தொடர்கள்
வாசகர் மெயில்
வாசகர் மெயில்

20211025075759807.jpeg


பெட்ரோல் படுத்தும் பாடு? - கே. பாலஸ்வாமிநாதன்

பெட்ரோல், டீசல் விலை பற்றிய செய்தி படித்ததும், சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி தடுப்பதை போலிருக்கே!

ராமபத்திரன், ராயபுரம்


சென்னையை காப்பாற்றிய திருமலை எம்பெருமான்..! - ஆர்.ராஜேஷ் கன்னா

சென்னையை தாக்கவந்த கனமழையை திருமலை ஏழுமலையான் தடுத்து ஆட்கொண்ட தகவல் பிரமிப்பை ஏற்படுத்தியது. லைவ் அப்டேட் செய்த ராஜேஷ் கண்ணாவுக்கு நன்றி.

ஜெகதீஸ்வரி ராமன், நெல்லை


‘ஆட்டோ-ரினியூவல்’ - வெ.சுப்பிரமணியன்

உண்மைதான் தலைவரே. நண்டு கொழுத்தா வளையில் தங்காத மாதிரி, நாலு காசு வந்துட்டா, என்ன செய்யறதுன்னு அலையரவங்களை தேடிப்புடிச்சு வேட்டையாடற கூட்டாளிகளும் பங்காளிகளும் நாட்ல இருக்காங்க. அதிகமா ஆசைப்படாம, இருக்கிறதை காப்பாத்திக்கிறதுதான் கெட்டிக்காரத்தனம். ஆட்டோ ரெனிவல் நல்ல பாடம் சொல்லற கதை.

கலைஅரசன், சென்னை


திமுக மீது விவசாயிகள் அதிருப்தி...- ஜாசன் (மூத்த பத்திரிகையாளர்)

மழை வெள்ளத்தால் பயிர்கள் சேதமடைந்த விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்குவதில் ஏன் இந்த மாறுபட்ட கருத்துக்கள்? விளைநிலங்களில் தேங்கியுள்ள மழைநீரை அகற்றி, அதில் மீண்டும் உணவு பயிர்களை விளைவித்திட, விவசாயிகள் மீது போலி அனுதாபம் காட்டும் அனைத்து கட்சி தலைவர்களும் உதவலாமே?! வெறும் வாய்சவடால் எதற்கு?

செல்வசேகரன், திருவாரூர்


சுகப் பிரசவமே சுகம்... - ஸ்ரீநிவாஸ் பார்த்தசாரதி

சுகப்பிரசவமே சுகம் கட்டுரை மிக அற்புதம். அமைச்சர் கூறியதை போல், தனியார் மருத்துவமனைகள் மற்றும் குறித்த நாள், நட்சத்திரத்தில் குழந்தை பிறக்க வேண்டும் என்ற மூடநம்பிக்கை அனைவரிடமும் மாறவேண்டும். இனி எல்லாம் சுகப்பிரசவமே என்ற மனநிலை பெண்களிடம் ஏற்பட வேண்டும்.

அம்ரிதா மோகன், செங்கல்பட்டு


"மழை, வெள்ளம், நிலச்சரிவு, குளிர்... நடுங்கும் நீலகிரி" - ஸ்வேதா அப்புதாஸ்

ஊட்டி, குன்னூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தொடர் மழை, நிலச்சரிவு போன்றவையால் நாசமடைந்து இருப்பது வேதனைக்குரிய விஷயம். அதனால் மழை சீசன் முடியும்வரை ஊட்டிக்கு வராதீங்கனு ஸ்வேதாவின் எச்சரிக்கை மிக நன்று!

பார்த்திபன், தாம்பரம்


நாதஸ்வர தர்பார் - 17... - இசை விமர்சகர் வி. சந்திரசேகரன்

நாதஸ்வர வித்வான்கள் எஸ்ஆர்ஜி சம்பந்தம், ராஜண்ணா குறித்து மாயவரத்தான் சந்திரசேகரன், மிக அழகான டிசம்பர் சங்கீத விழாவை போல் முன்னமே கலக்கலாக கொடுத்துவிட்டார்! இனி டிசம்பர் சீசனுக்கு கொடுக்கும் சங்கீத செய்திகளுக்கு கட்டியம் கூறுவதைப் போல் அமைந்துள்ளது!

ராஜலட்சுமி சிவராமன், குரோம்பேட்டை


"மலைகளின் அரசிக்கு குட் பை..” - ஸ்வேதா அப்புதாஸ்

ஊட்டி மலையின் இளவரசியாக திகழ்ந்த கலெக்டர் இன்னொசன்ட் திவ்யாவுக்கு, மணிமகுடம் வைத்தது போல் இக்கட்டுரை அமைந்துள்ளது. சிறப்பான பணிக்கு சிறந்த விமர்சனங்கள் தான் கிடைக்கும் என்பதில் மாறுபட்ட கருத்து இல்லை. அவர் எங்கிருந்தாலும் சிறப்பாக பணிபுரிவார் என்பதில் ஐயமில்லை! ஸ்வேதா அப்புதாஸ் அருமையான வார்த்தைகளில் அவரை ஆறுதல் படுத்தியுள்ளார்!

ஜமுனா பிரபாகரன், அயப்பாக்கம்


மிடில் பெஞ்சு - 1 - இந்துமதி

கல்லூரி காலம் குறித்து வாலிபம் என்பது பறவை குஞ்சுக்கு முளைத்த புது றெக்கை போல மகிழ்ச்சியை மட்டுமே தேடி அலையும் பருவம். வானத்தில் பறக்கும் சுதந்திரத்தையும், வல்லூறுகளுக்கான எச்சரிக்கையையும் ஒருங்கே தரவல்லது என மிக அழகாக மிடில் பெஞ்ச் 1-ல் இந்துமதி விளக்கியது அருமை!

செந்தமிழ் செல்வி, நாமக்கல்


‘ஆட்டோ-ரினியூவல்’ - வெ.சுப்பிரமணியன்

நல்ல வசதியாயிருக்கிற மாப்பிள்ளைகளுக்கு இதுபோன்ற பழிவாங்கும் மச்சினர்கள் இருப்பது சகஜம்தான் என்பதை ஆட்டோ ரெனிவல் கதை மூலம் வெட்ட வெளியில் போட்டு உடைத்துவிட்டீரே! இதன் உள்ளார்த்தம் புரியாமல் என் மச்சினன், 'நன்னாயிருக்கு அத்திம்பேர்'ங்கிறான்!

பாகீரதி சீனிவாசன், மயிலாடுதுறை


உயர்ந்த மண்...! - சி. கோவேந்த ராஜா.

மண்ணின் பெருமை அதன் மாண்பின் மகிமை மனிதனின் மனதில் மங்காது பதித்துவிட்டீர்... அருமை அருமை....🙏


திருப்பத்தைத் தருமா, திருப்புகழ் நியமனம்? - ஆர். நூருல்லா (மூத்த பத்திரிகையாளர்)

சென்னை மெட்ரோ மாநகர வெள்ள மேலாண்மை மற்றும் தணிப்பு ஆலோசனைக் குழுத் தலைவராக வி. திருப்புகழ் நியமனம் குறித்து பத்திரிகையாளர் நூருல்லாவின் கட்டுரை வித்தியாசமாக இருந்தது. திருப்புகழின் முன்பிருக்கும் பணி சவால்களையும் அழகாக விவரித்திருக்கிறார். திருப்புகழ் பணி வெல்லட்டும்!

சியாமளா விஸ்வம், ராயப்பேட்டை


பத்மஸ்ரீ விருது வென்ற வில்லிசை கலைஞரின் நினைவலைகள்... - 41 - கலைமாமணி பாரதி திருமகன்

ஒரு வாரம் சென்னை மழை வெள்ளத்துல சுப்பு ஆறுமுகம் தொடர் காணலியேனு தவிச்சோம். அடுத்த வாரமே உத்தம வில்லன் படத்துக்கு கமலுடன் சந்திப்புனு பாரதி டாப் கியர்ல தொடரை துவங்கிட்டாங்க. பலே... பலே!

சிவகாமி செல்வன், திருக்கடையூர்


காவலதிகாரம்... - பா. அய்யாசாமி

உயரதிகாரியே தவறுக்கு துணைபோகவும், நியாயத்துக்காக போராடியவர்களை கைது செய்யக் கோரியும், இந்த ஊரை சேர்ந்த நாங்கள் இடமாற்றம் கோரி விண்ணப்பிக்கிறோம் எனக் கூறிய டிஎஸ்பி, எங்களை போன்ற தமிழ் நெஞ்சங்களில் இடம்பிடித்து விட்டார். இதுதாம்பா உண்மையான போலீஸ்!

மாயா குப்புசாமி, ஊத்துக்கோட்டை


மயக்கும் மப்புட்டோ! - மகேஷ் லக்ஷ்மி நாராயணன்

மகேஷ் லஷ்மி நாராயணனின் மொசாம்பிக் நாட்டு பயணக் கட்டுரை செம கலக்கல்... மப்புட்டோ பேரை கேட்டவுடன் கொஞ்சம் ஜெர்க் ஆனேன். ஆனால், அவ்வளவு சுத்தமாக இருக்கு னு படிச்சதும், எங்களுக்கு அந்த ஊருக்கு போக ஆசை வந்திடுச்சு!

ராதா வெங்கட், ஆலப்பாக்கம்


கொரோனா வடிவில் வெள்ளரிக்காய்! - மாலாஸ்ரீ

கொரோனா பயம் போயிடுச்சேனு பார்த்தா... இப்போ காய்கறி, பழங்கள், தின்பண்டங்கள் எல்லாம் கொரோனா வடிவில் வருதோ? அடக் கண்றாவியே!

பாக்கியம் ராமசாமி, திருவள்ளூர்


சிறுவர் பாடல்கள் - 2 - வேங்கடகிருஷ்ணன்

ரொம்ப நாள் கழிச்சு சிறுவர் பாடல்களை தமிழில் படிக்கும்போது ரொம்ப த்ரில்லா இருக்கு!

ரோஹித், அட்சயா, அனுஷா, மாதவரம்


ரிக்‌ஷா தொழிலாளிக்கு ₹1 கோடி சொத்து எழுதி வைத்த மூதாட்டி! - மாலாஸ்ரீ

இந்தக் கட்டுரையில் வரும் சம்பவம், நேர்மைக்கு கிடைத்த பரிசாக பாராட்டலாம்! இது ஓரிருவருக்கு மட்டுமே கிடைக்கும்.

ராதாகிருஷ்ணன், குன்றத்தூர்


வாவ் வாட்ஸப்!

குறும்பு, அழுகுணி ஆட்டம், ஸ்மார்ட் பிராக்டீஸ்... இப்படி ஒவ்வொண்ணா பார்த்துட்டு போறதுக்குள்ள டென்ஷனாயிடுச்சு... எனிவே, ஆல் இஸ் வெல்!

கௌஷிக், தீக்ஷிதா, சாய்கிருஷ்ணா, சென்னை


மிஸ்டர் ரீல்...! - ஜாசன்

Though it is coming as Reel.... sounds 120% TRUE

குருசாமி மணிவண்ணன்


வேளாண் சட்டம் வாபஸ்... - ஜாசன் (மூத்த பத்திரிகையாளர்)

Please write unbiased opinion being a senior journalist, though you may be a BJP supporter. thanks

குருசாமி மணிவண்ணன்


கண்ணப்ப நாயனார்!! - ஆரூர் சுந்தரசேகர்.

arumaiyana article!

சாய்சந்திரன், மதுரை


மயக்கும் மப்புட்டோ! - மகேஷ் லக்ஷ்மி நாராயணன்

Good travelogue indeed