தொடர்கள்
வலையங்கம்
வலையங்கம்

தற்கொலையில் முடிந்த லஞ்சம்

20220414082538301.png

திருவாரூர் மாவட்டம் இளைஞர் மணிகண்டன் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் உதவி கேட்டு விண்ணப்பித்திருந்தார். குடும்பத்தில் முதல் முதலில் வீடு கட்டும் பொதுமக்களை ஊக்குவிப்பதற்காக இந்த திட்டத்தின்படி 2.70 லட்சம் ரூபாய் வழங்கப்படும் இது மத்திய அரசு திட்டம் மாநில அரசு அதை செயல்படுத்த வேண்டும்.

கட்டிடத் தொழிலாளியான மணிகண்டன் இந்த திட்டத்தில் விண்ணப்பித்திருந்தார். பணத்தை விடுவிப்பதற்கு வட்டார வளர்ச்சி பணி மேற்பார்வையாளர் ஏற்கனவே 18 ஆயிரம் லஞ்சம் வாங்கிக்கொண்டு முதலிரண்டு தவணைகளை விடுவித்து இருந்தார். இன்னும் 5 ஆயிரம் ரூபாய் தந்தால்தான் மூன்றாவது தவணைத் தொகை விடுவிக்கப்படும் என்று அதிகாரி மகேஸ்வரன் சொன்னதால் மன உளைச்சலுக்கு ஆளான கட்டிட தொழிலாளி மணிகண்டன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

பணி மேற்பார்வையாளர் மகேஷ்வரன் லஞ்சம் வாங்கிக் கொண்டும் பணத்தை தராமல் இழுத்தடிப்பது பற்றிய தனது ஆதங்கத்தை வீடியோவில் பதிவு செய்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு இருந்தார். தற்கொலைக்கு விஷம் குடித்த மணிகண்டன் சிகிச்சை பலனளிக்காமல் மருத்துவமனையில் இறந்து போனார். உச்சநீதிமன்றம் ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்ட போது மந்தவெளி ராஜா அண்ணாமலைபுரத்தில் ஒரு குறிப்பிட்ட கட்சியின் நிர்வாகி தீக்குளித்து கொண்டார் என்றதும் முதல்வர் அந்த கட்சியயை சமாதானப்படுத்த 10 லட்சம் ரூபாய் நிவாரணத் தொகை வழங்கப்படும் என்று அறிவித்தார்.

இப்படி ஒவ்வொரு முறையும் இதுபோல் தற்கொலை செய்து கொள்ளும் எல்லோருக்கும் அரசியல் காரணங்களுக்காக நிவாரண தொகை அரசு வழங்குவது வாடிக்கையான விஷயம் ஆகிவிட்டது ஆனால் பிரதம மந்திரியின் திட்டத்தின் கீழ்லஞ்சம் வாங்கிய பிறகும் தர வேண்டிய தவணைத் தொகையை தராமல் இழுத்தடித்து தற்கொலைக்கு தூண்டிய அரசு ஊழியரை இந்த அரசாங்கம் தற்காலிக நீக்கம் மட்டுமே செய்துள்ளது. தற்கொலை விஷயத்தில் அரசாங்கத்தின் அளவுகோல் முரண்படுகிறது என்று அவர்கள் மனசாட்சி உறுத்த வில்லையா என்று கேட்கத் தோன்றுகிறது.