தொடர்கள்
கவர் ஸ்டோரி
இலங்கை -குடும்ப ஆட்சி பட்டபாடு! !! - ஜாசன் மூத்த பத்திரிகையாளர்

20220414100353681.jpeg

இலங்கையில் ராஜபக்ஷ குடும்பத்திற்கு எதிராக அல்லது குடும்ப ஆட்சிக்கு எதிராக அரசியல் கட்சிகளை விட சிங்கள இன மக்கள் தான் தீவிரமாக போராட்டம் நடத்தினார்கள்.அந்த போராட்டம் மே 9-ஆம் தேதி வரை அகிம்சை யான முறையில் தான் நடந்து கொண்டிருந்தது.அவர்கள் கோரிக்கை ராஜபக்சே குடும்பம் பதவி விலக வேண்டும் என்பது தான்.ஏற்கனவே மகிந்த ராஜபக்ச அமைச்சரவையில் இருந்த அவரது குடும்பத்தினரை சேர்த்து ஒட்டுமொத்த அமைச்சரவையும் ராஜினமா செய்திருந்தது.

அப்போது போராட்டக்காரர்கள் ராஜபக்ச சகோதரர்களும் ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்திக் கொண்டிருந்தார்கள்.கிட்டத்தட்ட 2 மாதமாக இந்த போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது.மே 8ஆம் தேதி அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவியிலிருந்து மகிந்த ராஜபக்சே விலகுவார் என்று அறிவித்தார்.தனது பதவியை ராஜினாமா செய்வதாக மகிந்தா ராஜபக்சே தேதி குறிப்பிடாமல் கையெழுத்திட்டு இருந்த கடிதத்தை வெளியிட்டார்.

மே 9 ஆம் தேதி காலை பிரதமரின் அலரிமாளிகையில் தனது ஆதரவாளர்களை அழைத்துப் பேசினார் மகிந்தா தனது பதவி விலகலுக்கு காரணமான போராட்டக்காரர்களை கடுமையாக தாக்கி அவர்களை விரட்டி அடியுங்கள் என்று தனது ஆதரவாளர்களுக்கு உத்தரவு போட்டார்.அவரது அதிகாரபூர்வ இல்லத்தை முற்றுகையிட்டிருந்த இளைஞர்களை மஹிந்த ஆதரவாளர்கள் கடுமையாக தாக்க முற்பட அப்போது சுதாரித்துக் கொண்ட இளைஞர்கள் பெருமளவில் கூடி பதில் தாக்குதல் நடத்தினார்கள். பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க கூடாது என்று அங்கு பணிபுரிந்தவர்களை காவல்துறை விரட்டி அடித்திருக்கிறது.

20220414100420944.jpeg

இதையெல்லாம் பார்த்ததும் போராட்ட இளைஞர்களின் கோபம் இன்னும் அதிகமானது. ஆளுங் கட்சி எம்.பி அமைச்சர்களின் வீடுகளை சூறையாடினார்கள் தீ வைத்துக் கொளுத்தினார்கள்.பல முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த உணவுப் பொருட்களை எடுத்து வந்து எல்லோருக்கும் இலவசமாக வழங்கினார்கள்.மஹிந்த ராஜபக்ஷவின் மாளிகையும்தாக்குதலுக்கு ஆளானது . விலையுயர்ந்த கார்கள் எல்லாம் தீக்கிரையானது.மஹிந்த ராஜபக்சவே ராணுவ பாதுகாப்புடன் குடும்பத்துடன் ஹெலிகாப்டரில் தப்பித்து திரிகோணமலை கப்பல் தளத்தில் அடைக்கலமானார்.ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டிருந்தாலும் மக்கள் பெருமளவில் வெளியே வந்து ராஜபக்ச குடும்பத்திற்கு எதிராக தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினார்கள்.

மகிந்த ராஜபக்சே ராஜினாமாவை தெருவில் பால் சோறு சமைத்து கொண்டாடினார்கள் பொதுமக்கள்.அந்தளவுக்கு அந்த குடும்பத்தின் மீது வெறுப்பு இருந்தது.நடந்த வன்முறையில் 9 பேர் பலியானார்கள் அவர்களில் அமர கீர்த்தி என்ற ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினரும் ஒருவர்.இவர் போராட்டக்காரர் இடம் சிக்கி இறப்பதை விட தற்கொலை செய்து கொள்வது நல்லது என்று தனது கைத்துப்பாக்கியால் தன்னையே சுட்டுக்கொண்டு இறந்து போனார்.அவரது மெய்க்காப்பாளர்கள் தாக்குதலில் பலியானார்.இலங்கை அரசியல் கட்சிகள் ராஜபக்சே ஆதரவாளர்கள் நடத்திய வன்முறை அதற்கு எதிர்வினையாக பொதுமக்கள் நடத்திய தாக்குதல் இரண்டையும் கண்டித்து அறிக்கை வெளியிட்டார்கள்.

ஆனால் ராஜபக்சே பெற்றோர்களின் சிலை நினைவகம் அருங்காட்சியகம் என்று அவர்களின் குடும்ப உறுப்பினர்களின் இடங்களைத் தேடி தேடி போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தி இருக்கிறார்கள்.அந்த அளவுக்கு ராஜபக்ச குடும்பத்தின் மீது மக்களுக்கு கோபம் இருந்தது. கிட்டத்தட்ட 25 ஆண்டுகள் கோலோச்சிய ராஜபக்ச குடும்பத்திற்கு இது மிகப்பெரிய பின்னடைவு. சீனா ராஜபக்ச குடும்பத்திற்கு அரசியல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பெரும் உதவி செய்தது.இப்போது மகிந்த ராஜபக்சே ராஜினாமா பற்றி பெரிதாக எந்தக் கருத்தும் சொல்லவில்லை.

இலங்கையின் மொத்த மக்கள் தொகை 23 மீல்லியன்இது டெல்லியின் ஜனத்தொகை விட குறைவுதான்.அந்த சிறிய தீவு நாட்டிற்கு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியைசரி செய்வதற்கு பதில் அண்டை நாடுகளில் கடன்வாங்கி சமாளிக்க நினைத்தார்கள் ராஜபக்சே வகையறாக்கள்.அதுதான் இந்த மொத்த பின்னடைவுக்கும் மூலகாரணம். ஐ.எம்.எப் நிதிநிறுவனம் கடனுக்கு பாராளுமன்ற ஒப்புதல் அவசியம் என்று நிபந்தனை விதித்தது.

20220414100555797.jpeg

(வாட்சப்பில் வைரலாகும் படம். விதி வலியது. கர்ம வினை என்ற வாசகத்தோடு)

ஆனால் பாராளுமன்றத்தில் ராஜபக்சே கட்சிக்கு பெரும்பான்மை இல்லை. அதனால்தான் அனைத்துக் கட்சி அமைச்சரவைக்கு அழைப்பு விடுத்தார் அதிபர் கோத்தபயா.ஆனால் எதிர்க்கட்சிகள் முதலில் பிரதமர் பதவி விலக வேண்டும் என்று வற்புறுத்தினார்கள்.அதிபர் அதிகாரம் குறைக்கப்பட வேண்டும் என்று நிபந்தனை வைத்தார்கள். அதன் முதல் கட்டமாக தான் மகிந்த ராஜபக்ச விலகினார்.பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி அரசுக்கு எதிராக இரண்டு கோரிக்கைகளை சமர்ப்பித்தது.

அது இரண்டு ராஜபக்ஷே சகோதரர்கள் இருவரும் பதவி விலக வேண்டும் என்பது தான்.அடுத்த இலக்கு ஜனாதிபதி பதவியின் அதிகார குறைப்பு. போராட்டக்காரர்களின் கோரிக்கை கிட்டத்தட்ட இதுதான்.இந்த இரண்டு கோரிக்கைகளையும் நிறைவேற்றினால் தான் ஐக்கிய மக்கள் சக்தி பிரதமர் பதவி ஏற்கும் என்று நிபந்தனை விதித்தது.ஆனால் இப்போது திடீரென்று ரணில் விக்ரமசிங்கே பிரதமர் பதவியை ஏற்றிருக்கிறார். இலங்கையின் முக்கிய தமிழ் பத்திரிகையான காலைக்கதிர் தனது தலையங்கத்தில் ரணிலின் டீல் என்று குறிப்பிட்டு இந்த பதவியேற்பை கண்டித்திருக்கிறது.ரணிலின் பதவியேற்பு வெண்ணை திரளும் நேரத்தில் தாழி உடைப்பு போன்று என்று சுட்டிக் காட்டி இருக்கிறது. கோத்தபயா ராஜினமா செய்வதற்குள் ரணில் ஏன் இந்த அவசர பதவியேற்பு இதுதான் இப்போது இலங்கையில் முக்கிய கேள்வி.

இலங்கையில் அரசியல் வரலாற்றில் எவரும் எதிர்கொள்ளாத நெருக்கடியை கோத்தபய்யா ராஜபக்சே எதிர்கொண்டு வருகின்றார். மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க ஜனாதிபதிக்கு இரண்டு வாரம் கெடு விதிக்கிறார்.அரசியல் முரண்பாடுகளைப் போக்கி ஒரு நிலையான அரசை உருவாக்க உங்களால் முடியவில்லை என்றால் நான் பதவி விலகுவேன் என்று எச்சரிக்கையை வெளிப்படையாகவே தெரிவிக்கிறார்.

2022041410053392.jpeg

ஒரு புறம் பிரதமர் விலகல் இன்னொரு அதிபர் பதவி விலகல் இப்படிப்பட்ட சூழ்நிலையில் பொருளாதார நெருக்கடியை சமாளிக்கஇதுவரை எந்த திட்டமும் இல்லை இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் ணில் விக்கிரமசிங்க பிரதமராக பொறுப்பேற்று இருக்கிறார்.குடும்ப ஆட்சிக்கு இலங்கை சொல்லும் பாடம் இப்போது பலருக்கு புரிய ஆரம்பித்து இருக்கிறது அதுவும் உண்மை.