தொடர்கள்
வலையங்கம்
வலையங்கம்

கேலிக்கூத்து

20220712071129380.jpg

சமீபகாலமாக ஆன்லைன் சூதாட்டத்தில் லட்சக்கணக்கில் பணம் இழந்து நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த குடும்பத்தலைவி காவலர் அலுவலக உதவியாளர் என்று பலர் தற்கொலை செய்து கொள்கிறார்கள். ஆன்லைன் சூதாட்டம் என்பது மிகப்பெரிய போதை அதிலிருந்து விடுபட முடியாமல் பணத்தை இழந்து தற்கொலைக்கு அந்த சூதாட்ட அவர்களை இழுத்துச் சென்று விடுகிறது.

இந்த சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும் என்று நிறைய பேர் குரல் கொடுத்தார்கள். தமிழக டிஜிபி கூட ஆன்லைன் சூதாட்ட விளம்பரத்தில் நடிகர்களை நடிக்க வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்தார். அதிமுக அரசு ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்து அவசர சட்டம் கொண்டு வந்தது சூதாட்ட நிறுவனங்கள் அந்த சட்டத்திற்கு தடை வாங்கி இருக்கிறது. திமுக ஆட்சிக்கு வந்ததும் தடை கொடுக்க முடியாத அளவுக்கு ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் விரைவில் கொண்டு வரப்படும் என்றார்கள். அது பேச்சளவில் இருந்தது ஒரு கட்டத்தில் தற்கொலை சாவு தொடர்ந்திட ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய அவர் சட்டம் கொண்டு வருவது பற்றி ஆலோசனை வழங்க நீதிபதி சந்துரு தலைமையில் ஒரு குழு அமைத்தது அந்தக் குழுவும் அரசிடம் அறிக்கையை தந்துவிட்டது.

இப்போது தமிழர் உள்துறைச் செயலாளர் ஆன்லைன் விளையாட்டு தொடர்பாக பொதுமக்கள் பெற்றோர் ஆசிரியர் மாணவர்கள் இளைய தலைமுறையினர் மற்றும் ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்களிடம் இருந்தும் கருத்து கேட்க தமிழக அரசு முடிவு எடுத்துள்ளது என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவித்திருக்கிறார். உள்துறைச் செயலாளர்கள் செய்திக்குறிப்பு உண்மையில் ஒரு கேலிக்கூத்து என்பது தான் உண்மை.

அவரே அந்த செய்திக்குறிப்பில் சமீபகாலமாக ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளில் ஏற்பட்ட நிதி நெருக்கடி காரணமாக 20 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். வரைமுறையற்ற ஆன்லைன் விளையாட்டுகள் கற்றல் குறைபாடு ஒழுக்க குறைபாடு ஏற்படுவதாக அரசுக்கு தெரியவந்துள்ளது என்று குறிப்பிட்டிருக்கிறார். இப்படி மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வதை விட்டுவிட்டு கருத்து கேட்க வேண்டிய அவசியம் என்ன இதைவிட மோசம் ஆன்லைன் சூதாட்டம் நடத்தும் நிறுவனங்களின் கருத்தையும் கேட்கப்படும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார். கோடிக்கணக்கில் பணத்தை சம்பாதிக்கும் அந்த நிறுவனங்கள் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யலாம் என்றா சொல்லும் .அரசுக்கு இந்த புரிதல் கூட இல்லாமல் இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது.

ஆன்லைன் சூதாட்டத்தை இந்த அரசு தடை செய்யாமல் இருக்கவே விரும்புகிறது என்பதைத்தான் அந்த அறிக்கை நமக்கு சொல்லாமல் சொல்கிறது. மக்கள் சீரழிவுக்கு மறைமுக கேடயமாக இருக்கவே இந்த அரசு விரும்புகிறதோ என்ற சந்தேகம் இப்போது எழுகிறது.

20220713064802132.jpeg