தொடர்கள்
பொது
விகடகவி ஸ்வீட் காரம் காபி - டி.எஸ்.பி ஆகும் டீகடைக்காரர் பெண். மாலா ஶ்ரீ.

2022070607143795.jpg

முதல் முயற்சியிலேயே

டிஎஸ்பியாக தேர்வான டீக்கடைக்காரர் மகள்!

முதல் இரண்டு பெண்களையும் படிக்க வைக்காமல் திருமணம் செய்து கொடுத்து விட்ட வீரமுத்துவின் மூன்றாவது பெண் நன்றாக படித்ததால் சரித்திரம் படைக்கப்பட்டிருக்கிறது.

பவானியா.

கல்லூரி காலத்தில் பவானியாவுக்கு குரூப்-1 தேர்வில் வெற்றி பெற்று காவல்துறை உயர் அதிகாரியாக வரவேண்டும் என்ற லட்சியம், வேகம் இருந்தது. இதற்காக தனது உடல் திறனை வளர்த்துக் கொண்டார். தனது விருப்பத்தை தந்தை வீரமுத்துவிடம் தெரிவித்தார். அவரும் ஊராரின் பல்வேறு தடைகளை மீறி, பவானியாவை ஊக்குவித்தார்.

கடந்த 5-ம் தேதி வெளியான முடிவில், முதல் முயற்சியிலேயே பவானியா குரூப்-1 தேர்வில் வெற்றி பெற்றிருந்தார். இதன்மூலம் அவர் தமிழ்நாடு காவல் துறையில் துணை கண்காணிப்பாளர் (டிஎஸ்பி) பதவிக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.

பவானியா கூறுகையில், "எனது கனவு இதோடு நின்று விடவில்லை. இதற்குமேல் ஐஏஎஸ் படிக்க வேண்டும் என்று விரும்புகிறேன். அதிலும் முழு முயற்சியுடன் படித்து வெற்றி பெற்று ஐஏஎஸ் அதிகாரியாக வருவேன். எந்தவொரு பணியிலும் அதற்கென ஒரு கடமை உள்ளது. என்னால் முடிந்தளவு மக்கள் பணியில் சிறப்பாக செயல்படுவேன் என்பது உறுதி!" என்று நம்பிக்கை தெரிவித்தார்.

ஒரு பெண் படித்தால் சமுதாயமே படித்தது போல என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

மேலும் மேலும் பவானியாக்கள் உருவாகட்டும்.