தொடர்கள்
தொடர்கள்
காதல் பொதுமறை -100 காவிரி மைந்தன்

2022061321311891.jpg

20220613213201114.jpg

எத்தனைப் பரவசங்கள்! அத்தனை நவரசங்கள்!

20220701225056168.jpg
அன்பே!
விழியழகில் விழுந்தேனா? உந்தன் மொழியழகில் எழுந்தேனா?

உண்மையைச் சொல் என்றேன் உள்ளத்திடம்!

களவியல் துறை சார்ந்த கேள்வி என்பதனால் இதனைக் கவனத்துடன் கையாள வேண்டுமென்று உள்ளிருந்து ஒரு குரல் கேட்டது!

தேவதைபோல் தெய்வீகப் புன்னகையும் தென்றலைப்போல் சுகமான மென்மையையும் ஒருசேர வீசிச் செல்லும் என் காதல் மகராணியே!

கவிதை பரிமாறும் காதலர்கள் நாம் என்பதால் தமிழ்மணம் மட்டுமே நம் மனங்களை நிரப்பும்! உள்ளத்துச் சொல் எல்லாம் உணர்வுடனே பரிமாறி உவகை கொள்ளும் நம் இதயங்களில் இன்பம் சுகம் என்பதற்கான அர்த்தங்களே அலாதி!

ஏடெடுத்து எழுதிக்காட்ட பலமுறை முயன்றும் ஏதோ ஒரு சில எண்ண அலைகளை மட்டுமே எழுத்தாக்க முடிகிறது!

எனவேதான் மீண்டும் மீண்டும் மடல்கள் கடல்போல் விரிகின்றன! மனதைத் தொடுகின்றன! கற்பனை ராஜ்ஜியத்தில் கட்டிமுடித்திருக்கும் காதல் மாளிகையின் நீள அகலங்களைக் காட்டிலும் உயரமே விண்ணைத் தொடுகிறது!

மோகனம், ஆலாபனை, ஆராதனை என்கின்ற வார்த்தைகளை இப்போதெல்லாம் உனக்காக மட்டுமே உருவானவை என்று தோன்றுகின்றன!

கண்ணே! கலைமானின் விழிகாட்டும் காந்தக் கண்ணழகி உந்தன் மனமேடையில் மன்னன் நான் என்பதைவிட வேறென்ன வேண்டும் எனக்கு!

உன் செவ்விதழ்கள் வேண்டும்போதெல்லாம் தேன்வழங்கிட இருக்க.. நமக்குள் ஏதடி பிணக்கு? அலைமோதும் மனமெங்கும் சுகராகம் முழங்கிடும் இளவீணையல்லவா உந்தன் மேனி!

வலைபோட்டு பிடிக்காமல் வாழ்க்கை இனித்திட வந்தவள் அல்லவா இவளெந்தன் ராணி! உனக்கான பொருள் யாவும் எனையாளும் கண்ணாளா - கணக்கின்றி எடுத்துக் கொள் என்று நீயே சொன்ன பின்பும்!

கலைசிந்தும் எழில் அன்னம் இவளென்று ஆனபின்பு எனக்குள்ளே விளையாதோ மோகம்! பருவத்தின் பாலபாடம் முறையோடு தொடங்க வேண்டும் என்று காதோரம் ரகசியமாய் சொன்னவளே!

கைவிரல்கள் நுனியளவில் படும்போதே ஆசைவெள்ளம் அணைகடந்து பாய்கிறதே! மெய்கலந்து மேனிசிலிர்க்கும் வைபவத்தில் ஐய்யய்யோ .. எத்தனைப் பரவசங்கள்! அம்மம்மா.. அத்தனையும் நவரசங்கள்!

சிற்றன்ன வாசல் சித்திரம்போல் நீ சொக்கி நிற்க.. உன் சிங்கார வளைவுகளில் நான் சிக்கி நிற்க.. பற்றிப் படரும் கொடிபோல் நீயும் என் மார்பில் படர்ந்திருக்க.. கர்வம் ஏதுமில்லாமல் என் கலைராணி உன்னெழிலை என்னிடமே தந்திருக்க.. சிந்திய தேன்துளிகள் ஏராளம்!

சிருங்கார ரசம் கூட்ட இதழ்மதுவோ தாராளம்!

நள்ளிரவை நோக்கி நம் இரவு நகர்ந்திருக்க, நம் நான்கு விழிகளுமே நன்றாகச் சிவந்திருக்க.. கொள்ளையிட்ட காரணத்தால் செவ்விதழ்கள் நிறம்மாறி வெண்மையைச் சேர்ந்திருக்க..

இடையோடு கைதவழும் விளையாடல் தொடர்ந்திருக்க.. இன்பத்தை ஏந்திவரும் உன்னதமே! என் மனதை ஆட்சிசெய்யும் அஞ்சுகமே!

கண்ணசைவு ஒன்றுமட்டும் போதாதா உன் கட்டளைக்கு அடிபணியக் காத்திருப்பேன்! தொட்டு அணைத்து மகிழும்போதெல்லாம் இட்ட முத்தங்கள் எத்தனை? உன் பட்டுக் கன்னங்களைக் கேள்!

வெட்கம் விலகிய சில கணங்களில் நீ புரிந்த விந்தைகளை எண்ணிப் பார்! பக்கமிருந்து பலவிதமாய் பெற்ற விருந்துகள் எத்தனை?

பாவை உன்னிடம் கணக்கு உண்டா? மெளனத்தில் மூழ்கி நாணத்தில் திளைத்து நீ பட்ட பாடுகள் கொஞ்சமா? மற்றுமொரு ராத்திரி வரும்வரைக்கும் நீ மனதுக்குள் நடத்திடும் ஒத்திகைகள் பற்றி சொல்லட்டுமா?

மல்லிகைப் பூச்சரங்கள் கார்குழலில் சூட்டியபின் மணவாளன் தன்னைத்தான் சுற்றிவர வேண்டும் என்பவள் நீயல்லவா?

தங்கத்தாமரையே1 தளிர்மேனி எழில்காட்டும் என் அன்பு நிலாவே!

அந்திவானம் போல் சிவப்புடனே மின்னும் உன் அங்கங்களில் அடைக்கலமாகின்றேன் கொஞ்சம்!

அடடா.. அங்குதானே ஆரம்பம் மஞ்சம்!!