தொடர்கள்
பொது
ஜெர்மன் டயரி - கவுல்ஸ்ட்டொர்ப்...விசிட். கார்த்திக் ராம்

20220706065211343.jpeg

வணக்கம், இந்த வாரம் கவுல்ஸ்டொர்ப் (Kaulsdorf) அப்படிங்கிற ஊருக்கு போயிருந்தேன்.

இது ஜெர்மனியின் மத்திய கிழக்கு பகுதியில இருக்கிற தூரிங்கியா (Thuringia) என்ற மாநிலத்துல இருக்கு. பிராங்க்பார்ட் விமான நிலையத்துல இருந்து சுமார் 300 கிமீ தூரத்துல இந்த ஊர் இருக்கு. போய் இறங்கிய உடனே ஒரு நல்ல மாற்றம் தெரிஞ்சுது, அதாவது மேற்கு ஜெர்மனியோ இல்ல தெற்கு ஜெர்மனியோ போய் பாத்தீங்கன்னா ஒரு வளர்ச்சி கண்கூடா தெரியும். அது பொதுவா கிழக்கு பகுதியில பயணிக்கும் போது அதிகமா தெரியாது.

சிதிலமடைஞ்ச ரயில் நிலையம், பழைய கட்டிடங்கள் பொதுவா தென்படும். அதே மாதிரி அதிகமா உற்பத்தி தொழிலோ இல்ல பெரிய ஆலைகளோ கிடையாது. எல்லாமே, மேற்கோ இல்ல தெற்கு பகுதியில தான் இருக்கு. ஆனா, அதை எல்லாத்தையும் மீறி ரெண்டு விஷயம் பளபளன்னு வச்சிருப்பாங்க

1) அந்தந்த ஊரோட அரண்மனை (பெரிய தில்லாலங்கடி அரண்மனையா இல்லாட்டாலும் ஒரு அளவுக்கு இருக்கு)

2) தேவாலயம். இந்த தேவாலயத்தை பத்தி ஒரு விஷயம் கண்டிப்பா சொல்லணும், இந்த ஊர்ல சட்டபடி நீங்க ஒரு கிருத்துவரா இருந்தா தேவாலய வரின்னு ஒன்னு கட்டியே ஆகணும். நீங்க, இந்தியரா இருந்தாலும் இருந்தாலும் ஒரு கிறுத்துவரா இருந்து, இந்த ஊர்ல வேல பாக்கும் போது உங்க சம்பளத்துல 10% தேவாலய வரி கட்டணும். அத வச்சுதான் அவ்ளோ பழமை வாய்ந்த தேவலையங்களை பராமரிக்கிறாங்க.

20220706065532597.jpeg

சரி அது இருக்கட்டும், நம்ம ஊர்ல ஏன் இதை செய்யக்கூடாதுன்னு தோணும், இல்லையா? எங்கோ இருக்கிற ஒரு குக்கிராமத்துல இருக்கிற ஒரு காட்டுக்கோயில்ல ஒரு உண்டி வச்சு அதுல வசூல் ஆகுதுன்னு தெரிஞ்சா உடனே அறநிலையத்துறையில இருந்து ஆள் வந்து ஆட்டைய போட்டுட்டு போயிர்ராங்க. அப்படி இருக்கிறப்ப 10% வரி போட்டா, காசு சேரும், ஆனா அது எங்க போகுதுன்னு தான் தெரியாது.

ஊழல் தல விரிச்சு ஆடும் இல்லையா? அதுக்கு நான் என்ன சொல்றேன்னா, ஒரு சின்ன கிராமத்துல வருஷா வருஷம் பராமரிப்பு விழா எடுத்து மக்கள் எல்லாரும் முன் வந்து இந்த மாறி காசு சேர்த்து நல்ல விஷயம் செய்யலாம். கோவில் நல்லா இருந்தா தானே ஊர் நல்லா இருக்கும்.

20220706065554652.jpeg

சரி இவளோ எடம் போறிங்களே தனியாவா போறீங்க, பயமா இல்லனு கேக்கறீங்களா? இல்லங்க ஒரு கூட்டமா தான் போரேன் (தானா சேர்ந்த கூட்டம் !). இந்த இடத்துக்கு என்கூட வந்தது ஒரு இந்தியர், இரானியர், அமெரிக்கர் மற்றும் ஒரு துருக்கியர். இந்த மாதிரி பயணிக்கும் போது அவங்க கிட்ட இருந்து வாழ்க்கை முறைகள், கலாச்சாரம், ஊர் அரசியல்னு பல விஷயங்கள் கத்துக்க முடியுது.

சரி, மீண்டும் அடுத்த வாரம் இன்னொரு எடத்த பாக்கலாம்...