தொடர்கள்
தொடர்கள்
ப்ராக்டிகல் சீரீஸ் – 22 ஹாப்பி இன்டிபெண்டென்ஸ் டே….  மாலா ரமேஷ்

20220713062811327.jpeg

ஏன் இங்கிலீஷ்ல வாழ்த்துன்னு யோசிக்காதீங்கப்பூ…இங்கிலீஷோ தமிழோ….சுத்திநடக்கிறது என்னன்னு புரிஞ்சாலே முதல் வெற்றி…இல்லையா?… இங்கிலீஷ்ல ஏன்தலைப்புன்னு பின்னாடி பாக்கலாம்…

ரொம்ப ரொம்ப ரொம்பப் பாடுபட்டு எத்தனையோ தலைவர்களும் தேசபக்தர்களும்தன்னோட சொந்த ஊரு, வீடு வாசல் , புள்ளக்குட்டி, சுக துக்கம், பசி, தூக்கம், தாகம், ஓய்வுன்னு எல்லாத்தையும் தூக்கிப் போட்டுட்டு…இன்னொருத்தன் கிட்ட எதுக்காக இப்படிகொத்தடிமைகளாக் கிடந்து, நம்ம உரிமைகளை இழந்து , தினம் தினம் செத்துபொழைக்கணும்…? இது நம்ம உரிமை..இதை நாமதானே மீட்டு எடுக்கணும்னு ராவும் பகலும்கஷ்டப்பட்டு வாங்கின சுதந்திரத்தோட மதிப்பு நமக்குத் தெரியணும் இல்லையா…?

கஷ்டப்பட்டு மேல வந்தவங்களுக்கு காசோட மதிப்பு தெரியற அளவுக்கு, ஆரம்பத்துலயேகாசு பாத்தவங்களுக்கு காசோட மதிப்பு தெரியாதுன்னு சொல்லுவாங்க….அது போல, இன்னைக்கு நினச்சதை செய்யறதுக்கும் பேசறதுக்கும் நமக்கு உரிமை இருக்கிறதால, இந்தஉரிமை மறுக்கப்பட்டபோது இருந்திருக்கக்கூடிய வேதனைகள மறக்கக்கூடாது.

சில நேரங்கள்ள இப்போ இருக்கிற சில இளைஞர்கள் கிட்ட , என்னைக்கு நம்ம நாட்டோடசுதந்திர தினம்னு கேட்டு, அவங்க பேய் முழி முழிச்சிட்டு ஸ்டைலா உளறிக்கொட்டற சிலவீடியோலாம் பாக்கும்போது….ரொம்பவும் கோவமாவும் வருத்தமாவும் இருக்கும்…சுதந்திரதினத்துக்கும் குடியரசு தினத்துக்கும் வித்யாசம் தெரியாம…., எது, என்னைக்கு, எந்த மாசம்,எந்த தேதின்னுகூட தெரியாம…, தேசியக்கொடில இருக்கக்கூடிய சக்கரத்தப்பத்திக்கேட்டாலோ…அல்லது நம்ம கரன்சியப் பத்திக்கேட்டாலோ…அல்லது தேசியசின்னத்தப் பத்திக்கேட்டாலோ….நாடு சம்பந்தப்பட்ட பேசிக்கான விஷயம் கூடதெரியறதில்ல….ஏதோ காமெடிக்குக் கேக்கற மாதிரி பாக்கறதும், சீன் போடறதும்…ஸ்டைலாபேசறதும்….அப்பப்பா….

சரி விடுங்கப்பூ….ஆனா, இவங்கள்ள பல பேரு ரோடு சரியில்ல…லைட்டு எரியறதில்ல…தண்ணி கிடைக்கல…. கவர்மெண்ட் சரியில்ல…(அது ஸ்டேட்டோசென்ட்ரலோ….அதெல்லாம் பிரச்சினையில்ல…ஆனா சரியில்ல)மொத்தத்துக்கு எதுவுமேசரியில்ல….அமெரிக்கா அப்படி இருக்கும்…ஆப்பிரிக்கா இப்படி இருக்கும்…சிங்கப்பூருசிங்கம்….ஜப்பான் புலி…ன்னு கலர் கலரா ரீல் சுத்தறதத்தான் தாங்கவே முடில…இதுல பாதிபேரு எலெக்ஷன் வந்தா லைன்ல நின்னு ஓட்டுக்கூட போடறதில்ல…வாய் மட்டும்… காஷ்மீர்லேந்து கன்யாகுமரி வரைக்கும் நீளும்….

சரி….இப்ப அந்த இங்கிலீஷ் வாழ்த்து தமிழ் வாழ்த்து விஷயத்துக்கு வருவோம்…..முன்னகவர்மெண்ட் ஸ்கூல் மட்டுமே அதிக அளவுல இருந்துச்சு…அதுலயும் ஒன்லி தமிழ்மீடியம்….அதுக்குப் பிறகு இங்கிலீஷ் மீடியம் வந்துச்சு…..அப்ப ஸ்கூல்ல நாட்டுப்பற்றுன்றதுரொம்ப முக்கியமா பார்க்கப்பட்டுச்சு….தினமும் ஸ்கூல் அச்செம்பிளி, ரெகுலரா சர்வ சமயபிரார்த்தனைகள், வாராவாரம் திங்கட்கிழமை கொடியேத்தறது…..முக்கியமான நாட்கள்ளஎல்லா மாணவர்களும் ஸ்கூல் நிகழ்ச்சிகள்ள பங்கேற்கிறது…இப்படி எத்தனையோ….

ஆனா, இப்போ நிறைய பள்ளிகள் இங்கிலீஷ் மீடியத்துல மட்டுமே இருக்கிறதால, குழந்தைகள் எந்த மொழில வாழ்த்து சொல்றாங்கன்றதவிட, இதை மகிழ்ச்சியாசொல்லறதே நமக்கு ஒரு சந்தோஷம்…

இப்ப இருக்கிற இந்த தலைமுறை குழந்தைகளுக்கு பொறுப்புணர்ச்சியஉருவாக்கவேண்டியது பள்ளிக்கூடத்தோட கடமை மட்டுமில்ல….அது பெத்தவங்களுக்குமானகடமைதான்….

நம்ம நாட்டை விட்டுகொடுத்து எங்கேயும் பேசக்கூடாது…நம்மோட நாட்டு ஜனத்தொகைரொம்ப அதிகம்….இதுல நம்ம அடஞ்சிருக்கிற முன்னேற்றத்த குறைச்சுப் பேசகூடாது… இத்தனை மக்களுக்கும் பெருமையா சொல்லிக்கவும் சொந்தம் கொண்டாடவும் ஒரு தேசம்இருக்குது….நம்முடைய அண்டை நாட்டுலேந்து எத்தனை பேர் அநாதைக் குழந்தைகளைப்போல அகதிகளாப் போய் உலகத்தோட எத்தனை நாடுகள்ள வாழ்ந்துட்டு இருக்காங்கன்றதுதெரிஞ்ச விஷயம்தான்….

நம்முடைய பொன்னான சுதந்திரத்தைப் பேணிக் காத்து …பொறுப்புணர்வோடவாழ்ந்து….நமக்கு முழு உரிமையோட வாழ வழி காட்ற இந்த மண்ணுக்கு நம்மால் முடிந்தபங்களிப்பைக் கொடுக்கணும்னு உறுதி ஏத்துப்போம்….

தேசியக்கொடி எங்கும் பறக்கட்டும்……எழுச்சி மிக்க இந்தியா உருவாகட்டும்…

அனைவருக்கும் சுதந்திரதின நல்வாழ்த்துகள்….

அடுத்த பகுதியில் பார்க்கலாம்…