தொடர்கள்
தொடர்கள்
ஜெர்மன் டயரி - ஊர் எல்லைக் கோவில் - போட்டன்ஸ்டைன் கார்த்திக் ராம்

20220712235006965.jpeg

இந்த வாரம் போட்டன்ஸ்டைன் (Pottenstein) அப்படிங்கிற ஊருக்கு போயிருந்தேன். இந்த ஊர் பவாரியாவில் உள்ள பிராங்கோனியன் சுசர்லாந்து அப்படிங்கிற பகுதியில இருக்கு. பிரான்க்பர்ட் விமான நிலயத்தில இருந்து சுமார் 250 கிமீ தூரத்துல இந்த ஊர் இருக்கு. கார் ஓட்டிட்டு ஊருக்குள்ள போகும் போதே சொக்க வைக்கிற அழகு. ரோட்டுக்கு ரெண்டு பக்கமும் மலை, பச்சை பசேல்னு வானுயரத்துக்கு வளர்ந்து நிக்கிற பைன் மரங்கள், ரோட்டோரமா வளைஞ்சி வளைஞ்சி போகுற ஆறு, இப்படி சொல்லிகிட்டே போகலாம். சுருக்கமா சொன்னா, இதுதாண்டா அழகுன்னு இயற்கை பொளேர்ன்னு ஒரு அறை விட்டா வருமே, அப்படி ஒரு கிக்.

20220712235034529.jpeg

மனசுக்குள்ள நான், கருப்பு சாமி, இப்படி ஒரு ஊருக்கு இந்த கிராமத்தான அனுப்பி அழகு பாக்குறியே, எப்படி சாமி நன்றி சொல்லறது உனக்குன்னு நினைச்சுக்கிட்டேன். சரி, கருப்பு சாமின்னு சொல்லும்போது தான் ஒரு விஷயம் ஞாபகம் வருது, நம்ம ஊர்ல எப்படி நம்ம வயக்காட்டுக்குள்ள சாமி பது வச்சி அங்கங்க கும்பிடுவோமோ, அது மாதிரி இங்கயும் அங்கங்க கர்த்தரை வச்சிருக்காங்க. நம்ம எப்படி பயிர் செஞ்சிட்டு, சாமி இனிமேல உன் செயல்ன்னு விட்டுடுறமோ அதே மாதிரி தான் இங்கயும். பயபுள்ளைங்க ரொம்ப பயபக்தி பாருங்க. இது போக நடு காட்டுக்குள்ள ஒரு சின்ன கோவில் அதுக்குள்ள ரெண்டு பெஞ்ச் போட்டு உக்கார மாறி வசதி, அப்படியே கண்ண மூடி எங்க திருமனூர் காட்டு கோயிலுக்கு போன மாதிரி ஒரு அனுபவம். ரொம்ப யோசிச்சப்ப தான் இன்னொரு விஷயம் புரிஞ்சது.

20220712235114643.jpeg

அந்த காலத்துல, ஒரு ஊர்ல இருந்து இன்னொரு ஊர் நடந்து போதும் போது காடு மலை பாதையெல்லாம் கடந்து தான் போகணும். இங்க இருக்கிற காடுகள் பாத்தீங்கன்னா, பயங்கர அடர்த்தி. நல்ல வெயில் நாள்ல கூட ஒரு கதிர் உள்ள வரமுடியாது. யோசிச்சு பாருங்க, ஒருத்தன் இந்த வழியில தனியா போகும் போது எப்படி இருக்கும்னு, ஒரு குச்சி மரத்துல இருந்து விழுந்தா கூட அப்படியே கலங்கிரும். அங்க தான் கர்த்தர் வந்து நிக்கிறார். நடு நடுவில அவரோட சிலை சிலுவைல அறஞ்சி வச்சிருக்காங்க. பயந்து போன பயபுள்ளய பாத்து, "நீ போலே நான் பாத்துக்கிடன்" அப்படினு சொல்லற மாறி ஒரு செட்டிங். இத நான் ஏன் சொல்ரேன்னா, போட்டன்ஸ்டைன் சுத்தி இருக்கிற மலை காட்டு பாதைல ஒரு 15 கிமீ நானும் உலா வந்தேன், என்ன ஆட்கள் நெறையா நடமாடினாங்க, அதனால பெரிசா ஒன்னும் பயமில்ல.

20220712235144200.jpeg

சும்மா சொன்னேன் எனக்கும் கலக்கிருச்சு ஹீஹீ. இதெல்லாம் முடிஞ்சி ஒரு முழு வட்டத்துக்கு அப்புறம் திருப்பி போட்டன்ஸ்டைன் வந்து சேர்ந்தேன். ரொம்ப கஷ்ட பட்டு வேணாமுன்னு நினைச்சாலும், அந்த காபி வாசம், புதுசா செஞ்ச ரொட்டி, ஆப்பிள்கேக் வாசம் உள்ள இழுக்க ஒரு பேக்கரிகுள்ள புகுந்து சுட சுட ஒரு காபி ஒரு கேக் சாப்பிட்டிட்டு, கார்ல வந்தியத் தேவன் பாட்டு கேட்டுட்டே ஊர் வந்து சேர்ந்தேன்.

20220712235244866.jpeg

மீண்டும் அடுத்த வாரம் இன்னொரு சுவாரசியமான செய்யதியோடு.

20220713064802132.jpeg