
சென்னை அடையார் பகுதியில் பீகார் சேர்ந்த தொழிலாளியும் அவரது மனைவியும் குழந்தையும் படுகொலை செய்யப்பட்ட சம்பவமும் நந்தனம் அரசு கல்லூரியில் இளம்பெண் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் ஒரே நாளில் நடந்திருக்கிறது.முதலமைச்சர் தமிழ்நாடு பெண்களுக்கு பாதுகாப்பு தரும் மாநிலம் என்று பெருமை பேசுகிறார். ஒரே நாளில் இரண்டு பெண்கள் பாலியல் தொல்லைக்கு ஆளாகி ஒருவர் கொலை செய்யப்பட்டு இருக்கிறார். இன்னொருவர் பாதிக்கப்பட்டிருக்கிறார் பெண்கள் மீதான பாலியல் வன்முறை என்பது தமிழ்நாட்டில் தொடர்கதையாக இருக்கிறது. அப்படி இருக்கும்போது தமிழ்நாடு தான் பெண்களுக்கான பாதுகாப்பான மாநிலம் என்பது வெறும் கட்டுக்கதை என்பதைத்தான் இந்த சம்பவங்கள் நிரூபிக்கின்றன. காவல்துறை தன் வசம் வைத்திருக்கும் முதல்வர் தவறு செய்பவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுத்து அவர்களின் சட்டத்தின் முன் உரிய தண்டனை வாங்கித் தருவதை தனது கடமையாக செய்ய வேண்டும். அதுவரை இந்த வாய்ச்சவுடால் பேச்செல்லாம் வேண்டாம்.

Leave a comment
Upload