தொடர்கள்
கவிதை
அன்பாலானது உலகம் - லாவண்யா மணிமுத்து

20220705203419375.jpg

#அன்பாலானது உலகம்#

பூமியில் மனிதர்களை படைத்த கடவுள்
அன்பு என்ற சங்கிலியால் பிணைத்தான்

ஆனால் மாயாவி போல் வந்த பணம்
அந்தச் சங்கிலியை சுக்குநூறாக்கிவிட்டது

இந்த உலகில் அன்பை போல்
செய்வதற்கு எதுவும் இல்லை

அன்பால் நொறுக்குவதும்
அன்பால்
காரியமாற்றுவதும்
அன்பால் சாதிப்பதும்
அன்பால் சாதகமாக்குவதும்
அன்பால் சரித்திரமாக்குவதும்
மிக மிக எளிதா????

அன்பால் அனைத்தையும் வெல்லலாம்

ஆனால் உண்மையான அன்பு
கிட்டுவது அத்தனை எளிதல்ல
மிக மிக அரிது !!

ஆதலால்
அன்பைப் பருகுவோம்
அன்பைப் பகிர்வோம் !
அன்பாலே உலகம் அழகாகும் !!