
என் மகள் அபியின் வீடு ரொம்ப தொலைவில் இல்லை. பக்கம் தான். தன் குட்டிப் பையனுடனும் கணவனுடனும். ஒவ்வொரு சனிக்கிழமையும் எங்களைவந்து பார்ப்பவள், இன்றும் 3 மணிக்கே வருவதாகச் சொன்னவள் மணி 6ஐத் தாண்டியும் இதுவரை வரவில்லை.கைப்பேசியில் பேசினால் தொடர்பு எல்லைக்கு அப்பால் உள்ளார் அல்லது ஸ்விட்ச் ஆப்செய்யப்பட்டுள்ளது என்ற பதிலே வந்துக் கொண்டிருக்கிறது.ஒரே குழப்பத்தில் என் மனைவிஅலமுவின் மனம்.
அம்மா காத்துக் கொண்டிருப்பாள் என்று அவளுக்குத் தெரியாதா? ஒன்று ஃபோனை எடுக்கவேண்டும். இல்லையென்றால் ஃபோன் பண்ணி எதையாவது சொல்ல வேண்டும்.அலமுபுலம்பிக் கொண்டிருந்தாள்.
இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்தேன் நான்.எனக்கு என் மனைவிஅலமுவைப் பற்றியும் தெரியும் மகள் அபியைப் பற்றியும் தெரியும்.ஒவ்வொரு சனிக்கிழமையும்இதே கதைதான்.
மொட்டை மாடிக்கு போய் நானும் ஒரே மகள் அபிக்கு 4 முறை ஃபோன்பண்ணிவிட்டேன். எனக்கு மட்டும் வேறு பதிலா வரப்போகிறது? 40 வருடமாகஎன்னுடன் குப்பைக் கொட்டும் அலமு கிழே வந்த என்னைப் பார்த்தாள்.நான் அசடு வழிந்தேன்.
பொறியியல் பட்டப்படிப்பு படித்த பெண்ணுக்கு இது கூடவாத் தெரியாது? என்றுஅக்கறையுடன் புலம்பிக் கொண்டே வீட்டிற்கு உள்ளுக்கும், வெளிக்குமாக நடந்து கொண்டேஇருந்தாள் அலமு. இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த எனக்கு அவளைப் பார்க்கவருத்தமாகவும், .பரிதாபமாகவும் இருந்தது.
’நீ ஏன் தேவையில்லாமல் வீட்டிற்கும், வாசலுக்கும் அலைந்துகொண்டிருக்கிறாய்? வாசல் வரை வருபவளுக்கு வீட்டுக்குள் வர வழி தெரியாதா என்ன?என்றேன்.
அலமுவின் கோபம் திசை மாறியது. மணி 6 ஆச்சு. உங்களுக்கு இன்னொருஃகாபி வேணும்.அவ்வளவுதானே?இதோ போட்டுக் கொண்டு வரேன். கொஞ்சம் வாயை மூடிட்டுஇருங்க’ என்றவள் சொன்னபடி செய்தாள். நான் அவளின் கவனத்தை திசை மாற்ற பலமுயன்று போய் தோற்றுத்தான் போனேன்.
உங்களுக்கு என்ன?பெத்த வயிறுக்குத் தான் வலி தெரியும்.உங்களுக்கு என்னஆம்பிளை’என்று சொல்லியபடி திரும்பவும் வாசலுக்குப் போனாள் அலமேலு,
மணி 6.30 இருக்கும்.
வாசலில் அபியின் கார் வந்து நின்றது. தன் மகன் அஷோக்குடன் அபி ஒருவழியாக வந்துசேர்ந்தாள்.அலமுவின் முகத்தில் பல்பு எரிந்தது.
’ஏன் லேட்” என்றாள் அலமு அவளிடம்.
அபி அதற்கு, ’என்னை என்னம்மா பண்ண சொல்ற? எனக்கு ஃபோன்ல சார்ஜ் போடக் கூடநேரமில்லை.உங்கப் பேரன் கேம் விளையாடியே அப்பப்ப சார்ஜை தீர்த்துடறான்.அவன்ஸ்கூலுக்குப் போனால் போட்டிக்கு பேரண்ட்ஸ் மீட்டிங்,ஸ்பெஷல் கிளாஸ், அப்படி இப்படின்னுசொல்லி பல மணி நேரம் என்னை ஸ்கூலிலேயே வேலை வாங்கிவிடுகிறார்கள். சனிக்கிழமைபேருக்குத்தான் லீவு. ஸ்கூல்ல இருந்து கிளம்பும் போதே லேட் ஆயிடுச்சு. அப்புறம் இவனுக்குடிரஸ் மாத்திட்டுட்டு கூட்டிட்டு வர இவ்ளோ நேரம் ஆயிடுச்சு. இதையெல்லாம் நீ துளிக் கூடபுரிஞ்சுக்க மாட்டியா? வயசாச்சே தவிர உனக்கு வரவர உலகமே புரியலே’ ’ன்னு. படபடவெனஅம்மாவிடம் சொல்லியபடி அபி.என்னைப் பார்த்தாள்.
அவளிடம் நான்,’ ஆமாம்’ என்றபடி தலையை அசைத்தேன்.வேறு வழி.
’சரி, சரி. ஒரு டம்ளர் காஃபியைக் கொடு.நான் குடித்து விட்டு கிளம்ப வேண்டும்’என்றாள்.
வந்த காஃபியைக் குடித்துக் கொண்டிருந்த போதே அபிக்கு.அவளுடைய கணவனிடமிருந்துஃபோன் வந்தது.
’அவருக்கு கார் வேண்டுமாம்.நான் கிளம்பறேன்’என்று சொல்லிய படியே கார் சாவியைஎடுத்துக் கொண்டு புறப்பட்டாள்.
அவர்களுக்கு ‘டாட்டா’சொல்லிவிட்டு வந்த அலமேலு என்னை ஒரு முறை முறைத்தாள்.அவளிடம்,‘அபிக்கு என்று ஒரு குடும்பம் இருக்கு.அவளுக்கும்பொறுப்புகள்பல.இனியும் சிறுகுழந்தையைப் போல அவளை நடத்தாதே’என்றேன்.
இந்த பாசம் என்பது எப்பொழுதுமே இறங்கு முகம் தான் என்பது எனக்கேஇன்றுதானே புரிந்தது.அலமுவுக்குப் புரிய இன்னும் சிலகாலம் ஆகும் என்று எனக்கு நானேசொல்லிக் கொண்டு என் மனதைத் தேற்றிக் கொண்டேன். அலமு காலண்டரில். அடுத்தசனிக்கிழமைத் தேதியைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
படுக்கப்போன அலமு ஃபோனில் மகளுடன் பேச முயற்சித்தாள்.வீட்டுக்கு அவள்பாதுகாப்பாக போய்ச் சேர்ந்து விட்டாளா?என்ற கவலை அவளுக்கு. எதிர்முனையில் வழக்கம்போல பதில் வரவில்லை.
ஆனால்,அலமேலுவின் பேரன்தான்,’எஸ்.பாட்டி’என்று குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பிஇருந்தான்.ஒரு வழியாக அவளின் சனிக்கிழமை தவிப்பு தணிந்து அவள் தூங்கத்தயாரானாள். நானும்தான்.

Leave a comment
Upload