தொடர்கள்
கவிதை
காதல் முக நூல்...! - சி. கோவேந்த ராஜா.

20220021213120541.jpeg

இரு விழிகளில்....
இனிய‌ போர்க்களம் கண்டேன்....
அதில் புகுந்திட ஆவல் கொண்டேன்....!

திரை இதழ்களில்......
இன்சுவை விருந்தினைக் கண்டேன்....!
அதைச் சுவைத்திட‌ ஆவல் கொண்டேன்....!

முகமதனில்....
புது இலக்கியம் கண்டேன்....
அதை முழுதாய் படித்திட ஆவல் கொண்டேன்....!

மனமதனில்....
மயங்கியே நின்றேன்....!

காதல் முக நூலைக்
கண்ட நாள் முதலாய்... நான்
காணாமற் போனேன்...!