1).வரலாற்றை ஆங்கில ஆசிரியர்கள் திருத்தி எழுதி விட்டார்கள் என்ற குற்றச்சாட்டு உண்மையா?
வரலாறு வெற்றி பெற்றவர்களால் எழுதப்படுவது. சீன வரலாற்றில், இந்தியா எல்லை தாண்டி மோதியதாகத்தான் எழுதப்பட்டிருக்கும்.ஸோ, வரலாறை அட்லீஸ்ட் முக்கால்வாசி தான் நம்பலாம்!
2). இடுக்கண் வருங்கால் நகுக என்றார் வள்ளுவர். அவருக்கு இடுக்கண்ணே வந்திருக்காது போலும். ?? நகுவது சாத்தியமா என்ன ரொம்ப கஷ்டமா இருக்கு சார்.
மனிதனின் ஆர்வம் தான் காரணம்!
3).நீங்கள் நினைத்து போகமுடியாத கனவு தேசம் எது?
வேற்று மனிதர்கள் வசிக்கும் இன்னொரு கிரகத்திற்கு போய்விட்டு வந்து, ஒரு பயண கட்டுரை எழுத வேண்டும் என்பதுதான் என் ஆசை. நடக்கிற காரியமா?
4). தமிழ்நாட்டை இரண்டாக பிரிப்பது பற்றி உங்கள் கருத்து ?
நூறாண்டுகள் ஆகலாம். ஆனால் அது தேவையானது அல்ல என்று நினைக்கிறேன். நாட்டில் முன்னேற்றம் அடைய வேண்டிய கிராமங்களே லட்சக்கணக்கில் இருக்கின்றன.
5). கார்ட்டூனிஸ்ட்/பத்திரிக்கையாளர் ஆக வராமல் இருந்திருந்தால் வேறு எந்த துறையில் நீங்கள் ஈடுப்பட்டிருப்பீர்கள்?
சினிமாவில் இயக்குனராக முயற்சித்து இருப்பேன் சினிமா தப்பித்தது.
தொகுப்பு: வேங்கடகிருஷ்ணன்
வாசகர்கள் தங்கள் கேள்விகளை மதன் சாருக்கு அனுப்ப வேண்டிய இ-மெயில் முகவரி: info@vikatakavi.in
Leave a comment
Upload