தருமபுரம் ஆதீனத்தில் பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சி நடத்த அனுமதி மறுத்து மயிலாடுதுறை கோட்டாட்சியர் வெளியிட்ட ஆணை ரத்து என்று அவரே இன்னொரு ஆணை மூலம் தெரிவித்திருக்கிறார். இது ஏற்கனவே எதிர்பார்த்தது தான்.காரணம் அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு சட்டசபையிலும் சட்டசபைக்கு வெளியிலும் விரைவில் நல்ல செய்தி வரும் என்று திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டிருந்தார். இந்த ரத்து ஆணை வெளிவருவதற்கு முன்பாக சில ஆதீனங்கள் முதல்வரை சந்தித்து பேசினார்கள் அதைத்தொடர்ந்து அனுமதி ரத்து ஆணை ரத்தானது.
இதுபற்றி மதுரை ஆதீனம் செய்தியாளர்களிடம் பேசும்போது "தருமபுரம் ஆதீனத்தில் பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சியை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று முதல்வருக்கும் அறநிலை துறை அமைச்சருக்கும் கோரிக்கை வைத்தேன்.அவர்கள் ஆலோசனை செய்து பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சி நடத்துவதற்கு அனுமதி கொடுத்துள்ளார்கள். அவர்களுக்கு ஆசிகளை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று சொன்னவர் கூடவே வீரமணிக்கும் நன்றி சொன்னார் மதுரை ஆதீனம். வீரமணி இந்த பிரச்சினையை ஆரம்பிக்ககாவிட்டால் பட்டினப்பிரவேசம் என்றால் என்னவென்று யாருக்கும் தெரிந்திருக்காது. இன்றைய தினம் இது வெளிமாநிலங்களுக்கு எல்லாம் தெரிந்து விட்டது. இது சைவத்துக்கு இனிப்பான செய்தி என்று குறிப்பிட்டிருக்கிறார்.
ஆனால் வீரமணி தனது அறிக்கையில் திமுக ஆட்சியில் முற்போக்குக் கொள்கை திட்டங்களை மிரட்டிப் பணிய வைத்து முடக்கும் ஒரு காவி திட்டம் இது என்று குறிப்பிட்டு இருக்கிறார் நமக்குள்ள ஆதங்கம் திமுக ஆட்சிக்கு இப்படி ஒரு பின்னடைவை களங்கத்தை இந்த தடுமாற்றமுடிவு உருவாக்கிவிட்டதே என்பதுதான் என்று தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார் திராவிட கழகத் தலைவர் வீரமணி.ஆனால் திமுக இதைப் பற்றியெல்லாம் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை.
Leave a comment
Upload