நயன்தாரா வாழ்க

ஜூன் மாதமாம்….நடிகை நயன்தாராவை ரொம்ப ஆண்டுகளாக காதலிக்கிறார் இயக்குனர் விக்னேஷ் சிவன். சமீபத்தில் நிருபர்கள் நயன்தாராவுடன் திருமணம் பற்றி கேட்டபோது…காத்துவாக்கில் 2 காதல் படம் ரிலீசுக்கு பிறகு எங்கள் திருமணம் ஏற்கனவே நாங்கள் முடிவு செய்திருந்தோம் என்றார் தற்போது காத்துவாக்கில் 2 காதல் படம் ரிலீஸ் அவர்களின் நெருங்கிய வட்டாரம் ஜூன் மாதம் திருமணம் என்கிறார்கள் நம்புவோம்.
[தமிழ் தெலுங்கு முன்னணி நட்சத்திரம் சமந்தா தனது 35வது பிறந்தநாளை கொண்டாடி Ask Sam என்ற ஹோஷ்டாக்கில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் சொன்னார்அதில் நயன்தாரா பற்றிய கேள்விக்குநயன்தாரா எப்போதும் நயன்தாரா தான்அவரைப்போல் யாரும் கிடையாது.அவரது உண்மை ,நேர்மை மற்றும் கடுமையாக உழைக்க கூடியவர் நயன்தாரா என்று நயன்தாராவை புகழ்ந்து தள்ளியிருக்கிறார்
படத்தலைப்பு எப்போ

அஜித் பட தலைப்பு அஜித் பிறந்தநாள் மே முதல் தேதி அவரது 61வது படத்தின் தலைப்பு அனேகமாக அன்று தெரிய வாய்ப்பு இருக்கிறது.அவர் 61 வது படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் முடிவடைந்துள்ளது.அஜித் படத்தை எச் வினோத் மூன்றாவது முறையாக இயக்குகிறார் மே இரண்டாவது வாரத்தில் அடுத்த கட்ட படப்பிடிப்பு தொடங்கப்படும் என்கிறார் இயக்குனர்
ரயிலில் விளம்பரம்

கடந்த 3 ஆண்டுகளாக கமல் நடித்த படம் எதுவும் வெளியாகவில்லை ஜூன் மாதம் கமல் நடித்த விக்ரம் படம் வெளியாக இருக்கிறது இந்த படத்துக்கான விளம்பரங்களை ரயில் பெட்டிகளில் மிகப்பெரிய அளவில் விளம்பரம் செய்திருக்கிறார்கள் கமல் இந்த விளம்பரங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்து எனக்கு ரயில் பயணம் பிடிக்கும் என்று குறிப்பிட்டிருக்கிறார்
மொபைல் பற்றிய படம்

ஆல் இன் பிக்சர்ஸ் பட நிறுவனம் தயாரித்திருக்கும் படம் பயணிகள் கவனிக்கவும் மலையாளத்தில் விக்ருதி என்ற பெயரில் வெளியாகி வெற்றி பெற்ற படம் இது அதன் தமிழ் பதிப்பு தான் பயணிகள் கவனிக்கவும் நடிகர் விதார்த் கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள் ஆஹா டிஜிட்டல் தளத்தில் இந்த படம் ரிலீஸ் ஆகிறது சமூக வலைத்தளம் மொபைல் பயன்பாடு பற்றியவிழிப்பு உணர்வை இந்தப்படம் ஏற்படுத்தும் என்கிறார் தயாரிப்பாளர்.

Leave a comment
Upload