தொடர்கள்
கவிதை
ஜெய்ஹிந்த் செம்பக ராமன் எனும் தமிழன்... - இரா.சு.இராசன்

புரோ இந்தியா இதழ்.

20210630213404258.jpeg

தாயகத்தின் கிழக்கிலும்
மேற்கிலுமாய் போரில்
வியத்தகு சாகசங்கள்
புரிந்தபின்னே எம்டன்
துயரத்தில் ஆங்கிலேயப்
பேரரசை ஆழ்த்தி
அயரவைத்து மீண்டது
சர்மனிக்கு விரைந்து.

பிள்ளையவர்கள் சுவிஸ்
நாட்டில் ‘புரொ இண்
டியா’ என்ற பத்திரிகை
வெள்ளையன் செய்
கொடுந்தீமையெலாம்
உலகறிய்ச் செய்ய
உள்ளத்தில் இவரைப்
போல் விடுதலை
வேட்கை கொண்ட
கள்ளாமிலா இந்திய
நண்பர்களை
இணைத்துத்
தொடங்கலானார்.

இந்தியத் திருநாட்டின்
விடுதலை மட்டும்
அல்ல. உலகெங்கும்
ஒடுக்கப்பட்டு
தந்தமக்கு உரிமை
தரப்படாமல்
நிறத்தாலும் வேறு

பாகு பாட்டாலும்
நிந்திக்கப் பட்டு
தாழ்நிலையில்
அடிமைகளாய்
அல்லலுறுவார்
அந்த நிலை நீங்கி
விடுதலையும்
சமத்துவமும்
பெற முயன்றார்.

சாட்டோ செம்பக்

‘சாட்டோ’ என்பார் நாமறிந்த
கவிக்குயில் சரொஜினி
யின் தமையன் வீரேந்திர
சட்டோபாத்தியாயா.

‘சாட்டோ செம்பக்
பெர்லின் கமிட்டி ‘சர்மனியில்
அமைக்கப்பட்டு பிரித்தானிய
ருக்கெதிரான. போர்த்திட்டம்

தீட்டி உலகெங்குமுள்ள
இந்தியரையும் ஆங்கில
ஆதிக்க எதிர்ப்பாளர்
அனைவரையுமிணைத்து

மூட்டி விட்ட தீக்கொழுந்து
சுட்டு விட இங்கிலாந்தின் ஒற்றர்படை இந்த இருவரையும்
தீர்த்துக் கட்டி விடக்

கொலையாளி ஒருவனை
ஏவி விட, மிக முயன்றும் தோல்வி
கண்ட கொலையாளி பின்னாளில்
ஏழுத்தாளனாய் மாறியதும்

பல நவீனங்கள் போராளி
கள் வாழ்க்கை தனை அடிப்
படையாய்க் கொண்டு படைத்த
‘சாமர்செட் மாவம்’ அவரென்றும்

மலையாள மனோராமா
கட்டுரைத்துக் கூறியுள்ள
செய்தியிலும் காணக்கிடைத்து
படித்தறிதேன்.

விலைமதிக்க முடியாத
ஈருயிர்கள் தம் திறத்தால் தப்பி
தமைக்காத்து, மேலும் பல
பணிகள் தாயக விடுதலைக்கும்

நிறத்தாலும்
இனத்தாலும் இழிந்த நிலை
கொண்டு அநீதி அடக்குமுறை
யாலே அடிப்படை உரிமை

துறந்து துயர் தாண்ட
இயலாது தவிக்கின்ற மனித
குலம் தனைக்காத்து அவர்க்
கின்னல் தருகின்ற

அறம் பேணாதாட்சி
புரிகின்ற பேரரசின் தலைமை
களைக்ககண்டு நீதி கேட்டுத்
தேவையெனில் போரடி

மற வழியும் கைக்கொண்டு
மாற்றங்கள் நிலை நாட்டும்
பெரும் பணிகள் எல்லாமே
தொடர்ந்துரைப்பேன்.

(வருமிதழில் காபூலில்
இந்திய அரசமைத்த வரலாறும்
அமெரிக்க ஆட்சி தலைமை
தனைச் சந்தித்துக் கறுப்பி
னத்தார் கண்ணியமுமம்
சமத்துவமும் வேண்டி நின்ற
காதை தனை உரைப்பேன்.)