கர்நாடக முதல்வராக பசவராஜ் பொம்மை பதவியேற்பு.
அந்த பொம்மைக்கு பதில் இந்த பொம்மை. அவ்வளவுதான்...
உள்ளாட்சித் தேர்தலுக்கு தயாராகிக் கொண்டிருக்கிறோம்... - கமலஹாசன் உறுதி
தேர்தல் முடிவுக்குப் பிறகு மிச்ச மீதி தொண்டர்கள் அறிவாலயத்திற்கு போக தயாராக இருக்கிறார்கள்.
தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றக்கோரி அதிமுக ஆர்ப்பாட்டம்...
திமுக தேர்தல் அறிக்கையில் ஊழல் அதிமுக அமைச்சர்களை சிறைக்கு அனுப்புவோம் என்று சொல்லியிருக்கிறார்கள்... அதற்குதான் இந்த ஆர்ப்பாட்டம்.
தேர்தலில் நண்பர்கள் பணத்துக்கு விலை போய்விட்டார்கள்... - அமைச்சர்துரைமுருகன்
எல்லாவற்றிற்கும் ஒரு விலை உண்டு என்ற தத்துவம் நிஜம் தான் போலிருக்கிறது.
எம்ஆர் விஜயபாஸ்கர் அசுர வளர்ச்சியில் பணக்காரர் ஆனது எப்படி? - டிடிவி தினகரன்.
இந்த தொழில் ரகசியம் எல்லாம் உங்களுக்கு தான் தெரியும்.
சைபர் குற்றங்களை தடுக்க நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டும்... - முதல்வர் ஸ்டாலின்
அது குற்றவாளிக்குத் தான் தெரியும். அவங்ககிட்ட தான் நம்ம கேட்டு தெரிஞ்சிக்கணும்.
Leave a comment
Upload