தொடர்கள்
கவிதை
மீட்போம் வாருங்கள் - லாவண்யா மணிமுத்து

20220420185540941.jpg

மீட்போம் வாருங்கள்
அறையை சுத்தம் செய்ய
பழைய சாமான் நகர்த்தையில்
கனத்த புத்தகம் கண்டேன்
எடுத்துப் பார்த்தால்
புகைப்பட ஆல்பம்
பக்கங்கள் புரண்டன
நினைவுகளும் தான்

ஊர்க்கோயில் திருவிழா
தாத்தா அம்மாச்சி
60 ஆம் கல்யாணம்
பள்ளிக்கூட போட்டோ
குடும்பமாய் ஸ்டுடியோவில்
இப்படிப் பல தருணங்கள்

அப்போதுதான் புரிந்தது
சுத்தம் செய்ய வேண்டியது
நம் நினைவக அறையும்
நம் மனதையும் என்று


தொலைந்த அந்த சிரிப்பை
மீட்டெடுக்க புறப்பட்டேன் நான் !!!
உடன் வருவீரோ??