தொடர்கள்
வலையங்கம்
வலையங்கம்

என்ன வழி என்று பாருங்கள்

20220420181902316.jpg
தமிழ்நாட்டில் 10, 11, 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு 5ஆம் தேதி தொடங்கி நடந்து முடிந்திருக்கிறது. இந்தப் பொதுத் தேர்வுகளை 1.18 லட்சம் பேர் எழுதவில்லை. இதற்கு பொருளாதார சிக்கல் காரணமாக மாணவர்கள் இடை நின்றதுதான் என்று அதிகாரிகள் சுட்டிக் காட்டுகிறார்கள். தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் பெற்றோர்கள் பள்ளிகல்விக்கு என்று பெரிதாக செலவு செய்ய வேண்டியதில்லை.சீருடை முதல் சைக்கிள் வரை லேப்டாப் மதிய உணவு இலவசப் புத்தகங்கள் பள்ளி இறுதியாண்டு வரை எல்லாமே இலவசம் தான்.


பெற்றோர்களுக்கு பள்ளிக் கல்வி என்பது பெரிய சுமை இல்லை.ஆனால் அதையும் மீறி பெற்றோர்களின் பொருளாதார சிக்கலுக்கு உதவ இந்த மாணவர்கள் கூலி வேலையோ அல்லது ஏதோ ஒரு வேலை செய்து அந்த குடும்பத்தின் பொருளாதார சிக்கலை தீர்க்க ஒரு காரண கருவியாக இருந்திருக்கிறார்கள்.அதேசமயம் எத்தனை ஆசிரியர்கள் எத்தனை கல்வி அதிகாரிகள் இப்படி தேர்வு எழுதாத மாணவர்களின் குடும்பங்களை சந்தித்து அவர்களின் பிரச்சனை என்ன என்று நேரில் பார்த்து பேசினார்களா என்பது தெரியவில்லை.இடைநிற்றல்க்கு காரணம் பொருளாதார சிக்கல் என்று ஆய்வில் தெரிந்தது என்பதை மட்டும் அதிகாரிகள் சொல்கிறார்கள்.
ஆனால் சென்ற இரண்டு ஆண்டுகளாக கரோனா லாக்டவுன் என்பதால் பள்ளிகள் சரிவர இயங்க முடியவில்லை . மாணவர்கள் ஆன்லைன் முலம் கல்வி பயின்று ஆன்லைனில் தேர்வு எழதினார்கள். இதில் பன்னிரெண்டாம் வகுப்பு தவிர மற்ற வகுப்புகள் மாணவர்கள் இறுதியாண்டு தேர்வில் ஆல் பாஸ் என தமிழக அரசு அறிவித்தது. தற்போது கரோனா லாக்டவுன் பிறகு பள்ளிகள் 6 மாதம் முன்பு திறக்கப்பட்டு வகுப்புகள் பாடங்கள் குறைக்கப்பட்டு இறுதியாண்டு தேர்வு நடக்கிறது. இந்த ஆண்டு இறுதியாண்டு தேர்வும் கரோனா புண்ணியம் கட்டி கொள்ளும் என்று நினைத்திருந்த சில மாணவர்களுக்கு இறுதியாண்டு தேர்வு வந்ததும் , என்ன செய்வது என்று தெரியாமல் தேர்விற்கு செல்லாமல் இருந்து விட்டனர் என்று விவரமறிந்த ஆசிரியர்கள் தெரிவிப்பது கசப்பான உண்மை
இந்த சிக்கலை தீர்க்க என்ன வழி இதுபற்றி உயர் அதிகாரிகள் கவனத்திற்கு அரசாங்கத்திற்கு இந்த பிரச்சனையை கொண்டு சென்றார்களா என்ற விவரங்கள் எல்லாம் தெரியவில்லை.இவர்கள் அனைவரும் தேர்வு எழுத விண்ணப்பித்தார்கள். ஆனால் தேர்வு எழுத வரவில்லை.அதனால் அதிகாரிகளுக்கு இந்த புள்ளி விவரம் தெரிந்திருக்கிறது. சென்னை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட தமிழக முதல்வர் கல்வியே குழந்தைக்கு பெற்றோர் தரும் உண்மையான சொத்து என்று பேசியிருக்கிறார். இப்போது அந்த சொத்து 1.18 லட்சம் குழந்தைகளுக்கு கேள்விக்குறியாகி விட்டது. இதை எப்படி சரி செய்வது என்ன வழி என்று பாருங்கள் முதல்வர் அவர்களே.