் பண்ணிக்கோங்க.”
இது வேறயா என்று சொல்லிக்கொண்டே நகர்கின்றனர்.
வரதன், பெருங்குடி.

Leave a comment
Upload