தொடர்கள்
சினிமா
சினிமா சினிமா சினிமா - லைட் பாய்

20220824092849723.jpg

தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளில் தனுஷ் நடித்த வாத்தி படம் டிசம்பர் 2ஆம் தேதி வெளியாகும் என தயாரிப்பாளர் தரப்பு செய்தி வெளியிட்டது, ஆனால் தனுஷ் வாத்தி படம் பற்றி எந்த செய்தியையும் தனது சமூக வலைத்தளத்தில் எந்த செய்தியையும் படம் ரிலீஸ் உள்பட எதையும் பதிவு செய்யவில்லை காரணம் தன்னிடம் சொல்லாமல் ரிலீஸ் தேதியை அறிவித்து விட்டார்கள் என்ற கோபம்தான். இதனிடையே வாத்தி இதுவரை ரிலீஸ் செய்வதற்கான வியாபாரம் சரியாக நடக்கவில்லை. ரேட் படியவில்லை என்ற பேச்சு இப்போதைக்கு டாபிக்கல்.

அரசியல் எல்லாம் வேண்டாம்

20220824092950528.jpg

மீண்டும் நடிக்க வந்த நடிகர் வடிவேலு பழையபடி பல படங்களில் நடித்துக்கொண்டு பிஸி நடிகராக மாறி விட்டார். சில தினங்களுக்கு முன்பு திருச்செந்தூருக்கு சாமி கும்பிட வந்த வரை வெளியே வந்ததும் நிருபர்கள் சூழ்ந்து கொண்டு கேள்வி கேட்டனர் அதில் மிக முக்கிய கேள்வி மீண்டும் அரசியலுக்கு வருவீர்களா என்பதுதான் அதற்கு நடிகர் வடிவேலு பதட்டப்படாமல் அரசியல் நமக்கு எதுக்கு அண்ணே இப்ப நடிச்சுகிட்டு ஜனங்களை சந்தோஷமாக வைக்கிறோம் தமிழ்நாட்டுல இப்ப ஆட்சி நல்லாத்தானே இருக்கு என்று சிரித்து சமாளித்து விட்டார்.

இந்த வார ரிலீஸ் படங்கள்

20220824093253304.jpg

பபூன் அசோக் வீரப்பன் இயக்கம் வைபவ் நாயகன் இது தவிர நரேன் உள்பட பலர் நடித்திருக்கிறார்கள் 23ஆம் தேதி இந்தப் படம் வெளியானது.

20220824093351876.jpg

ட்ரிகர் இது அதர்வா நடித்த படம் அவளுடன் தான்யா ரவிச்சந்திரன் நடித்திருக்கிறார் இந்தப் படமும் இந்த வாரம் வெளியாகிறது.

20220824093330105.jpeg

ஆதார் ராம்நாத் இயக்கம் கருணாஸ் நடிப்பில் உருவானது வணிக அரசியலை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது.

இதுதவிர டிராமா, குழலி, ரெண்டகம் ஓர் மகாகாளி சட்டம்பி கிருஷ்ணா விருத்த விகாரி என்றும் மலையாள தெலுங்கு படங்கள் ரிலீஸ் ஆகி இருக்கிறது.

இது போதாதென்று ஒடிடீயில் டைரி பவுன்சர், திருச்சிற்றம்பலம், ஃபர்ஸ்ட்டேஃபர்ஸ்ட்ஷோ லைகர் போன்ற படங்களும் வெளியாகியிருக்கின்றன. தமிழ் சினிமா இப்போது சூடு பிடிக்க ஆரம்பித்திருக்கிறது.

நித்தம் ஒரு வானம்

20220824093438845.jpg

அறிமுக இயக்குனர் கார்த்திக் இயக்கும் நித்தம் ஒரு வானம் திரைப்படத்தின் டீசர் வெளியானது. இந்தப் படத்தில் அசோக் செல்வன் மூன்று வேடங்களில் நடித்திருக்கிறார் இது முழுக்க முழுக்க காதல் படம் போல் தெரிகிறது என்று டீசர் பார்த்துவிட்டு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார் இயக்குனர் அட்லி.

சமந்தாவின் சாகுந்தலம்

20220824093553633.jpg

நடிகை சமந்தா சாகுந்தலம் என்ற புராணப் படத்தில் நடிக்கிறார். தற்சமயம் இந்த படம் ரிலீசுக்கு தயாராகி விட்டது. நவம்பர் 4ஆம் தேதி இந்தப் படம் ரிலீஸ் தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் இந்தி என்ற ஐந்து மொழிகளில் இந்த படம் வெளியாக இருக்கிறது. சமந்தாவிற்கு இந்த படத்தில் ஜோடி நடிகர் தேவ்மோகன் இவர்களுடன் சேர்ந்து அதிதி பாலன் பிரகாஷ் ராஜ் கௌதமி மதுபாலா மோகன்பாபு ஆகியோர் நடித்துள்ளார்கள்.