தொடர்கள்
கவிதை
பஞ்ச வர்ணம்... - சி. கோவேந்த ராஜா.

20210630214140572.jpeg

எந்தன் எண்ணமெல்லாம்...
உந்தன் வண்ணமயம்...!

எந்தன் கருவிழிகள்...
எங்ஙனம்... பன்னிற விழிக்கோளமாயின...?!
ஓ... உந்தன் மாயச் சேலையா......?!

எந்தன் நாசியோரம்...
என்ன.. ஒரு.. சுகந்த மணம்...!?
ஓ... உந்தன் மாய மாலையா...?!

எந்தன் செவி மடல்களில்...
எங்ஙனம் பரவியது...
நின் கூந்தல் வாசம்...?!
ஓ... உந்தன் மாயச் சோலையா...?!

எந்தன் உத‌ட்டோரம்...
ஏது இந்த புது வண்ணம்...?!
ஓ... உந்தன் மாய வேலையா...?!

எந்தன் நெஞ்சமெல்லாம்...
உந்தன் பஞ்ச வர்ணம்...!

ஐம்புலன்களிலும்... உன் ஆட்சி...!
ஐம்பூதங்களிலும்.. உன்.... காட்சி..!

எந்தன் எண்ணமெல்லாம்...
உந்தன் வண்ணமயம்...!